தீர்வு

எஸ்.ராஜாசெல்லம்

பளிச்... பளிச்...

5 அடி இடைவெளியில் நட்டால் 29 டன்.
மின் பற்றாக்குறைக்குத் தீர்வு.
கிராமப்புறப் பொருளாதாரம் உயரும்.

இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் கடுமையான மின் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. தமிழகத்தில் இதன் பாதிப்பு மிகமிக அதிகம். இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய அனல் மின் நிலையங்களுக்கான பணிகள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ''தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவித்து, அந்த மரங்களைப் பயன்படுத்துவதன் மூலமே மின்உற்பத்தியைப் பெருக்க முடியும்'' என்ற யோசனைகளை முன் வைக்கிறார் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியும், மாநில திட்டக்குழுவின் முழுநேர உறுப்பினருமான குமாரவேலு ஐ.எஃப்.எஸ்.

''அணு மின் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கும், மனிதகுலத்துக்கும் அதிகப்படியான தீங்கு விளைவிக்கக் கூடியவை. நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களும் சூழலுக்குக் கேடாகத்தான் இருக்கின்றன. இவற்றுக்குப் பதிலாக விறகுகள் மற்றும் தாவரக் கழிவுகளை எரித்து மின் உற்பத்தி செய்யும் மர மின் நிலையங்களை அதிகளவில் அமைத்தால்... நிறைவான மின்சாரம் தயாரிப்பதோடு, சூழல்கேடுகளுக்கும் தீர்வு கிடைக்கும்... கிராமப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்பதுதான் எனது திட்டம்'' என்று சொல்லும் குமாரவேலு அதைப் பற்றி விரிவாகவே பேசினார்.

தரிசு நிலத்தில் மலைவேம்பு!

''இந்தத் திட்டத்துக்கு மிகவும் பொருத்தமாகப் பயன்படக் கூடியது மலைவேம்பு மரங்கள்தான். இவை, குறைந்த நாட்களில் அதிக விறகுகளைக் கொடுக்கக் கூடியவை. இந்த மரங்களை தமிழகத்தில் தரிசாகக் கிடக்கும் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் நடவு செய்து விட்டால், மூலப்பொருட்கள் பிரச்னை இருக்காது. மலைவேம்பு மரங்களை வளர்த்து லாபமடைவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி, ஒப்பந்த அடிப்படையில் மலைவேம்பு நடவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மின் நிலையம் அமைப்பதில் விவசாயிகளையும் பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் மூலப்பொருள் கிடைப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஏக்கருக்கு

87,500!

நடவு செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆன மலைவேம்பு விறகுதான் மர மின் நிலையங்களுக்கு மிகவும் உகந்தது. ஒன்றரை ஆண்டில், ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 35 டன் விறகு கிடைக்கும். இன்றைய சந்தை மதிப்புப்படி ஒரு டன் விறகு 2,500 ரூபாய்க்கு விற்றாலும், ஒரு ஏக்கர் மூலம் 87,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆண்டு முழுக்க வேலை தர முடியும்.

ஒரு மெகாவாட் திறன் கொண்ட அணு மின் நிலையம் அமைக்க, 11 கோடி ரூபாய் தேவை. ஆனால், அதே திறனுள்ள மர மின் நிலையம் அமைக்க 4 கோடி ரூபாய் போதுமானது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மர மின் நிலையத்தை அமைக்கலாம். ஒன்றியங்கள் வாரியாக மின் நிலையத்தை அமைக்கும்போது மின்சாரத்தை அந்தந்தப் பகுதியிலேயே தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யலாம். இதன்மூலம், மின்சாரத்தை கம்பி வழியாக அதிக தூரம் கொண்டு செல்வதால், ஏற்படும் மின்இழப்பை முற்றிலும் தவிர்க்கலாம்.

புவி வெப்பமாதலும் குறைவு!

தமிழகத்தில் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்டு அனல் மின்நிலையங்கள் மூலமாக ஆண்டுக்கு 5,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு சுமார் 500 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலக்கிறது. மர மின் நிலையங்களிலும் அதே அளவு கரியமில வாயுதான் வெளியேறும். என்றாலும், அவை அந்தந்தப் பகுதிகளில் வளர்க்கப்படும் மலைவேம்புக் காடுகளால் உறிஞ்சப்பட்டு விடும். அறிவியல் அடிப்படையில் மரங்களின் மூலம் நடைபெறும் 'கார்பன் நியூட்ரல்’ என்ற இந்தப் பணி, புவி வெப்பமயமாதலைத் தடுக்கும்'' என்ற குமாரவேலு,

தினசரி

5 லட்சம் வருமானம்!

''10 மெகாவாட் திறன் கொண்ட மர மின் நிலையம் மூலம் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் கிடைக்கும். உள்ளூர் தேவைக்குப் போக உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்று அரசுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தலாம். ஆள் பற்றாக்குறையால் மாநிலம் முழுக்க பெருமளவு நிலப்பரப்பு தரிசாகத்தான் கிடக்கிறது. அதில் பரவலாக சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் மலைவேம்பை நடவு செய்தாலே, திட்டத்தை நூறு சதவிகிதம் நிறைவாகச் செயல்படுத்திவிட முடியும்.

சூழலைக் கெடுக்காததும், பொருளாதார ரீதியில் லாபம் தரக்கூடியதும், கிராமங்களை வாழ வைக்கக் கூடியதுமான இந்தத் திட்டத்தை அரசு உடனே கையில் எடுத்தால், அனைவருக்கும் நல்லது'' என்று வேண்டுகோள் வைத்தவர், மலைவேம்பு சாகுபடி நடக்கும் இடங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்றார்.

5 அடிக்கு 5 அடி இடைவெளியில் அதிக மகசூல்!

ஈரோடு மாவட்டம், பவானி தாலூகா, அம்மாப்பேட்டை ஒன்றியம், வெள்ளித்திருப்பூர் பகுதியில் குமாரவேலுவின் அறிவுறுத்தலின்படி நூற்றுக்கணக்கான ஏக்கரில் மலைவேம்பு சாகுபடி நடந்து வருகிறது. சென்னம்பட்டி கிராமத்திலுள்ள நாச்சிமுத்து மற்றும் முருகேசன் ஆகிய இரண்டு விவசாயிகளின் மலைவேம்புத் தோட்டங்களில் நான்கு அடிக்கு நான்கு அடி முதல் ஏழு அடிக்கு ஏழுக்கு அடி வரை நான்கு விதமான இடைவெளிகளில் இருவரும் தலா ஒரு ஏக்கரில் மலைவேம்பை நடவு செய்திருந்தனர். நடவு செய்து சரியாக ஓராண்டு முடிந்திருந்த இந்த மரங்களை அறுத்து எடை போட்டு அடுக்கி வைத்திருந்தனர். நான்கு அடி இடைவெளியில் நடப்பட்ட வயலில் ஏக்கருக்கு 27 டன் விறகும், ஐந்து அடி இடைவெளியில் ஏக்கருக்கு 29 டன் விறகும், ஆறு அடி இடைவெளியில் 27 டன் விறகும், ஏழு அடி இடைவெளியில் 21 டன் விறகும் கிடைத்திருந்தன.

ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!

''ஏற்கெனவே 'பசுமை விகடன்'ல 'மலைக்க வைக்கும் மலைவேம்பு'னு குமாரவேலு பேட்டிக் கொடுத்திருந்தாரு. அதை படிச்சிட்டுத்தான் மலைவேம்பு நட்டோம். ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. ஆனா, 'இது லாபகரமான பயிர்'னு மத்தவங்களுக்கு உத்திரவாதம் கொடுக்கிற அளவுக்கு இப்போ தெளிவடைஞ்சுட்டோம்'' என்றார்கள் நாச்சிமுத்துவும் முருகேசனும்.

அவர்களைத் தொடர்ந்த குமாரவேலு, ''சோதனை முயற்சியாக இடைவெளிகளைக் கூட்டிக் குறைத்து நடவு செய்து பார்த்ததில் ஐந்துக்கு ஐந்து அடி இடைவெளியில் அதிக மகசூல் கிடைத்திருக்கிறது. நன்றாக பராமரிக்கும் ஒரு ஏக்கர் மலைவேம்பில் இருந்து குறைந்தபட்சம் 21 டன் மகசூல் எடுக்க முடியும், என்பதற்கு இவர்களது தோட்டமே சாட்சி'' என்றவர்,

''மரமின் நிலையங்களுக்கு மட்டுமல்ல... தீப்பெட்டி, பிளைவுட் தயாரிப்பு போன்ற தேவைகளுக்கும் முக்கியமாக பயன்படுகிறது. எனவே, இதன் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இதை மனதில் வைத்து விவசாயிகள் அதிகளவில் மலைவேம்பு நடவு செய்ய முன்வர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

படங்கள்: க. தனசேகரன்
தொடர்புக்கு
நாச்சிமுத்து, அலைபேசி: 94434-24225.
முருகேசன், அலைபேசி: 94430-58259

இப்படித்தான் வளர்க்க வேண்டும், மலைவேம்பு!

விறகுக்காக மலைவேம்பு வளர்ப்பது குறித்து நாச்சிமுத்து மற்றும் முருகேசன் ஆகியோர் சொல்லும் தொழில்நுட்பங்கள்...

'விறகுக்காக மலைவேம்பு வளர்ப்பதாக இருந்தால், ஏக்கருக்குச் சராசரியாக 1,000 மலைவேம்புக் கன்றுகளை நடலாம். இரண்டு மீட்டர் இடைவெளியில் இரண்டு அடி ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும் (ஒரு குழி எடுக்க ஐந்து ரூபாய் செலவாகும்). ஒவ்வொரு குழியிலும் 200 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை இட்டு, குழியை மூடி கன்றுகளை நடவு செய்யவேண்டும். நடவு செய்த மூன்றாவது மாதத்தில் குழிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் செடிகள் சாயாமல் நேராக வளரும்.

வயல்கள் வடிகால்வசதி உடையதாக இருப்பது மிகவும் அவசியம். சொட்டுநீர்ப் பாசனம்தான் மிகவும் உகந்தது. முதல் நான்கு மாதம் வரை கன்றுகளை ஒட்டி சொட்டுநீர்க் குழாய்களை போட வேண்டும். பிறகு இரண்டு வரிசைகளுக்கும் நடுவில் குழாய்களை நகர்த்திப் போட வேண்டும். செடியின் அடிப்பகுதியில் அதிக ஈரம் இருந்தால், பலமான காற்று வீசும்போது கன்றுகள் சாய்ந்து விடும். இப்படிக் குழாய்களை நகர்த்திப் போடுவதன் மூலம் அதைத் தவிர்க்கலாம். வாய்க்கால் மூலமாகப் பாசனம் செய்தாலும், இதே முறையைத்தான் கையாள வேண்டும். ஒரு ஏக்கரில் வாழை, கரும்பு, மஞ்சள்... போன்றவற்றை சாகுபடி செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீரைக் கொண்டு... 10 ஏக்கரில் மலைவேம்பு சாகுபடி செய்து விடலாம்.

மலைவேம்பு மரத்திலிருந்து நிலத்தில் விழும் இலைகள் மக்குவதால், மண்ணில் தழைச்சத்து அதிகமாகும். முதல் மாதமே செடிகளில் பக்கக் கிளைகள் வளர ஆரம்பிக்கும். 15 அடி உயரத்துக்கு வளரும் வரை தொடர்ந்து கிளைகளின் கொழுந்துகளை நகத்தால் கிள்ளிவிட வேண்டும். உயரமாக வளர்ந்துவிட்டால், செடியை வளைத்துக் கிள்ளக் கூடாது. ஏணியை வைத்துத்தான் கிள்ள வேண்டும். 16 அடிக்கு மேல வளரும்போது... அடுத்தடுத்து வரக்கூடிய நான்கு அல்லது ஐந்து கொழுந்துகளை விட்டுட்டு, உச்சிக் கொழுந்தைக் கிள்ளிவிட வேண்டும்.

தோப்பில் நிழல் கட்டும் வரை களைகளைப் பறிக்க வேண்டும். கண்டிப்பாக ஊடுபயிர் செய்வதையும், உழவு ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.'

குறைந்த விலையில் தரமானக் கன்றுகள்!

'தனியார் நாற்றுப் பண்ணைகளில் மலைவேம்புக் கன்றுகளை அதிக விலைக்கு விற்கிறார்கள், அதேநேரத்தில் கன்றுகள் தரமானதாக இல்லை' என்ற குற்றச்சாட்டு பரவலாக இருப்பது பற்றி கேட்டபோது, ''இதற்கு ஒரு தீர்வை தரப்போகிறது கரூர் மாவட்டம், புகளூரில் செயல்படும் தமிழக அரசின் காகித ஆலை (டி.என்.பி.எல்)'' என்று சொன்ன குமாரவேலு,

''இந்நிறுவனத்தில் நான் சிலகாலம் பணியாற்றினேன். அப்போது அங்கிருந்த தாவர நிபுணர்கள் குழுவிடம் தரமான மலைவேம்புக் கன்றுகளை உற்பத்தி செய்து தரும்படி கேட்டேன். பலகட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு விதையில்லாப் பெருக்கம் என்ற ரீதியில் குளோனிங் முறையில் லட்சக்கணக்கானக் கன்றுகளை ஆய்வகத்தில் உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த முறையில் உருவாகும் கன்றுகள் தலா ஐந்து ரூபாய் என்ற விலையில் விரைவில் அந்த நிறுவனம் மூலமாகவே விற்பனைக்கு வர உள்ளது'' என்று சொன்னார்.