இயற்கை

மசானோபுஃபுகோக்கா

''வயலில் வைக்கோலைப் பரப்பி வைக்கும் வைக்கோல் மூடாக்கு அவசியமா?''

-இந்தக் கேள்விதான் என்னிடம் அதிகமாகக் கேட்கப்படுகிறது.

என்னுடைய நெல் மற்றும் குளிர்கால தானிய வெள்ளாமையில் இந்த மூடாக்குதான் ஆதாரமானதாக இருக்கிறது. நிலத்தை வளமாக்குகிறது; விதையின் முளைப்புத் திறனைக் கூட்டுகிறது; களைகளைக் கட்டுப்படுத்துகிறது; விதைகளை பறவைகளுக்குக் கிட்டாமல் செய்கிறது; நீர் ஆவியாவதைத் தடுக்கிறது என இத்தனைச் செயல்களும் நடப்பதால்தான், 'வைக்கோல் மூடாக்கு முக்கியம்' என்கிறேன்.

ஒகயாமா ஆய்வு மையம், தன்னுடைய 80% ஆய்வு வயல்களில் நேரடி நெல் விதைப்பை முயற்சித்தது. வைக்கோலைத் துண்டு துண்டுகளாக்காமல், முழுத் தாளாக பரப்ப வேண்டும் என்பது என் அனுபவம். அந்த மையத்தில் துண்டாக்கப்படட்ட வைக்கோல் இட்ட வயல்கள், முழு வைக்கோல் இடப்பட்ட வயல்கள் மற்றும் எவ்வகையிலும் வைக்கோல் இடப்படாத வயல்கள் எனப் பிரிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்தன. சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆய்வு மையத்தைப் பார்வையிடச் சென்றபோது முழு வைக்கோல் இடப்பட்ட வயல்தான் நன்றாக இருந்தது.

யாசுகி விவசாய உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் பியூஜி, நேரடி நெல் விதைப்பு பற்றி அறிந்து கொள்ள எனது பண்ணைக்கு வந்திருந்தார். வைக்கோலை துண்டாக்காமல் முழு தாளாகவே வயல் முழுவதும் பரப்பும்படி தெரிவித்தேன். அடுத்த ஆண்டு மீண்டும் வந்தவர், தனது சோதனை தோல்வி அடைந்து விட்டதாகத் தெரிவித்தார். அவர் எப்படி எப்படியெல்லாம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினார், என்று கவனமாகக் கேட்டேன். ஜப்பானிய புழக்கடைத் தோட்டத்தில் செய்வது போல, வைக்கோலை கற்றைகளாக்கி வரிசை வரிசையாக பரப்பி வைத்ததை அறிந்தேன்.

இதில்தான் தவறு நேர்ந்திருக்கிறது. நீங்கள் இவ்விதமாகச் செய்தால், விதைகள் நன்கு முளைக்காது. நெல் விதைகள் முளைத்து, தாள்களின் ஊடாக முட்டி தலை வெளியே வர சிரமப்படும். வைக்கோல் தாள்கள் இயற்கையாக விழுந்தால், எப்படி இருக்குமோ... அதுபோல இருக்கும் வகையில் எல்லாத் திசைகளிலும் இறைத்து விடுவதே சிறந்தப் பலனைக் கொடுக்கும்.

நெல்லின் வைக்கோல், குளிர்கால தானியப் பயிர்களுக்கு நல்ல மூடாக்காக இருக்கும். அதுபோலவே, குளிர்காலப் பயிரின் தாள்கள், நெல் பயிருக்கு நன்கு உதவுகின்றன. நெல்லில் இருக்கும் பல நோய்கள், நெல்லின் புது வைக்கோலை நெல்லுக்கே பரப்பும்போது அப்பயிரைத் தாக்கும். ஆனால், குளிர்கால தானியப் பயிர்களுக்கு நெல் வைக்கோலைப் பரப்பும்போது, நெல்லின் இந்த நோய்கள் அவற்றைத் தாக்காது. குளிர்கால தானியத்துக்கு இறைத்துப் பரப்பப்பட்ட நெல்லின் வைக்கோல்; இளவேனில் காலத்தில் நெல் முளைக்கும்போது நன்கு மக்கியிருக்கும். ஆக, நெற்பயிரின் புதிய வைக்கோல்... பிற தானியங்களுக்கு ஆபத்தில்லாதது. அதேபோல... குளிர்கால தானியங்களான கோதுமை, ரை, பார்லியின் தாள்களை, குளிர்கால தானியங்களுக்கு மூடாக்காகப் பயன்படுத்தாமலிருப்பதும் நல்லது.

வைக்கோலைப் பரப்புவது மண்ணின் அமைப்பைப் பாதுகாக்கிறது. மேலும் நிலத்தின் வளத்தைக் கூட்டுகிறது. ஆகையால், தயாரிக்கப்பட்ட எரு எதுவும் தேவைப்படுவதில்லை. நிலம் வளமாக இருப்பதால்... உழவுகூட வேண்டாம். ஜப்பானில் இருபதாண்டுகளுக்கும் மேலாக உழவு செய்யப்படாத ஒரே நிலம் என்னுடையதுதான். மேலும் ஒவ்வொரு பருவத்திலும் மண்ணின் தன்மை மேம்பட்டுக் கொண்டுள்ளது. எனது வயலில் நான்கு அங்குல ஆழத்துக்கும் அதிகமாக மட்குப் பொருட்கள் உள்ளன. இந்த மாற்றத்துக்கான காரணம் ஒன்றுதான். தானியங்கள் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் மண்ணுக்குத் திருப்பித் தந்ததுதான். மண்ணுக்குத் தேவையான எரு மூடாக்கு, இதன் மூலமே கிடைத்துவிடுகிறது. அதனால்தான், 'தனியாக எரு எதுவும் கொடுக்க வேண்டாம்' என்கிறேன்.

'எரு தேவையில்லை' என்று சொல்லமாட்டேன். எரு தயாரிப்பதற்கான கடும் வேலைதான் வேண்டாம் என்கிறேன். வைக்கோலை நிலத்தில் மூடாக்காக இறைத்துவிட்டால், அதன் மீது மெல்லிய தூசுப்படலம் போல் கோழி எருவையோ அல்லது வாத்து எருவையோ தூவிவிட்டால்... ஆறு மாத காலத்துக்குள் அவை மட்கிவிடும். ஆனால், இதைவிட எரு தயாரிப்பது எளிய வழி என்று நினைத்துக் கொள்கிறார் ஜப்பானிய விவசாயி. அதனால், எல்லா கஷ்டங்களையும் அனுபவித்து எரு தயாரிக்கிறார். உண்மையில் அது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா?