ஆர்.குமரேசன்

பளிச்... பளிச்...

வயது 100 நாட்கள்.
இட்லிக்கு ஏற்றது.
நிழலில் அருமையாக வளரும்.

பாக்கு, கோகோ, மலர்கள்... என தென்னைக்கு இடையில் விரியும் ஊடுபயிர் வரிசையில் நெல்லையும் இணைத்திருக்கிறார்கள், இயற்கை விவசாயிகள் பலரும். அந்த வகையில், தென்னைக்கு இடையில் ஊடுபயிராக, 'பால் ஒட்டு’ ரக நெல்லை ஊடுபயிராகச் சாகுபடி செய்து வருகிறார், மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாதமுத்து.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 'பனை இல்லாதத் தோட்டமே இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு பார்வைக்கு எட்டிய தூரம் வரையில் சினேகமாக சிரிக்கின்றன... பனை மரங்கள்- பாதமுத்துவின் தோட்டத்திலும்!

உச்சிவெயில் வேளையில் நெல் அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பாதமுத்துவை சந்தித்தபோது, 'எங்களுக்கு 10 ஏக்கர் நிலமிருக்கு. சின்னவயசுல இருந்தே விவசாயம் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். படிப்பை முடிச்சிட்டு விவசாயத்துல இறங்கினேன். 5 ஏக்கர்ல தென்னை இருந்துச்சு. மிச்ச இடத்துல புஞ்சைப் பயிர்களையும் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல வாத்தியார் வேலை கிடைக்கவும், 'வேலையா... விவசாயமா?'னு ஒரு கேள்வி எழுந்து, ரெண்டையுமே விடுறதுக்கு மனசு இல்ல. அப்பறம் நல்லா யோசிச்சு, தோட்டத்துக்கு ஒரு பண்ணையாள வேலைக்கு வெச்சிட்டு, நான் வாத்தியார் வேலையில சேந்துட்டேன். வாராவாரம் ஒரு தடவை தோட்டத்துக்கு வந்து பாத்துக்குவேன். இருபத்தஞ்சு வருஷமா தலைமை ஆசிரியரா இருந்து, 94ம் வருஷம் ஓய்வு கிடைச்சதும் முழு நேர விவசாயியா ஆயிட்டேன்'' என்று சொன்ன பாதமுத்து தொடர்ந்தார்.

தற்சார்பு வேளாண்மை!

''ஆரம்பத்திலிருந்து இப்போ வரைக்கும் என் நிலத்துல ரசாயனமே பயன்படுத்துனதில்லை. முழுக்கமுழுக்க இயற்கை முறை விவசாயந்தான். என் பசங்க எல்லாரும் செட்டில் ஆகிட்டாங்க. இதுக்கு மேல வருமானத்துக்காக விவசாயம் செய்யத் தேவையில்லைனு தோணுச்சு. அதுனால இப்ப தற்சார்பு வேளாண்மையில இறங்கிட்டேன்.

இங்க விளையிற தேங்காய், எள்ளுல இருந்து எண்ணெய் எடுத்துக்குவோம். உளுந்து, பாசிப்பயறு மாதிரியான பயறுகளை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்குவோம். வருஷம் ரெண்டு தடவை ஒரு ஏக்கர்ல நெல் போடுவேன். அதுலயும் குடும்பத் தேவைக்குப் போக மிச்சமிருக்குறதை மட்டுந்தான் விப்பேன்.

ஏற்கெனவே அஞ்சு ஏக்கர்ல தென்னை இருக்க, நாலு வருஷத்துக்கு முன்ன கூடுதலா ரெண்டு ஏக்கர்ல தென்னையை வெச்சி விட்டேன். அதுக்கிடையில ஊடுபயிரா வாழை, சோளம், உளுந்து, பாசிப்பயறுனு சாகுபடி செஞ்சிக்கிட்டுருக்கேன். இப்போ மொத்தம் ஏழு ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதி மூணு ஏக்கர் நிலத்துல அப்பப்ப எள், உளுந்து, பாசிப்பயறு... மாதிரியான புஞ்சை தானியங்களைப் போட்டுக்குவேன்.

இந்தத் தடவை ஒரு ஏக்கர் தென்னைக்கிடையில 'பால் ஒட்டு’ ரக நெல்லை போட்டிருந்தேன். எந்த ரசாயனமும் போடாம, பெரியளவுல செலவும் இல்லாம நல்ல மகசூல் கிடைச்சிருக்கு. இது இட்லி செய்றதுக்காகவே உள்ள தனி ரகம். வழக்கமா தென்னைக்கிடையில நெல் பயிர் நல்லா வளராது. ஆனா, இந்த ரகம் நிழல்ல அருமையா வளருது. தனிப்பயிரா சாகுபடி செஞ்சாலும் நல்லா விளையுது'' என்றவர், ஒரு ஏக்கரில் பால் ஒட்டு ரக நெல்லைச் சாகுபடி செய்யும் விதத்தைப் பாடமாகவேச் சொல்ல ஆரம்பித்தார்.

விதைநெல் 30 கிலோ!

'25 அடிக்கு 25 அடி இடைவெளியில் நடப்பட்டுள்ள நான்கு வயதுக்குள் இருக்கும் தென்னைக்கு இடையில் ஊடுபயிராக நெல் சாகுபடி செய்யலாம். பால் ஒட்டு ரகத்தின் வயது 100 நாட்கள். புரட்டாசி, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. எல்லா மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது. நாற்றுப் பாவி நடவு செய்தால், ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும்.

ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 10 சென்ட் நாற்றங்கால் அமைக்க வேண்டும் (ஒற்றை நாற்று முறையில் நடவு செய்தால் 3 கிலோ விதையே போதும். அதற்கேற்ற அளவுக்கு நாற்றங்கால் அமைக்கலாம்).

நமது தோட்டத்தில் இருக்கும் மரங்களின் இலை-தழைகளை வெட்டி எடுத்து நாற்றங்காலில் இட்டு 'கேஜ் வீல்’ மூலம் அழுத்திவிட்டு, விதைநெல்லைத் தூவ வேண்டும். நாற்று முளைக்கத் தொடங்கியதும் 200 கிலோ இயற்கைக் கலப்பு உரத்தைத் (பார்க்க, பெட்டிச் செய்தி ) தூவி விட்டால், நாற்று நன்றாக வளரும்.

1,000 கிலோ கலப்பு உரம்!

நடவு வயலிலும், இலை-தழைகளை இட்டு, கேஜ் வீல் மூலம் அழுத்தி 25 நாட்கள் வயதுடைய நாற்றுகளைப் பறித்து நடவு செய்ய வேண்டும் (ஒற்றை நாற்று முறையில் நடவு செய்பவர்கள் 15 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்யலாம்). வயல் காயாத அளவுக்கு தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த 25ம் நாள் களை எடுத்து, அடுத்த நாள் 1,000 கிலோ கலப்பு உரத்தைத் தூவ வேண்டும். 40ம் நாள் இரண்டாம் களை எடுத்து... 1,000 கிலோ கலப்பு உரத்தைத் தூவ வேண்டும். பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்காது. அப்படியே தாக்கினால்... மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து கட்டுப்படுத்திக் கொள்ளலாம். 70ம் நாளில் கதிர் பிடித்து, 90ம் நாளுக்கு மேல் முற்றத் தொடங்கும். 100ம் நாளுக்கு மேல் அறுவடை செய்யலாம்.

அரிசியாக மாற்றினால், அதிக பணம்!

சாகுபடிப் பாடம் முடித்த பாதமுத்து, ''இலை, தழையோட நாங்களே தயாரிக்குற இயற்கைக் கலப்பு உரத்தை மட்டும் வெச்சு விளைவிக்குறதால நல்ல மகசூல் கிடைக்குது. அறுவடை செஞ்ச பிறகு 30 மூட்டை (70 கிலோ மூட்டை) நெல் கிடைச்சிருக்கு.

தென்னைக்கு இடையில நட்டதால வழக்கமான முறையிலயே நடவு செஞ்சிட்டேன். ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சிருந்தா... இன்னும் கொஞ்சம் செலவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

பொதுவா நான் நெல்லை விற்பனை செய்ய மாட்டேன். அரிசியா அரைச்சி எங்க பசங்க வீடு, சொந்தக்காரங்க வீடுனு பயன்படுத்திக்குவோம். பால் ஒட்டு ரகம்கறது... இட்லி அரிசியா இருக்கறதால, தேவைக்குப் போக மீதியை வித்துடுவேன்.

அரிசியா மாத்தினா ஒரு மூட்டைக்குச் சராசரியா 40 கிலோ அரிசி கிடைக்கும். அந்தக் கணக்குல பாத்தா... மொத்தம் 1,200 கிலோ அரிசி கிடைக்கும். கிலோ 20 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலும் 24,000 ரூபாய் கிடைக்கும். செலவு போக, எப்படியும் 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம்தான்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.

படங்கள்: என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு
பாதமுத்து அலைபேசி: 04549\293562.

கலப்பு உரம் தயாரிப்பு:

தேவையானப் பொருட்கள்: ஆட்டுச் சாணம் -1,000 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு - 50 கிலோ. அமுதக்கரைசல் - தேவையான அளவு.

செய்முறை: ஆட்டுச் சாணம், வேப்பம் பிண்ணாக்கு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் அமுதக்கரைசலை ஊற்றி, புட்டு பதத்தில் பிசைந்தால்... கலப்பு உரம் தயார். இது, ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு.

(அமுதக்கரைசல்... இதை 'நிலவள ஊக்கி' என்றும் சொல்கிறார்கள். நிலத்தில் தெளித்ததும் 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். மாடு ஒரு தடவை போட்ட சாணம் ஒரு தடவை பெய்த சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். பிறகு, 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால்... அமுதக்கரைசல் தயார்).

பசிப் பிணி போக்கும் பனை!

வறட்சிக் காலங்களில் விவசாயம் கை கொடுக்காதபோது, 'பசிப் பிணி போக்கும்' என்பதால், இந்தப் பகுதியில் பனையை வேலியோரங்களில் வளர்ப்பதை பாரம்பரியமாகக் கடைபிடிக்கிறார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பனைகளாவது இருக்கின்றன. இந்த மரங்களில் பதநீர் மற்றும் நொங்கு இறக்க ஆண்டுக்கு இவ்வளவு எனக் குத்துமதிப்பாக ஒரு விலை பேசி குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். இங்கு பதநீரில் பனைவெல்லம் காய்ச்சும் பணியும் நடைபெறுகிறது.