பிரச்னை

கு.ராமகிருஷ்ணன்

வேதனையில் வாடும் விவசாயிகள்...
வேடிக்கைப் பார்க்கும் வேளாண்துறை...

''வேளாண்மைத் துறையின் மெத்தனத்தால 200 டன் அளவிலான சம்பா விதைநெல், சுத்தகரிப்பு செய்யப்படாமல் பல மாதங்களாகத் தேங்கிக் கிடக்கிறது. இதனால முளைப்புத் திறன் குறைவதோடு அல்லாமல் வரவிருக்கும் சம்பா பருவத்தில் விதைநெல்லுக்குப் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது'' என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விதைநெல் உற்பத்தி விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஆலமன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன், ''வேளாண்துறைக்கு விதைநெல் உற்பத்தி செய்து கொடுக்கற விவசாயிகள்ல நானும் ஒருத்தன். நெல் உற்பத்தியைவிட, விதைநெல் உற்பத்தி செஞ்சு கொடுக்குறதுல பணம், உழைப்பு ரெண்டுமே கூடுதலா செலவாகும். தயாரான விதைநெல்ல சுத்திகரிப்பு நிலையத்துல கொடுத்ததும், சாதாரண தானிய நெல்லுக்கான விலையை நிர்ணயம் பண்ணி, அதுல 90 சதவிகிதத் தொகையை மட்டும்தான் அப்போதைக்குத் தருவாங்க. நெல்லை

90 நாளுக்குள்ள சுத்திகரிப்பு செஞ்சு, விதைத் தேர்வுக்கு அனுப்பணும். தேர்வானா, விதைநெல்லுக்கான விலையை நிர்ணயம் பண்ணி பாக்கித் தொகையைத் தருவாங்க. தேர்வாகலைனா ஆரம்பத்துல அவங்க நமக்கு கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு நம்ம நெல்ல எடுத்துக்கணும். இதுதான் விதைநெல் உற்பத்திக்கான விதிமுறை.

நான் உற்பத்தி செஞ்சு கொடுத்திருக்குற 12 டன் சம்பா விதைநெல், நாலு மாசமா சாக்கோட்டை விதைச் சுத்திகரிப்பு நிலையத்துல காத்துக் கிடக்கு. சுத்திகரிப்பு தள்ளிப் போறதால... எனக்கு வர வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை எதிர்பார்த்து காத்துட்டே இருக்கேன்'' என்று ஏக்கமா சொன்னார்.

திருவள்ளியங்குடியைச் சேர்ந்த வடிவேல், ''சுத்திகரிப்பு இயந்திரங்கள்ல பொருத்தப்பட்டுள்ள பலவிதமான சல்லடைகள் மூலமா... கல், மண், தூசி, பதர், கலப்பு, கருக்கா, சுணை, சீரான வடிவமில்லாத விதைநெல் எல்லாத்தையும் தனித்தனியா பிரிச்செடுத்து, சுத்திகரிப்புச் செய்வாங்க. அதிகபட்சம்

90 நாட்களுக்குள்ள இதைச் செஞ்சாகணும். இல்லைனா விதைநெல் தரமிழந்து, முளைப்புத் திறன் குறைய ஆரம்பிக்கும். மார்ச் 2-ம் ந்தேதி 9,350 கிலோ சம்பா ரக ஏ.டி.டீ-46 விதைநெல்லைக் கொடுத்தேன். இதுவரை சுத்திகரிப்புச் செய்யல. இதனால முளைப்புத் திறன் குறைஞ்சு போயிடுமோனு பயமாயிருக்கு'' என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை காட்டுத்தோட்டம், சாக்கோட்டை ஆகிய இரண்டு இடங்களில் விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. சாக்கோட்டை சுத்திகரிப்பு நிலையம், கூடுதல் திறன் கொண்டது. இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைநெல்லில் சுமார் 70 சதவிகிதம் இங்குதான் சுத்திகரிப்பு செய்யப்படும். ஆனால் சமீபகாலமாக இதன் செயல்பாடு மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார், திருபுவனத்தைச் சேர்ந்த மகாலிங்கம்.

''இதை நிர்வாகம் செய்ய வேளாண் உதவி இயக்குநர் ஒருத்தர் இருந்தார். இப்ப அந்தப் பதவியே இல்லை. கும்பகோணம் வேளாண் உதவி இயக்குநர்தான் கூடுதலா பார்த்துக்குறாரு. அவர் எப்பயாவதுதான் வந்துட்டு போறார். நிர்வாகச் சீர்கேட்டுக்கு இதுவும் முக்கிய காரணம். இங்க வேலை பார்க்குறத் தொழிலாளர்களுக்கு பல மாதங்களா சம்பளம் தராததால தொழிலாளர்கள் ஒழுங்கா வேலைக்கு வர்றதில்ல. இங்க உள்ள மெஷின் எல்லாமே ரொம்ப வருஷத்துக்கு முன்ன அமைச்சது. அதெல்லாம் இப்போ திறன் இழந்துடுச்சு. சாக்குகளும் போதிய அளவு இருப்பு இல்லை. இது எல்லாமே தாமதத்துக்கான காரணங்கள்.

இந்த சுத்திகரிப்பு நிலைய வளாகம் முழுக்க நிறைய புதர்கள் மண்டிக் கிடக்ககுறதுனால... எலி, அணில்களோட நடமாட்டம் அதிகமாகி, விதைநெல் மூட்டைகள்ல ஓட்டை போட்டுடுறதால, ஈரப்பதம் அதிகமாயிடுது. கீழே சிதறுன விதைநெல்லோடு கலப்பு சேர்ந்துடுது. மின்சாரம் தடைப்பட்டாலும்கூட, சுத்திகரிப்புப் பணி தொடர்ந்து நடக்கணும். அதுக்காக ஜெனரேட்டர் வச்சிருக்காங்க. அது அடிக்கடி ரிப்பேராகி ஓடுறதேயில்லை. ஈரப்பதம் கண்டுபிடிக்கிற மெஷின் ரொம்ப பழசானதால, முன்னுக்குப் பின் முரணா அளவு காட்டுது. இதுமாதிரி ஏகப்பட்ட பிரச்னைகள். இதையெல்லாம் சரி செய்றதுல வேளாண்துறை அக்கறை காட்டல. அவங்களோட அலட்சியத்துக்கு, நாங்க பலிகடா ஆக்கப்படறோம்'' என்ற மகாலிங்கம்,

''இப்படி பல காரணங்களால சமீபகாலமா விதை உற்பத்தி விவசாயிகளோட எண்ணிக்கை குறைஞ்சிக்கிட்டே வருது. தமிழ்நாட்டு விவசாயிகளோட மொத்த விதைநெல் தேவையில, வெறும் 17 சதவிகிதத்தைத்தான் வேளாண்துறை பூர்த்தி செஞ்சிக்கிட்டு இருக்கு. இப்ப அதுக்கும் ஆபத்து வரப்போகுது'' என்று கவலைப்பட்டார்.

இப்பிரச்னை குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டபோது, ''அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். அடுத்த சில வாரங்களுக்குள் சம்பா விதைநெல் சுத்திகரிப்புப் பணி முடித்துக் கொடுக்கப்படும்'' என்று சொன்னார் வழக்கம்போல!

ஏற்கெனவே, பாரம்பரிய விதைகளை பெருவாரியாக ஒழித்துக் கட்டிவிட்டு, விதைக் கம்பெனிகளின் வீரியவிதைகளின் வியாபாரத்தை பலமடங்கு உயர வைத்த சாதனைக்குச் சொந்தக்காரராக இருக்கிறது வேளாண்துறை. இந்நிலையில், விவசாயிகளின் விதை உற்பத்தி விஷயத்திலும் அதிக அக்கறை இல்லாமல் இருப்பது... ஒட்டுமொத்தமாக விதை உற்பத்தி மற்றும் விற்பனையை பன்னாட்டுக் கபெனிகளின் காலடியில் சமர்ப்பிக்கத் திட்டமிடுகிறதோ என்கிற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது!

''இதுல என்ன அச்சப்பட வேண்டியிருக்கு... அப்படித்தான். அதைச் செய்யச் சொல்லித்தான் அரசாங்கமே எங்கள ஊக்குவிக்குது'' என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து பதில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

படங்கள்: கே. குணசீலன்