சர்ச்சை

ரா.செல்வம்

இ-கோலி... இந்தப் பெயரை உச்சரித்தாலே அரண்டு ஓடுகின்றனர், ஐரோப்பியர்கள். அந்த அளவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனி, ஸ்பெயின், ஃபிரான்ஸ்... என பல நாடுகளையும் மிரட்டி வருகிறது இ-கோலி (E. coli -Escherichia coli) எனும் பாக்டீரியா! பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட, இதுவரை 30 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்!

இந்நிலையில், ''இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிட்டதால்தான் இந்த இ-கோலி பாக்டீரியா தாக்குதல்'' என்கிற ரீதியில் ஒரு பிரசாரம் சந்தடி சாக்கில் பரப்பப்பட்டு, இயற்கை விவசாயத்துக்கு எதிராக மக்களை திசைதிருப்பும் முயற்சிகளும் நடந்திருப்பதுதான் கொடுமை!

இந்த பாக்டீரியாவின் தாக்குதல் முதன்முதலில் ஜெர்மனியில்தான் கண்டறியப்பட்டது. 'வயிற்றுப் போக்கு' என்றபடி மருத்துவமனைக்கு வர ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 650 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தீவிர சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனாலும், அவர்களில் முப்பந்தைந்து பேர் இறந்து போனார்கள்.

இந்தத் திடீர் நோய்க்கான காரணம்... இ-கோலி எனும் பாக்டீரியா என்பது கண்டறியப்படுவதற்கு உள்ளாகவே... அது, அடுத்தடுத்த நாடுகளுக்கும் பரவி, ஐரோப்பாவையே ஆடிப்போகச் செய்திருக்கிறது.

'ஸ்பெயின் நாட்டில் விளைந்த வெள்ளரி, ஜெர்மனியில் விளைந்த தக்காளி, லெட்யூஸ் கீரை... போன்றவற்றின் மூலம்தான் இந்த பாக்டீரியா பரவியிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இவை இயற்கை விவசாயப் பண்ணைகளில் விளைவிக்கப்பட்டவை'

-இப்படிப்பட்ட தகவல்கள் ஆரம்பக் கட்டத்தில் பரப்பிவிடப்பட, உலகம் முழுக்க இருக்கும் இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் மத்தியில் கடும் குழப்பம் எழுந்தது. ஆனால், அடுத்தடுத்து வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு, கடைசியாக... ''மாட்டு இறைச்சியில் இருந்துதான் பரவி இருக்க வேண்டும்'' என்ற அனுமானத்துக்கு வந்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள், ''கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்திய பாக்டீரியாக்களைவிட, பல மடங்கு வீரியமுள்ளது, தற்போது வந்திருக்கும் இ-கோலி’' என்றும் கூறியிருக்கின்றனர்.

இதற்கு நடுவே... மைக் ஆடம்ஸ் என்ற எழுத்தாளர், ''ஐரோப்பிய யூனியனில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் இ-கோலி, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு வெளியில் பரப்பப்பட்டிருக்கிறது என்பது தடயவியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது'’ என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருப்பது... ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மட்டுமல்ல... உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

'ஏதாவது மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்கூட இதை உருவாக்கி அனுப்பி இருக்கலாம்’ என்று பரவி வரும் கருத்தையும் ஒதுக்கித் தள்ளாத ஆடம்ஸ், ''தங்களுடைய தயாரிப்புப் பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய சட்டங்களை உருவாக்குவது மற்றும் தங்களது நோக்கங்களுக்கு எதிராக உள்ள நாடுகளை பணிய வைப்பது என்கிற வகையில் அமெரிக்கா செய்திருக்கும் சதியாகக்கூட இருக்கலாம். 'ஒரு பிரச்னையை உருவாக்கி, மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடு. பிறகு, தேவைப்படும் சட்டத்தை உருவாக்கு' என்பது அமெரிக்காவின் கொள்கை.

சமீபத்தில் அமெரிக்க அரசு 'உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்துதல் சட்டம்’ என்ற ஒன்றை கொண்டு வந்து, அந்நாட்டில் உள்ள சின்னஞ்சிறு இயற்கை விவசாயப் பண்ணைகள் மற்றும் வீட்டுக் காய்கறித் தோட்டங்களை எல்லாம் தடை செய்துள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி... போன்ற நாடுகள் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மக்காச்சோளமான 'மான்-810’ ரகத்தை அனுமதிக்கக் கூடாது என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்க்கின்றன. அதனால்கூட இந்தச் சதி நடந்திருக்கலாம்'' என்று கோடிட்டிருக்கிறார்.

'எல்லாமும் வணிகமே' என்றாகிவிட்ட சூழலில், தங்களுடைய வர்த்தகத்தின் மூலம் கோடி கோடியாக பணம் பார்க்க நினைக்கும் வர்த்தகச் சூதாடிகளின் வஞ்சக திட்டங்களுக்கு பலியாடு ஆக்கப்பட்டுள்ளனர் விவசாயிகள், என்பதுதான் உண்மை!

இ-கோலி பிரச்னையால் 1,125 கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை இழந்திருக்கிறது ஜெர்மனி. தக்காளி, லெட்யூஸ் கீரை, வெள்ளரி போன்றவற்றை ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது கத்தார். இதனால், ஒரு வாரத்துக்கு 1,462.5 கோடி ரூபாயை இழந்து வருகிறது ஸ்பெயின்.

இவை அத்தனையும் விவசாயிகள் தலையில்தான் விடிந்துள்ளது. ஏற்றுமதித் தடையால் தக்காளி, வெள்ளரி விளைவித்த விவசாயிகள் விற்க முடியாமல், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 30% நஷ்டஈடு வழங்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. 'இது, யானைப் பசிக்கு சோளப் பொறி' என்று குமுறிக் கொண்டுள்ளனர் விவசாயிகள்.

உண்மையில், இ-கோலி பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 100 வகைகள் உள்ளன. நான்கு வகைகள் மட்டுமே மனித உயிருக்கு உலை வைப்பவை. மீதியுள்ளவை விலங்குகள் மற்றும் மனிதர்கள் என்று அனைத்து உயிரினங்களுக்கும் அதிஅவசியமானவை. இரைப்பையில் இருக்கும் இந்த பாக்டீரியாக்களால் நமக்கு எந்தக் கெடுதலும் இல்லை.

இ-கோலி பாக்டீரியா விஷயத்தை வைத்து, இயற்கை விவசாயத்துக்கு எதிரான சதிகள் பல தடவை நடந்திருக்கின்றன. 2004ம் ஆண்டில் இதேபோல, கலிஃபோர்னியாவில் பாதிப்பு ஏற்பட்ட போதும், இயற்கைக் காய்கறிகள் மீது பழி சுமத்தினர், மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள். உலக விவசாயத்தை ஆட்டிப்படைத்து, விவசாயிகளின் தற்சார்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன் மூலம் பணம் பார்த்துக் கொண்டிருக்கும் பகாசுர நிறுனங்கள்தான், அதன் பின்னணியில் இருந்தன. முடிவில், இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்கறிதான் இதற்கு காரணம் என்பது வேண்டுமென்றே பரப்பப்பட்ட விஷயம் என்பது அப்போது நிரூபிக்கப்பட்டது. இப்போதும் அதுவே நடந்திருக்கிறது.

இந்த சதிகள் ஒரு நாளும் ஓயப்போவதில்லை. அவற்றைக் கண்டு நாமும் ஒரு நாளும் ஓய்ந்துவிடக் கூடாது!