பசுமைக்குழு

மஞ்சள் மாநாடு!

கடந்த வருடம் ஒரு குவிண்டால் ரூ 16,000 முதல் 17,000 வரை விற்ற மஞ்சள், தற்போது ரூ.4000 முதல் ரூ. 6000 வரை என்று அடைபட்டுக் கிடக்கிறது.

மஞ்சள் விலையில் அடிக்கடி நடக்கும் ஏற்ற இறக்கங்களைக் களைந்து, நிரந்தரமான விலை கிடைக்க வழிவகைகளைக் கண்டறியும் வகையில், ஈரோட்டில் மஞ்சள் விவசாயிகள் மாநாட்டை நடத்த அனைத்து விவசாய சங்கங்களும் முடிவு செய்துள்ளன.

'இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்னைகளை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்' என்ற கோரிக்கையுடன் கொங்குநாடு விவசாயச் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையில், பல்வேறு விவசாய அமைப்பினர், சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தனர். சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் கேட்டறிந்து கொண்ட அப்துல் கலாம், மாநாட்டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்..

கால்நடைத் தீவனத்தில் கவனம் தேவை!

கோயம்புத்தூரில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கடந்த ஜூன் 21-ம் தேதி, கால்நடை வளர்ப்பவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 'ஆல்டெக்' நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில், கால்நடை தீவனத்தில் பெரும்பங்கு வகிக்கும் மக்காச்சோளத்துக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு பற்றியும், அதற்கான மாற்று வழிமுறைகளைக் கண்டறிவது பற்றியும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவை முக்கிய உணவாக மக்களால் உட்கொள்ளப்படுகிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் பால், முட்டை போன்றவையும் மக்களின் முக்கிய ஆகாரமாக உள்ளது. அவற்றின் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், அவற்றின் இறைச்சி, பால், முட்டை ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால் விலங்குகளுக்கு தரப்படும் உணவு ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாகவே விவாதிக்கப்பட்டது.

தடையை நீக்கிய சுற்றுச்சூழல் அமைச்சகம்!

கடந்த 2010ம் ஆண்டில் டெல்லியில் உள்ள மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினர் இந்தியாவில் இருக்கும் 88 தொழில்துறைப் பகுதிகளில் மாசு சதவிகிதம் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர், கடலூர், மணலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களிலும் நீர், நிலம் மற்றும் காற்றின் மாசு குறித்து ஆய்வு நடத்தினர்.

ஆய்வின் முடிவில், மொத்த தர வரிசைப் பட்டியலில் வேலூர் 8-ம் இடத்திலும், கடலூர் 16ம் இடத்திலும் மணலி 20-ம் இடத்திலும் இருந்தன, ஏற்கனவே இந்தியாவில் 43 இடங்களில் புதிய தொழில் தொடங்க, தடை விதித்திருந்தது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம். இந்த ஆய்வு முடிவைத் தொடர்ந்து தற்போது, இந்தத் தடை ஆணை திடீரென்று விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

'தமிழ்நாடு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட செயல் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதால், தடை நீக்கப்படுகிறது’ என்று மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விஷயம், சூழல் ஆர்வலர்களைக் கோபப்படுத்தவே... கடலூர் சிப்காட் பகுதியில் ஆய்வு செய்து, இதுதான் உண்மை நிலை என்று ஆதாரங்களுடன் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குத் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, 'விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அங்கிருந்து பதில் தரப்பட்டிருக்கிறது.

பறவை வந்தால், பருத்திக்கு நல்லது!

ஜூன் 20ம் தேதி, ராசிபுரம் அருகில் உள்ள ராஜாபாளையம் கிராமத்தில், ஒருங்கிணைந்தப் பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் பிரபாகரன் தலைமை வகித்து, பேசிய போது, ''பருத்தி சாகுபடிக்கு கோடை உழவு அவசியம். தரமான விதைகள்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆகவே, விதை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஒரே சமயத்தில் விதைப்பு செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். ஊடுபயிராக தட்டைப்பயறு, உளுந்து, மக்காச்சோளம்... போன்றவற்றை பயிரிடலாம். தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்க விளக்குப்பொறி வைக்க வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை மற்றும் டின்கள் வைத்தால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். ஆங்கில 'டி'' வடிவக் குச்சிகளை நட்டு வைப்பதால் பறவைகள் வயலுக்கு வரும். பயிரில் உள்ள புழுக்களை பறவைகள் தின்றுவிடும். காய்ப்புழுக்களை பூச்சி விரட்டிக் தெளித்து கட்டுப்படுத்தலாம்''என்றார்.

படங்கள்: என்.விவேக்,
ஆர்.கலைச்செல்வன்