காலையிலேயே கழனிக்குக் கிளம்பினார் 'ஏரோட்டி’ ஏகாம்பரம். திண்ணையில் அமர்ந்திருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் செய்தித்தாள்களைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். கழனிக்கு வந்த ஜோரில் வேலைகளில் ஏரோட்டி மும்முரமாகிவிட, வரப்பில் அமர்ந்து செய்தித்தாள்களைப் படிக்க ஆரம்பித்த வாத்தியார், அதில் மூழ்கியும் போனார்.

''பேப்பர்ல என்னய்யா விசேஷம்?'' என்று 'காய்கறி’ கண்ணம்மாவின் குரல் கேட்டு வாத்தியார் திரும்புவதற்கும்... வேலைகளை முடித்து ஏரோட்டி வருவதற்கும் சரியாக இருந்தது. வரப்பிலேயே அமர்க்களமாக ஆரம்பமானது அன்றைய மாநாடு.

''விசேஷம் என்ன இருக்கப் போகுது? பேப்பரைத் தொறந்தாலே கொலை, கொள்ளைனுதான் நியூஸ் இருக்கு. வீட்டுல தனியா இருக்குற பொம்பளைங்கள நோட்டம் விட்டு, கொலை பண்ணி, நகைகளக் கொள்ளை அடிக்கறாங்க. ரெண்டு, மூணு மாசத்துக்குள்ள தமிழ்நாட்டுல இதுமாதிரி பல சம்பவம் நடந்துடுச்சு'' என்று கவலை பொங்கச் சொன்னார் வாத்தியார்.

''ஆமாய்யா நான்கூட கேள்விப்பட்டேன். மெட்ராஸுல பொம்பளங்க கழுத்துல இருக்கற செயினைப் பறிக்கறதும் அதிகமாயிடுச்சாம். எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரம்மா பையன் மெட்ராஸுலதான் பெரிய வேலையில இருக்கான். அவன பாக்கறதுக்காக போயிருந்த அந்தம்மா, பால் வாங்க போனப்ப பார்த்த சங்கதியை என்கிட்ட சொன்னாங்க. 60 வயசு அம்மா ஒருத்தாரோட கழுத்துல இருந்த

5 பவுன் சங்கிலிய அறுத்துட்டு ஓடியிருக்காங்க பைக்குல ஹெல்மெட்டோட வந்தவனுங்க. அக்கம் பக்கத்துல இருந்தவங்கள்லாம் பேயடிச்சு போன மாதிரி நின்னுட்டாங்களாம். இதைப் பத்தி போலீஸுல போய் சொல்லியிருக்காங்க. நகை போனது போனதுதானாம். இதுமாதிரி நெறைய நடக்குதாம் மெட்ராஸுல. திருட்டைத் தடுக்கறதவிட, பேப்பர்ல நியூஸ் வராம தடுக்கறதுல கவனமா இருக்காங்களாம் போலீஸ்காரங்க'' என்று நொந்து கொண்டார் கண்ணம்மா.

''அப்ப, ஆந்திராவுக்கு போனவங்கள்லாம், இப்ப திரும்பிட்டாங்களோ...?!'' என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தார் ஏரோட்டி.

''ஓஹோ... முதல்வரா பதவி ஏத்ததும், 'சங்கிலி திருடனுங்க எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிட்டானுங்க'னு ஜெயலலிதா சொன்னாங்களே... அதைக் குத்திக் காட்டுறியா?'' என்று தானும் சிரித்த வாத்தியார்,

''அதுக்காக அந்தம்மாவே வீதியில இறங்கி திருடனுங்கள துரத்தவா முடியும்?'' என்று கேட்டார்.

''சரி, அது கிடக்கட்டும்... உன்ன ரெண்டு, மூணு நாளா காணலையே கண்ணம்மா?'' என்று பேச்சைத் திருப்பினார் ஏரோட்டி.

''அத ஏன்யா கேக்குற... கேஸ் கனெக்ஷன் வெச்சிருக்கவங்க எத்தனை சிலிண்டர் வாங்குறோம்னு கம்பெனியில போய் பதியணுமாம். அப்பத்தான் மண்ணெண்ணை வாங்க முடியுமாம். மொத நாள் மூணு, நாலு மணி நேரம் நின்னுட்டு வந்துட்டேன். அடுத்த நாள் விடியக் காலையிலயோ போனா... ஏற்கெனவே நூறு பேரு துண்டு போட்டு இடம் பிடிச்சிருந்தாங்க. ஒரு வழியா, பதிஞ்சிட்டு வந்தேன். அதுல கொஞ்சம் ஒடம்பு படுத்திடுச்சி'' என்றார் காய்கறி.

''அடப் போ கண்ணம்மா. இத்தனை நாளுக்குள்ள பதியணும்னெல்லாம் அதுக்கு கெடு எதுவும் சொல்லலையே. பிறகு, எதுக்காக அவசரப்பட்டே? அடுத்த தடவை கேஸ் பதியுறப்போ பதிஞ்சாலே போதுமே! இப்படித்தான் என்ன, ஏதுனு புரிஞ்சுக்காமலே பலரும் அவசரப்பட்டு, அவஸ்தையும்பட்டிருக்காங்க'' என்ற வாத்தியார்,

''இப்படித்தான் நாட்டோட நிலைமை புரியாம அவசரப்பட்டு உசுரையே விட்டிருக்கார் இந்த சாமியார்... பாவம்'' என்று நொந்தபடியே தொடர்ந்தார்.

''கங்கை ஆத்துல அனுமதி வாங்காம பாறையை உடைக்கறாங்க. இதைத் தடுக்கணும்... புனிதமான கங்கையை சுத்தப்படுத்தணும்னு சொல்லி, பிப்ரவரி மாசம் 19ம் தேதியிலிருந்து ஹரித்துவார்ல சுவாமி நிகமானந்தா உண்ணாவிரதம் உக்காந்தார். அரசாங்கம் கண்டுக்காததால, ஜூன் 13ம் தேதி இறந்தே போயிட்டார். இடையில கோமா நிலைக்கு வந்தப்ப ஆஸ்பத்திரியில சேர்த்தாங்களாம். அங்கதான் விஷ ஊசி போட்டுக் கொன்னுட்டாங்கனு ஒரு தகவல் சொல்றாங்க. ஊழலைக் கண்டிச்சி உண்ணாவிரதம் இருந்த 'பாபா ராம்தேவ்’ இருந்த அதே ஆஸ்பத்திரியில அடுத்த அறையிலதான் நிகமானந்தா இருந்திருக்கார்.

ராம்தேவ்வை மாறி மாறி கவனிச்சுக்கிட்ட பி.ஜே.பி., நிகமானந்தாவை பேருக்குகூட எட்டிப் பார்க்கலயாம். ஊழல் மாதிரியான விஷயம்னா... ஒரேயடியா ஒண்ணா சேர்ந்துக்கிட்டு ஆர்ப்பாட்டம் பண்றாங்க. மீடியாவுலயும் ஓயாம அதைக் காட்டுறாங்க. ஆனா, சூழலுக்கு ஆதரவான போராட்டம்னா... சத்தமில்லாம சங்கு ஊதிடறாங்க நம்ம நாட்டுல. இதுபுரியாம போயே சேர்ந்துட்டார் நிகமானந்தா'' என்றார் வாத்தியார்.

''பாவம்லய்யா அந்த சாமியார்'' என்று காய்கறி 'உச்' கொட்ட... சற்றே மாநாட்டில் இறுக்கம்.

அப்படியே கூடையிலிருந்த மாம்பழங்கள் மீது கவனத்தைப் பதித்த ஏரோட்டி, ''அதிக வரத்தானதால பெரியகுளம் பக்கத்துலயெல்லாம் பெங்களூரா மாம்பழத்தோட விலை ரொம்ப இறங்கிப் போச்சாம். கிலோ மூணு ரூபாய்க்குதான் விற்பனையாகுதாம். பறிக்கறதுக்குக்கூட கட்டாதுனு மரத்துலயே விட்டுட்டாங்களாம் பல விவசாயிங்க'' என்று தகவல் சொன்னார்.

இதைக் கேட்டதுமே... ''அதேமாதிரிதான் மஞ்சளுக்கும்'' என்று சொன்ன வாத்தியார்,

''இதுல என்னா கொடுமைனா... வரத்து கம்மியாகியும் விலை ஏறலைனு வருத்தத்துல இருக்காங்க, விவசாயிக. ஆத்தூர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துல 700 மூட்டைதான் ஏலத்துக்கு வந்திருக்கு. அப்படியிருந்தும் மொத்தமாவே 25 லட்ச ரூபாய்க்குதான் விற்பனையாச்சாம். 'ஆடி மாசத்துல கண்டிப்பா விலை ஏறும்'னு வியாபாரிக, விவசாயிக எல்லாருமே நம்பிக்கையா இருக்காங்களாம்'' என்று சொன்னார்.

''புதுச்சேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பின விவசாயிகளுக்கு ஆலையில இருந்து காசோலைகள் கொடுத்திருக்காங்க. ஆலையோட வங்கிக் கணக்குல பணம் இல்லாததால விவசாயிகளுக்கு பணம் கிடைக்கலையாம். அதனால பல விவசாயிகள் கஷ்டத்துல இருக்காங்களாம்.

உடனடியா பணத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை கிளம்பியிருக்கு'' என்று ஒரு தகவலைத் தட்டிவிட்ட ஏரோட்டி, ''மோட்டாரை அணைக்கணும்’' என்றபடியே எழுந்து கொள்ள... முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.

எகிறுது தேங்காய் மட்டை விலை!

பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டைப் பகுதிகளில் தென்னை மட்டைகளிலிருந்து நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. உள்நாட்டில் மெத்தைத் தயாரிப்புக்கு மட்டும்தான் தென்னை நார் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தேவைகளுக்காக சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளுக்கு தென்னை நார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக கோடைக் காலத்தில் தென்னை நார் உற்பத்தி அதிகரித்து விலை குறையும். இந்த வருடம் 30 கிலோ கொண்ட பழுப்பு நிற மஞ்சு பண்டல் ஒன்றுக்கு 350 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. தற்போது தென்மேற்குப் பருவமழை துவங்கியிருப்பதால், நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை வேகமாக உயர்ந்து, 385 ரூபாயைத் தொட்டிருக்கிறது. ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகமாகி இருப்பதால், இன்னும் விலை ஏறலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த கிராக்கியால் பண்ணைகளில் ஒரு மட்டையின் விலை 1 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.