ஆலோசனை

என்.சுவாமிநாதன்

பாடுபட்டு விளைய வைக்கும் விவசாயிகளை மிரட்டும் மிகப்பெரிய வில்லன்கள்... இடைத்தரகர்கள்தான்! ஆனால், இவர்கள் இல்லாமல், இந்திய விவசாயிகளின் பொழுதுவிடிவதே இல்லை. அதுதான் அவர்களின் சாபக்கேடு. இந்நிலையில், வில்லன்களை ஒழித்து, வெற்றி நடைபோட ஆரம்பித்துள்ளனர் சாம்பவர் வடகரை கிராம மக்கள்!

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாம்பவர் வடகரை கிராமத்தில்... எள், நெல், மிளகாய், சோளம் மற்றும் சூரியகாந்தி பயிர்கள்தான் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து 'விளைபொருள் உற்பத்தியாளர் குழு' என்கிற அமைப்பை வேளாண் வணிகத்துறை ஏற்படுத்தியிருப்பதால், இடைத்தரகர் இல்லா வர்த்தகத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள், விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய செங்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் கோமதிநாயகம், ''சந்தை நிலவரங்களை அறிந்து விற்பனை செய்யும் அளவுக்கு விழிப்பு உணர்வு இல்லாததால், இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடி வந்தனர் இடைத்தரகர்கள். இப்போது, நேரடியாகவே வணிகம், மதிப்புக் கூட்டல், சேமித்து வைத்தல்... போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைச் சொல்லிக்

கொடுத்ததன் விளைவாக, விவசாயிகள் விழிப்பு உணர்வு பெற்றுள்ளனர். சமீபத்தில் எள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தென்காசியில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி இருக்கிறோம். ஒரு கிலோ எள்ளை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்துகொண்ட அந்த நிறுவனத்தினரே, போக்குவரத்துச் செலவையும் ஏற்றுக்கொண்டு ஆச்சர்யப்படுத்தி விட்டார்கள்'' என்று சொன்னார்.

பலன்பெற்றிருக்கும் விவசாயிகளில் ஒருவரான தங்கசுவாமி, ''எங்க குழுவுல 23 பேர் உறுப்பினரா இருக்கோம். மொத தடவையா நேரடியாவே விளைபொருளை வித்திருக்கோம். அதனால ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் வரைக்கும் கூடுதலா கிடைச்சிருக்கு. இதேமாதிரி எல்லா விவசாயிகளும் குழு அமைச்சு வியாபாரம் பண்ணினா... இடைத்தரகர்களையே இல்லாமப் பண்ணிடலாம்' என்றவரின் பேச்சில் ஏகத்துக்கும் உற்சாகம்.

அடுத்து பேசிய செல்வகுமார், ''எனக்கு மொத்தம் நாலு ஏக்கர் பூமி இருக்கு. நாலு ஏக்கர்லயும் எள்ளு போடுங்க, சந்தை வாய்ப்பை உறுதி செஞ்சு தர்றோம். விலையும் கூடுதலா கிடைக்கும்னு வேளாண்மைத்துறை அதிகாரிக சொன்னாங்க. நம்பிக்கை இல்லாமத்தான் எள்ளை விதைச்சேன். அவுங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே சாகுபடி செஞ்சதுல 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ஒரு கிலோ 35 ரூபாய்னு விக்கிறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாங்க. இந்தத் தடவை எங்க பகுதியில சந்தை விலையே 30 ரூபாய்தான்'' என்றார் சந்தோஷமாக.

அவரைத் தொடர்ந்த பெருமாள், ''எள்ளுக்கு அடுத்தப்படியா அதிகமா நெல்லுதான் சாகுபடி செய்றோம். குறிப்பா அம்பை-16, ஐ.ஆர்-20 ரகங்கள்தான். கிலோவுக்கு அதிகபட்சமா பதினாலு ரூபாய் வரைக்கும்தான் விலை கிடைக்கும். ஆனா, விதைநெல்லா வித்தா... குறைஞ்சபட்சம் கிலோவுக்கு 25 ரூபாய் கிடைக்கும். 'குழுவுல இருக்குற விவசாயிகள் எல்லாம் சேர்ந்து, விதைப்பண்ணை அமைங்க. விதைநெல்லை அரசே கொள்முதல் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு அதிகாரிங்க சொல்லிருக்காங்க. அதை நோக்கித்தான் இப்ப நகர்ந்துகிட்டிருக்கோம்'' என்று அடுத்தக் கட்டத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் சொன்னார்.

படங்கள் : ரா.ராம்குமார்
தொடர்புக்கு
கோமதிநாயகம், அலைபேசி: 94866-32804
தங்கசுவாமி, அலைபேசி: 99442-16924

''யார் வேண்டுமானாலும் குழு அமைக்கலாம்!

விளைபொருள் உற்பத்தியாளர் குழு பற்றி நம்மிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் தியாகராஜன், ''என்னதான் மகசூலைப் பெருக்கினாலும், அதற்கேற்ற விலை கிடைக்காவிட்டால்... உரிய பலன் விவசாயிகளைப் போய்ச் சேராது. அதற்காகத்தான் வேளாண் வணிகத்துறை மூலமாக விளைபொருள் உற்பத்தியாளர் குழுக்களை அமைத்திருக்கிறோம். உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு மாதம் ஒரு முறை அந்தந்தப் பகுதி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. விதைப்பிலிருந்து விற்பனை வரை பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதோடு, சந்தை வாய்ப்பையும் உறுதி செய்து தருகிறோம். எந்தப் பயிரைச் சாகுபடி செய்யும் விவசாயிகளாக இருந்தாலும், வேளாண்மை இயக்குநரையோ அல்லது அருகிலுள்ள வேளாண்மை அலுவலகங்களையோ அணுகி இந்தக் குழுக்களை அமைத்துக் கொள்ளலாம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு, தியாகராஜன்,
அலைபேசி: 98940-14604