வேலிக்கருவையைப் பார்த்தா சிலருக்கு கோவம், கோவமா வரும். இந்த முள் மரத்தால நிலம் கெட்டுப் போகுதுனு புலம்புவாங்க. கெட்டதுலயும், ஒரு நல்லது இருக்கத்தான் செய்யுதுங்க. வேலிக்கருவை நெத்து, அருமையான கால்நடைத் தீவனம். ஆடு, மாடுகளுக்கு கொடுத்தா முறுக்கு சாப்பிடற மாதிரி சாப்பிடும். கறவை மாடுங்க கூடுதலா பால் கொடுக்கும். ஆடுங்க, கொழுகொழுனு சதைப்புடிச்சி வளரும்.

மாட்டுல பால் கறக்குறதே ஒரு விதக் கலை. அதுவும், கன்னுக்குட்டி இல்லாத மாட்டுல பாலைக் கறக்குறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். ஜாதிக்காய் ஒண்ணை எடுத்து, அதுக்குள்ள இருக்குற கொட்டையைத் தூளாக்கி மூணு பங்கா பிரிச்சி எடுத்துக்கங்க. பால் கறக்குறதுக்கு முன்ன, தீவனத்தோட ஜாதிக்காய் கொட்டைத் தூளையும் கலந்து கொடுங்க... அடங்காத மாடுகூட அசையாம நிக்கும். இந்த விஷயம் தெரியாம கண்ட, கண்ட ஊசியைப் போட்டு மாட்டை நோகடிக்கறவங்க... இனிமே அதை மாத்திக்கோங்க.

ஆடு, மாடுங்க வயித்துல நாடா புழுத் தாக்குதல் இருந்தா... அதுங்க தேறாமலே கிடக்கும். நூறு மில்லி மோர்ல ஒரு கொட்டைப் பாக்கை ஊறப் போட்டு கொடுங்க. இப்படி நாலு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... நாடா புழுங்க, நாண்டுகிட்டு வெளியே வந்துடும்.

புளியங்கொட்டை அற்புதமானக் கால்நடைத் தீவனம். மேல இருக்கற தோலை நீக்கிட்டுக் கொடுக்கணும். ஆனா, அது நொம்பலம் புடிச்ச வேலைனு நெனைச்சுக்கிட்டு, புளியங்கொட்டையைத் தீவனமா கொடுக்கத் தயங்கறாங்க. அதுக்கு நானொரு உபாயம் சொல்றேன்... புளியங்கொட்டையை வாணலியில போட்டு வறுத்து எடுங்க. வாசம் கமகமனு தூக்கும். வறுத்தக் கொட்டை மேல உப்புக் கரைச்ச தண்ணியைத் தெளிச்சி விடுங்க. பிறகு... கம்பு, சோளம் இதையெல்லாம் முளைக் கட்டி வைக்கிற மாதிரி, ஈரமானத் துணியில முட்டணமா முடிஞ்சி வைங்க. மறுநாள் காலையில பார்த்த... புளியங்கொட்டையோட தோல் நல்லா ஊறி இருக்கும். கையால நசுக்குனாலே தோல் பிரிஞ்சுடும். 200 கிராம் புளியங்கொட்டையோட ஒரு கைப்பிடி வெல்லம் போட்டு மாட்டுக்குக் கொடுக்கலாம். இது ஒரு மாட்டுக்கான அளவு.

புளியங்கொட்டையில நிறைய புரதச் சத்து இருக்குது. 200 கிராம் புளியங்கொட்டை ஒரு கிலோ புண்ணாக்குக்குச் சமம். நோஞ்சானா இருக்கிற மாட்டுக்குக் கொடுத்தா... கொழுகொழுனு மாறிடும். சினைப் பிடிக்காத மாடுங்க சினைப் பிடிக்கும். ஆடுங்களுக்கு தினமும் 100 கிராம் வீதம் கொடுக்கலாம். மனுசங்களும் புளியங்கொட்டையை சாப்பிட்டா நல்ல சத்து கிடைக்கும்ங்க.