பச்சமனுஷன்

ஆர்.குமரேசன்

‘வெயில் நுழையறியா குயில் நுழை பொதும்பு‘

மரங்கள்,

பறவைகளின் பயணியர் விடுதிகள்'

-என்று சொல்வார் கவிஞர் மு.மேத்தா. அப்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 'பயணியர் விடுதி'களை உருவாக்கி, ஊரெங்கும் பசுமைத் தோரணம் படரவிட்டுக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன்.

காடு, கரடு, சாக்கடை, தெருக்கள், சாலை ஓரங்கள், வீடுகள், பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள் என எங்கெங்கு காணினும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துக் கொண்டி ருக்கும் இந்த ரவீந்திரன், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்திலி ருக்கும் நா.சு.வி.வி. மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர். “நிழல், பூ, காய், கனி, சுத்தமான காத்துனு எல்லாமும் தருது மரம். காய்ஞ்சி விழுந்தாலும் விறகாகுது. இத்தனையும் தர்றதாலதான் மரத்தை ‘தரு’னு நம்ம முன்னோருங்க சொல்லியிருக்காங்க. நமக்காக இத்தனையும் தரும் மரங்களுக்கு நாம பெரிசா என்ன கைமாறு செய்றோம்..? இப்படி என்னோட மனசுல எழுந்த கேள்விதான் இன்னிக்கு லட்சக்கணக்கான மரங்களா வளர்ந்து நிக்குது” என்று தத்துவார்த்துவமாகப் பேசும் ரவீந்திரன்... கடந்த பதினேழு வருடங்களாக மரம் வளர்ப்பதை ஒரு தவமாகவே மேற்கொண்டு வருகிறார்.

தான் படித்த பள்ளியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றும் இவர், அங்கே பணியில் சேர்ந்தபோது சில நூறு மரங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. இத்தனைக்கும் சுமார் 15 ஏக்கர் பரப்பிலானது அந்தப் பள்ளிக்கூட வளாகம். வெயில் கொளுத்திக் கொண்டிருந்த அன்றைய சூழலை மாற்றி, ‘வெயில் நுழையறியா குயில் நுழை பொதும்பு’ எனுமளவுக்கு சிறியதும், பெரியதுமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வரிசை கட்டி நிற்கும் காடாகவே இப்போது மாற்றிவிட்டார்.

ஒவ்வொரு மரத்தின் வயதையும், அதன் சிறப்பையும் சொல்லி நம்மிடம் பேசும் ரவீந்திரன், “பழனிமலை பாதுகாப்புக் குழுவின் இயக்குனரா இருக்கற கண்ணன்தான் முதன்முதல்ல 290 மரக் கன்னுங்கள இலவசமாக கொடுத்தாரு. அதை வாங்கிட்டு வந்து பள்ளிக்கூட வளாகத்துல நட்டுவெச்சேன். அந்தச் செடிகள்ல புதுப்புது தளிர் வர்றப்பல்லாம் மனசுல பட்டாம் பூச்சி பறக்கும். தினமும் தண்ணி விட்டு பக்குவமா பாத்துகிட்டதுல ஒரே வருஷத்துல செடியெல்லாம் என்ன விட உசரமா வளந்திருச்சி. அதிக மரங்களை நட்டு பாதுகாப்பா வளர்த்ததுக்காக மாவட்ட அளவுல கலெக்டர் கையால விருது கொடுத்தாங்க. அந்த விருதுதான் எனக்குள்ள ஒரு வேகத்தை ஏற்படுத்தி விட்டிருச்சி...'' என்று கண்களில் மின்னலடிக்கச் சொல்கிறார் ரவீந்திரன்.

அன்றைக்குப் பிறந்த வேகம் தான் மாவட்ட அளவிலான விருதுகள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது, கர்நாடக அரசின் விருது என்று விருதுகளாக வாரிக்குவிக்க வைத்திருக்கிறது.

இவரின் மரக்கன்று சேவையைப் பார்க்கும் பலரும், 'ஐயா... எனக்கு மரக்கன்னு வேணுமுங்களே'' என்று வரிசைக் கட்ட, அவர்களுக்கு தாராளமாக அவற்றை வழங்கிக் கொண்டிருக்கும் ரவீந்திரன், பத்துக்கும் மேற்பட்ட கன்றுகள் தேவையென்று சொல்பவர்களின் இடங்களுக்கு நேரடியாகவே கிளம்பிப்போய்விடுவாராம். மரக்கன்று நடப்படவி ருக்கும் இடத்தை நன்கு அலசி ஆராய்ந்துத் திரும்பும் ரவீந்திரன்... பிறகு, படையோடு அங்கே ஆஜராகி சொந்தச்செலவில் மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்துவிட்டு, வேலி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் ஏற்படுத்தி விட்டுத்தான் நகர்வாராம். நமக்குத் தேவையான ஏதாவது ஒரு வகை மரக்கன்று அவரிடம் இல்லையென்றால்.. எங்கே கிடைக்கும் என்று தேடிப்பிடித்து அதை வாங்கி வந்துக் கொடுக்காமல் ஓய்வதில்லை. “மரம் வளக்குறது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை. ஆனா, அதைச் செய்யுறவங்க ரொம்ப குறைவு. சும்மா மரத்தை நடுங்கனு சொன்னா யாரு கேக்குறா... அதனாலதான் இலவசமா கன்னுகளையும் கொடுத்து... வேலி போட்டு பாதுகாப்பு செய்தும் கொடுக்கிறேன். இதுக்காக யார்கிட்டயும் பணம் வாங்குறது கிடையாது. எங்க பள்ளி நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு கொடுக்குது. அப்புறம் ஏந்தல் பண்ணை அருண்நாகராஜன் எவ்வளவு கன்னு கேட்டாலும் காசு வாங்காம கொடுக்கிறாரு, பழனிமலை பாதுகாப்புக் குழு, தமிழக வனத்துறை, சுகுணா பவுல்ட்ரி, குமரன் நர்சரினு நல்ல மனசுள்ளவங்க செடிகளை இலவசமா கொடுத்து உதவுறாங்க. தமிழக சுற்றுசூழல் கழகத் தலைவர் அந்தோணிசாமியும் தேவை யான உதவியை செய்றார்.

நானும் செடிகளை உற்பத்தி செஞ்சிக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிக்கிற பசங்களோட வீடுகள்ல பயன்படுத்திட்டு தூக்கிப் போடுற பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பள்ளிக்கூடத்துல கிடைக்கிற மண்ணு,இங்கஇருக்கற மரத்துல இருந்து சேகரிக் கிற விதை இதையெல் லாம் வெச்சே நாத்துகளை உருவாக்கறேன். குழி எடுத்து வேலி போடுற துக்கு ஒரு குழுவை வெச்சிருக்கேன். அதுக்கான சம்பளத்தை நானே கொடுக் கிறேன். இந்தப் பூமியோட கண்மணிகள்னு நாம ஒவ்வொ ருத்தரும் பாதுகாக்கவேண்டி யது மரங்களைத்தான்ங்கறத எல்லாருக்கும் உணர்த்தறதுக் காகத்தான் நான் இத்தனையும் செய்றேன்” வானோங்கி நின்ற வாகை மரத்தைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னார்.

மரங்களை வளர்ப்பதற்காக ஊரெல்லாம் விருதுகளை வாங்கிக் குவிக்கும் ரவீந்திரன், தன் னிடம் பயிலும் மாணவர்களுக்கு தானே பரிசுகளை வழங்கி, மரம் வளர்க்கும் 'மாண்புமிகு மாணவர்கள்' என்று அவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார். பள்ளி வளாகத்தில் இருக்கும் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து அருகிலுள்ள குன்று, குளங்கள், கரடுகளில் விதையை தூவிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்காக விடுமுறை நாட்களை தேர்ந்தெடுக்கும் இவர், இப்பணியில் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார்.

மொட்டைக்கரடாக இருந்த கெங்குவார் பட்டி கரடு, அய்யம்பாளையம் முருகன் கோவில் கரடு, குட்டிக் கரடு, வத்தலகுண்டு கரடு என பல கரடுகள் இவரின் முயற்சியால் இன்றைக்கு பசுமைக் காடுகளாக காட்சியளிக்கின்னறன.

மதுரை-ராஜாஜி பூங்கா மற்றும் காந்தி அருங்காட்சியகம், நிலக் கோட்டை-காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வத்தலகுண்டு-காவல் நிலையம், திண்டுக்கல்- நீதிமன்றம், வத்தலக் குண்டிலிருந்து பள்ளபட்டி வரை செல்லும் இருபது கி.மீ. சாலையின் இருபுறம்... என இவரின் மரம் வளர்ப்புச் சாதனை நீள்கிறது.

பெருமைக்காகவும் புகழுக்காகவும் மரங்களை நட்டுக்கொண்டிருக்கும் பலர் வாழும் இந்தக்காலத்தில், எதையுமே எதிர்பார்க்காமல் கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் பசுமைச் சோலைகளை உருவாக்கி வரும் ரவீந்திரன்... உண்மையில் உலகமே கைதொழ வேண்டிய பச்ச மனுஷன்தான்!

வாகை முகத்தில் விழிக்கலாம்!
ஒவ்வொரு வகை மரத்தையும் எந்ததெந்த இடங்களில் நட்டு வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு சில யோசனைகளைச் சொல்கிறார் ரவீந்திரன்.

''வீடுகள்ல வளர்க்கறதுக்கு சரக்கொன்றை, சிகப்பு கொன்றை, முருங்கை இதுமாதிரியான மரம் ரொம்ப ஏத்ததா இருக்கும். நெட்டிலிங்க மரத்தையும் வீட்டுல வளக்கலாம். இந்த மரத்துக்கு இடியைத் தாங்குற வலிமை உண்டு. இடியோட வீரியம் அதிகமா இருந்தா, மரம்தான் கருகுமே தவிர வீட்டுக்கு ஆபத்து வராது. அதனாலதான் அந்தக் காலத்துல அரண்மனை, கோட்டைனு முக்கியமான இடங்கள்ல இதை நிறைய வளர்த்திருக்காங்க. 'சவுண்ட் பொல்யூஷன்'னு இங்கிலீஸ்ல சொல்லப்படுற ஒலி மாசைக் கட்டுப்படுத்துற சக்தி இந்த மரத்துக்கு இருக்கு. அதனால நகர்ப்புறங்கள்ல இதை அதிகம் வளர்க்கலாம்.

‘வாகை மூஞ்சியில விழிக்ககூடாது. அதனால வீட்டுல வளர்க்ககூடாது’னு ஒரு கருத்து மக்கள்கிட்ட இருக்கு. உண்மை என்னன்னா... வாகை நல்ல உறுதியான மரம். சிம்மாசனம், தேர்ச் சக்கரம், கோட்டை கதவுனு பலமான பொருட்களை இந்த மரத்துலதான் செய்வாங்க. இந்தப் பலகையில உளியை வெச்சி வேலைப் பாக்கும்போது, உளியே தெறிச்சிடுமாம். அதனால, ‘வாகை முகத்துலயே முழிக்ககூடாது’னு தச்சருங்க ஒரு பேச்சுக்கு சொல்வாங்க. அதுதான் காலப்போக்குல இப்படி மாறிப்போச்சி.

ராஜாக்கள் போர்ல வெற்றி பெற்றதுக்கு அடையாளமா வாகை பூவை மகுடத்துல சூடுவாங்க. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மரம். இதைவெச்சித்தான் ‘(வெற்றி) வாகை சூடினான்’னு சொல்றாங்க.

பள்ளிக்கூடங்கள்ல வேம்பு, புங்கன், இச்சி, நாவல், பன்னீர் மரங்கள் நடலாம். அதேபோல அரச மரமும் கட்டாயம் இருக்கணும். புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரம்தான் அரச மரம். இந்த மரம் வெளிப்படுத்துற ஒருவித வாயுவை சுவாசிக்கறப்ப ரத்தம் சுத்திகரிக்கப்படும், மூளையும் புத்துணர்வாகும்னு சொல்வாங்க. பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் லயும் இந்த மரத்தை நடலாம்.

ஆலமரம், மழை மரம் (தூங்கு மூஞ்சி), புங்கன், வேம்பு, புளிய மரமெல்லாம் பொது இடத்துல நடறதுக்கு ஏத்த மரங்கள்தான்.

சாக்கடை ஓரங்கள்ல நடுறதுக்கு புங்கன் சிறந்தது. சாக்கடையோட கெட்டவாடையைப் போக்குற தோட, அதிவேகமாவும் வளரும்’’ என்று காரண காரியங்களோடு விவரித்தார்.

\படங்கள்: என்.கர்ணன்