குமுறல்

ஜல்லிப்பட்டி பழனிச்சாமி

படியாத பேரம்.... முடியாத வேலை!

பல்லிளிக்குது பரம்பிக்குளம் - ஆழியாறு பராமரிப்பு

'நீர் இன்று அமையாது உலகு-
நிச்சயம்; அப்படியே அமையட்டும்-ஆனால்,
செருக்களத்து நீராம் செந்நீரும்
உருக்குலைந்த ஏழையின் கண்ணீரும்-அல்லாத
நீர் இன்று அமையாது உலகு-என
அப்பாடல் அமையட்டும்'

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எழுதி யிருக்கும் ஒரு பாடலை பொதுப்பணித்துறையின் இணைய தளத்தில் கொட்டை எழுத்துக்களில் போட்டு வைத்திருக் கிறார்கள். ஆனால், இதற்கு ஏதாவது அர்த்தம் தெரிந்து போட்டார்களா... இல்லை முதலமைச்சர் எதை எழுதினாலும் அதைப்போட்டு வைத்து பேர் வாங்குவதுதான் பொதுப்பணித்துறையின் 'முக்கிய கடமை' என்று போட்டு வைத்திருக்கிறார்களா எனத்தெரியவில்லை.

'ஆத்துலயும் கால்வாயிலயும் ஆயிரத்தெட்டு ஓட்டை... வந்துகிட்டிருக்கற கொஞ்ச நஞ்ச தண்ணீரும் கசிஞ்சி வீணா போயிக்கிட்டிருக்கு. ஏதாச்சும் நடவடிக்கை எடுத்து பாசனத்துக்கு தண்ணியைக் கொடுங்க சாமிகளா' என்று கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ.பி. பாசன (பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்) விவசாயிகள் பல ஆண்டுகளாக பொங்கி மாய்கிறார்கள். ஆனால், அசைந்தே கொடுக்கவில்லை அதிகார வர்க்கம்.

அப்படி இப்படி என்று இப்போது உலக வங்கியிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வாங்கியிருக் கிறார்கள். ஆனால், அதை வாங்கி மூலையில்போட்டு வைத்துக்கொண்டு, 'கமிஷனே கண்ணாயினார்' என்று காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது அதிகார வர்க்கம். அப்படியிருக்கும்போது மேற்கண்ட பாடலுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத்தானே தோன்றும்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று வீணாக கடலில் கலக்கும் நீரை அணைகட்டி தடுத்து, தேக்கி, கிழக்கு நோக்கிப் பாயவைத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட கோவை, ஈரோடு மாவட்டங்களில் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை பொன்விளையும் பூமியாக மாற்றிய அற்புதத் திட்டம்தான் பி.ஏ.பி. மலை மீதோடி வரும் நதிகள் மற்றும் நீரோடைகளைப் பயன்படுத்தி, அணைக்கட்டுகள்-11, மின்சார உற்பத்தி நிலையங்கள்-4 ஆகியவற்றை அமைத்து இரண்டு மாவட்ட விவசாயத்தை செழிக்க வைத்துக் கொண்டிருக்கும் இத்திட்டம், 1961-ம் வருடம் அன்றைய பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு மற்றும் தமிழக முதல்வர் காமராஜர் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்ட மாபெரும் திட்டம்.

இதற்கென இருக்கும் 126 கி.மீ நீளமுள்ள பிரதானக் கால்வாய்... 1,000 கி.மீ. தொலைவுக்கான பகிர்மானம் மற்றும் கிளை வாய்க்கால்கள் தற்போது மழை, புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களினால் இடிந்து, உடைந்து, சேதமடைந்து வருகிறது. இதன் காரணமாக பாசனத்துக்கு விடப்படும் தண்ணீர் வீணாகிறது. இதனால் கடைமடை பாசன விவசாயத் துக்கு சரிவர தண்ணீர் கிடைக்கவில்லை. இதைப்பற்றி நீண்டகாலமாகவே விவசாயிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்க, சமீபத்தில்தான் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் இறங்கினார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நீர் ஆதரங்களை மேம்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு சுமார் 400 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது உலக வங்கி. இந்தத் தொகையிலிருந்து 89 கோடியே 27 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பி.ஏ.பி. பாசனப் பகுதிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதைக்கொண்டு இங்குள்ள கால்வாய்கள், நீராதாரங்கள் எல்லாவற்றிலும் பரமாரிப்பு பணிகளைச் செய்து முடிக்கும் விதமாக பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் (பொள்ளாச்சி) அலுவலகம் மூலமாக டெண்டர் பெறப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. வழக்கமாக 90 நாட்களுக்குள் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கான பணிகள் ஒப்படைக்கப்படவேண்டும். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவே இல்லை.

அதிகாரிகள் இப்படி அலட்சியம் காட்டி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ.பி. பாசன நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் பரமசிவம், ''சட்டமன்ற தொகுதிகள் பத்து, நாடாளுமன்ற தொகுதிகள் மூன்று ஆகியவற்றை உள்ளடக்கியது பி.ஏ.பி. பாசனத்திட்டம். 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றுவருகிறது. ஆனால், சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால் நீர் தொடர்ந்து வீணாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக திருமூர்த்தி அணைக்கட்டுக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து நீர் கொண்டு வந்து சேர்க்கும் விதமாக, 53 கி.மீ. தூரத்துக்கு மலைகளை குடைந்து சுரங்க வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. காண்டூர் கால்வாய் என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், ஒரு முறை கூட சீரமைக்கப்படவில்லை. இதனால் கால்வாய் மோசமான நிலையிலிருக்கிறது. இதன் காரணமாக 30% அளவுக்கும் மேலான நீர் கசிந்து, ஆழியாறில் கலந்து கேரளாவுக்கேச் சென்று விடுகிறது.

விவசாயிகளின் ஒட்டு மொத்தக் கோரிக்கையில் முதலில் இருப்பது காண்டூர் கால்வாய் சீரமைப்பு என்பதுதான். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் பெருமழை காலத்தில் கூட எங்களின் 60 அடி உயர திருமூர்த்தி அணை மட்டும் 18 அடிதான் நிரம்பும். நீராதாரப்பகுதிகள் சீரமைக்கப்படவில்லை என்பதுதான் காரணம்.

‘உலக வங்கி நிபுணர்குழு’ நேரில் வந்து ஆய்வுசெய்தபிறகுதான் நிதியே ஒதுக்கப்பட்டது. ஆனால், டெண்டர் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், வேலை நடக்க வில்லை. தாமதம் ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரே ஒரு பச்சை மை கையெழுத்தை உரியவர் போட்டால் போதும். பாசனக் கால்வாய்களின் தலையெழுத்து மாறி, விவசாயிகள் மனம் குளிரும்'' என்று சொன்னார்.

''பணிகள் ஏன் துவங்கவில்லை?'' என்பது குறித்து கான்ட்ராக்டர் ஒருவரின் காதைக் கடித்தபோது, ''பி.ஏ.பி. பகுதியில செய்யவேண்டிய பராமரிப்புப் பணிகளை பகுதி பகுதியா பிரிச்சித்தான் டெண்டர் விட்டிருக்காங்க. கமிஷன் கணக்குல ஏகப்பட்ட இழுபறி.. அதான் வேலை இழுத்துக்கிட்டே கிடக்கு'' என்று சொன்னார்.

கொஞ்சம் விரிவாகப் பேசச் சொல்லிக் கேட்ட போது மனிதர் புட்டுப்புட்டு வைத்தார்.

''பொதுவா ஒரு வேலைக்கு கூடுதலா 10%, 20% வெச்சித்தான் டெண்டர் கேப்போம். அதாவது, வேலையோட திட்ட மதிப்பு 5 கோடி ரூபாய்னு வைங்க. அதுக்கு 5 கோடியே 50 லட்ச ரூபாய்னு டெண்டர் கொடுத்தா அது 10%.

அ.தி.மு.க. ஆட்சியில, 'இப்படியெல்லாம் பர்சன்டேஜ் ஏத்திக் கேக்கறவங்களுக்கு வேலையைக் கொடுக்கக் கூடாது. திட்டமதிப்பீடு என்னவோ அதன்படிதான் செய்யணும்'னு ஒரு முடிவெடுத்து வேலைகளைக் கொடுத்தாங்க. அரசியல்வாதிகளுக்குச் சேரவேண்டிய கமிஷன் தொகையையும் அதுக்குள்ளயே முடிச்சிக் கிட்டாங்க. அப்போ அரசியல்வாதிகளோட கமிஷன் 6%. ஆனா, ஆட்சி மாறினதுமே 10%, 15% இப்படி கமிஷனைக் கூட்டிட்டாங்க. இந்த அளவுக்கு கமிஷனைக் கூட்டிக்கொடுக்கணும்னா... வேலை எடுக்கும்போதே திட்டமதிப்புக்கு மேல இந்தத் தொகையையும் சேர்த்தால்தான் சரிப்பட்டு வரும். அதனால,பி.ஏ.பி.வேலை களுக்கு டெண்டர் கொடுத்த எல்லா கான்ட்ராக்டருமே 10%, 20%, 30% கூட வெச்சித்தான் கொடுத்திருங்காங்க. இந்த அளவுக்கு கூட வெச்சிக் கேக்கறவங்களுக்கு வேலைகளைக் கொடுத்தா, நாளை பின்ன ஏதாவது சிக்கல் வருமோனு தயங்கறாங்க. அதனாலதான் முடிவெடுக்கறதுல இந்தத் தயக்கம். சொல்லப் போனா யார் யாருக்கு கொடுக் கறதுனு முடிவாயிருச்சி. ஆனா, இந்த பர்சன் டேஜ்தான் இழுபடுது'' என்று உடைத்துச் சொன்னார்.

இதைப்பற்றியெல்லாம் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் மாணிக்கத்திடம் கேட்டபோது, ''டெண்டர்களை சென்னையில் உள்ள தேர்வுக் கமிட்டி பரிசீலனை செய்துவருகிறது. அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை'' என்று மட்டும் சொன்னார்.

அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, எதிரே வந்தார் உடுமலை வட்டம், துங்காவி கிராமத்தைச் சேர்ந்த பி.ஏ.பி. பாசன நீரைப் பயன் படுத்துவோர் சங்கத் தலைவர் பழனிச்சாமி.

''வறட்சியான காலத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கலாம். இதைப்பற்றிக் கேட்டபோதெல்லாம் ஐந்து மாத காலமாக போக்குக் காட்டிக்கொண்டே வந்தார்கள். இப்போது கேட்டால், 'ஆறுகளில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும்போது எப்படி வேலை செய்யமுடியும்?' என்று வாயடைப்பு வேலைகளைச் செய்கிறார்கள். இதைச் சொல்லியே இன்னும் 5 மாதங்களை ஓட்டிவிடுவார்கள். காரணம் தொடர்ந்து தண்ணீர் பாய்ந்து கொண்டே இருக்கும். உலக வங்கியிலிருந்து வந்த நிதி 89 கோடி ரூபாய் தூங்கிக்கொண்டி ருக்கிறது. பழுதடைந்துள்ள பி.ஏ.பி கால்வாய் களுக்கு விடிவுகாலம் எப்பொழுது என்று தெரியவில்லை. எல்லாமே சம்திங் உலக மாகிவிட்டது'' என்று கவலையுடன் முடித்துக் கொண்டார் பழனிச்சாமி.

தேர்தல் எப்போது?

பி.ஏ.பி. திட்டத்தில் மொத்தம் 150 பாசன சபைகள் உள்ளன. இதன் தலைவர்கள் சேர்ந்து, பகிர்மானக் குழுத்தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் திட்டக்குழுத் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள்தான் உலகவங்கி நிதி மற்றும் பராமரிப்பு பணிகள் சரிவர செய்யப்படுகிறதா? கடைசி மடை பாசனத்துக்கும் நீர் சரிவர சென்று சேர்கிறதா என்று கண்காணிப்பார்கள். ஆனால், பாசனசபை தேர்தலை நடத்தாமல் பொதுப்பணித்துறை காலம் கடத்தி வருவதாக குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.

\படங்கள்: தி.விஜய்