முறையீடு

கோவணாண்டி

''வேளாண் விஞ்ஞானியே வீதிக்கு வாங்க....‘‘

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கோவணாண்டி அழைப்பு

மகாகனம் பொருந்திய... ‘வேளாண் விஞ்ஞானி', 'ராஜ்யசபா உறுப்பினர்', டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அய்யா அவர்களுக்கு வணக்கமுங்க.
'பசுமைப் புரட்சி'னு ஒண்ணக் கண்டுபிடிச்சி... நம்ம நாட்டோட வறுமையை அந்தக் காலத்துல விரட்டி அடிச்சதுல உங்களுக்கும் முக்கியமான இடமிருக்கு... அதை வெச்சிக் கிட்டுத்தான் இன்னிக்கு வரைக்கும் உங்களை இந்த அரசாங்கமே தூக்கி வெச்சிக் கொண்டாடுது.

அதேசமயம், 'அந்தப் பசுமைப் புரட்சிதான், இன்னிக்கு நம்மளோட விவசாயிகள் மோசமான நிலைமைக்குப் போறதுக்கே காரணம்'னு நாலு பேரு அப்படி, இப்படி பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா, அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம, உங்க 'ஆராய்ச்சி'யிலயே கண்ணும் கருத்துமா போயிக்கிட்டிருந்த நீங்க, இப்ப விவசாயிகளோட கஷ்டங்களைப் பத்தி நல்லாவே பேச ஆரம்பிச்சிருக்கீங்க. அதுக்காக உள்ளபடியே நன்றி தெரிவிச்சிக்கறேணுங்க.

போனவாரம் கூட ஒரு இங்கிலீஸ் பேப்பரோட நடுப்பக்கத்துல நீங்க எழுதியிருக்கற கட்டுரையில இருக்கற விஷயங்கள எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார் சொல்லிச்சொல்லிப் புளகாங்கிதப் பட்டுக்கிட்டிருக்காரு. ‘கொலைக்களத்திலிருந்து புன்னகைக் களத்துக்கு'னு  (From killing fields to Smiling fields)  பிரமாதமான தலைப்பை வேற கொடுத்துட்டீங்களாம். காலையில அந்தப் பேப்பரை கையில வெச்சிக்கிட்டு, தன்னோட வீட்டைத்தாண்டி யார் போனாலும் கூப்பிட்டு வெச்சி... வரிக்கு வரி விளக்கம் சொல்லி சிலாகிச்சிக்கிட்டிருக்காரு.

''விவசாயிகள் பிரச்னையில மத்திய-மாநில அரசுகளோட அலட்சியப்போக்கு அதிகமாயிடுச்சினு சுவாமிநாதன் அய்யாவே தடிப்பான வார்த்தைங்களப் போட்டுத் தாக்கியிருக்காரு''னு பூரிப்பா திரியறாரு.

''மகாராஷ்டிரா, ஆந்திரானு சில மாநிலங்கள்ல நடக்கற விவசாய தொடர் தற்கொலை களைத் தடுக்க, 17 ஆயிரம் கோடி ரூபாயை ‘சாவு நிவாரண நிதி’யா கொடுத்திருக்கார் பிரதமர் மன்மோகன் சிங். பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைக் கண்டு பிடிச்சி உயிர்ப் பிச்சை கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கார். அதுல இதுவரை 9,000 கோடி ரூபாயை காலி செய்து அதிகாரிங்க ஏப்பம் விட்டிருக்காங்க. விவசாயி களோட தற்கொலை மட்டும் நின்ன பாடில்ல. இதுக்கெல்லாம் காரண மென்ன?''னு அந்தக் கட்டுரையில கேட்டு, தூள் கிளப்பிட்டீங் களாம்ல!

'சாவு நிவராணத் திட்டமும், அதுக்காக ஒதுக்கப்பட்ட பணமும் குரங்கு கையில் கொடுத்த பூமாலை' கதையாப் போயிருக்கறத எங்க இங்கிலிபீஸு வாத்தியாரு தமிழ்ல சொல்லச் சொல்ல... நாடி நரம் பெல்லாம் ஒரு நிமிஷம் வீறிட்டுக் கிளம்பிடுச்சிங்க. அந்த நேரம் அவரு வீட்டு வாசல்ல கூடி நின்ன தமிழ் இளசுங்க கூட, 'இளைய தளபதி' விஜயையும் 'அழகுத் தலைவி' அசினையும் கொஞ்ச நேரத்துக்கு மறந்து போனாங்கனா பார்த்துக்கங்க.

'எரியற வீட்டுல புடுங்கின வரை லாபம்'னு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒதுக்கின பணத்துலயும் கொள்ளையடிச்சிருக்கற அக்கிரமக்கார அதிகாரிங்களை யெல்லாம் தூக்குத் தண்டனைக்கும் மேல வேற ஏதாவது தண்டனை இருந்தா கூட அதுல தூக்கிப் போடலாம். ஆனா, இதையெல்லாம் சுட்டிக்காட்டிப் போராடுறதுக்கு ஆள் இல்லையே..! தற்கொலை செய்துகிட்ட விவசாயிகளோட இளம் விதவைகள், குழந்தைங்க படுற வேதனையை உலக அளவுல இருக்கற டி.வி-யில எல்லாம் படம் பிடிச்சிக் காட்டி உருகுறாங்க. ஆனா, நம்ம ஊர்ல 24 மணிநேரமும் சினிமாவையும் நடிகர்-நடிகை களையும் காட்டியே இளசுங்களோட எதிர்காலத்தை உருக்கறாங்க. 'நடிகை நமீதா போட்டிருக்கிற சட்டை பத்தியெல்லாம் 'திருவிளையாடல்' படத்து கூந்தல்வாசனை மாதிரி பட்டிமன்றம் வெச்சி அலப்பரை பண்றாங்க.

''தீவனத்துக்கே வழி இல்லாதவங்களுக்கு கலப்பின மாடு; நிலம், நீர் இல்லாதவங்களுக்கு வீரிய ஒட்டு ரக, பி.டி. ரக விதை கொடுத்ததா கணக்குக் காட்டியே 'சாவு நிவாரண நிதி'யிலிருந்து 9,000 கோடி ரூபாயைக் கரைச்சிடடாங்க. சாவு நிவாரண நிதி, காவு வாங்கும் நிதி'யாக தொடருது. மனித நேயமும், விவசாய அறிவும் இல்லாத அதிகாரிங் களால எல்லாமே வீணாப்போயிடுச்சி.

இந்தத் தற்கொலைப் படலம், கிராமங்களோட ஆன்மாவையே அசைச்சுப் போட்டிருக்கு. சுயசார்பு, சமூக சார்பு எல்லாம் சிதைஞ்சிப் போயிடுச்சி. கைகொடுத்துக் காப்பாத்தறதுக்கு பதிலா, தற்கொலைக் குடும்பங்களை ஊரைவிட்டே தள்ளி வெச்சிட்டாங்க. சமூக அவமானத்தால அந்தக் குடும்பமெல்லாம் கூனிக் குறுகி, ஒதுங்கிக் கிடக்கு. பண ஆறுதலை விட மன ஆறுதலே அவங்களுக்கு உடனடித் தேவை''னு பொங்கி மாய்ஞ்சிருக்கீங்களாம்.

''போனது போகட்டும், இனியாவது நல்லபடியா இருக்க முயற்சிப்போம். செலவில்லாத... அதாவது சாகுபடிச் செலவே இல்லாத விவசாயத்துக்கு மாறுங்க. இதுதான் உடனடித் தேவை''னு  (Low or no risk technologies are the need of the hour)  சொல்லியி ருக்கீங்க.

''கடைக்குப்போய் கண்டகண்டதையும் கடன் பட்டு வாங்கி வயல்ல போடாதீங்க. உங்ககிட்ட ஆடு, மாடு இல்லையா? அறிவியலோடு கூடிய இயற்கை விவசாயமே சாலச் சிறந்தது  (Scientific organic farming will reduce debt load, because of the substitution of market purchased inputs with home-grown ones).  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கத்துக் கணும். விவசாயக் கழிவுகளை பக்குவமா பயன் படுத்தி, 'பயோமாஸ்' தயாரிக்கணும்...''னு வரிசையாச் சொல்லியிருக்கீங்களாமே! சொன்னது சரி... சொன்ன விதம்பத்தி ஒரு சின்ன கருத்து..

காலகாலமா விவசாயிங்க கண்டுபிடிச்சி பயன் படுத்திக்கிட்டிருக்கற விஷயங்களையெல்லாம் பேப்பர்ல எழுதி, பெரிய இடத்துல காண்பிச்சி, 'விஞ்ஞானி'னு பேரை வாங்கிக்கிட்டுப் போயிடறாங்கனு ஒரு சில விவசாய விஞ்ஞானிகள பத்தி ஏற்கெனவே நம்ம ஊருக்குள்ள கெட்டபேர் இருக்கு. இந்த சந்தர்ப் பத்துல நீங்களும் இதமாதிரி பேசினா நல்லாவா இருக்கும்...?

இப்ப நீங்க சொல்ற விஷயங்களைத்தான் உங்க கும்பகோணத்துக்குப் பக்கத்துல இருக்கற தஞ்சாவூரைச் சேர்ந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கரும் மாறி மாறி பல வருஷமா சொல்லிக்கிட்டிருக்காங்க. 'ஜீரோ பட்ஜெட்'டுங்கற பேர்ல பாலேக்கர் சொல்ற விஷயங்களை 'பசுமை விகடன்'ல கூட எட்டு, ஒன்பது மாசமா எழுதிக் கிட்டே இருக்காங்களே. அப்படியிருக்கும்போது அவங்களை மறக்காம நீங்க மேற்கோள் காட்டியி ருக்கலாமே... ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினா நிலைமை இதுதான்னு 'பட்'னு உடைச்சிருக்கலாமே... அதைச் சொல்றதுக்கு எது தடுக்குதுனுதான் தெரியலையே?!

அதேசமயம் ''விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யணும்’'னு நீங்களும் வாய்திறந்து ஆச்சர்யப்படுத்திட்டீங்க.

நாப்பது வருஷத்துக்கு முன்ன 'பசுமை புரட்சி'க்கு வித்திட்ட நீங்க, 'நல் விதை, நல் உரம், நல் விளைச்சல்'னு சொன்னீங்க. அப்பவே, அதோட, 'நல்விலை'னு ஒண்ணையும் சொல்லி, அதையும் விவசாயிகளுக்குக் கொடுக்க வெச்சிருக்கலாம். அப்பத் தப்புப் பண்ணிட்டீங்க.

'கட்டுப்படியான விலை வேண்டும்'னு நம்ம விவசாயிங்க இவ்வளவு நாளா கூப்பாடு போட்டுக் கிட்டிருக்கறது... இந்திய விவசாயக் கமிஷனோட தலைவரான உங்க காதுலயே இத்தனை நாளா விழாம போனது எங்களோட துரதிர்ஷ்டம்தான். 'ஒரு பட்டி ஆடுங்களுக்கு கருத்தடை செய்யறதை விட, ஒரேயரு கிடாவுக்குச் செய்துட்டா போதும்'னு புரியற பாஷையிலதான் நானும் கூட சொல்லிக் கிட்டிருக்கேன். ஆனா, இந்தக் கோவணாண்டி சொன்னா யாரு கேக்கறாங்க. ஏதோ எங்க நல்ல காலம், கோட்-சூட் போட்ட நீங்க, இப்பவாச்சும் எங்கள மாதிரியே சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. நடந்து போன வரலாற்றுத் தவறை இப்பவாவது திருத்தப் பார்க்கறீங்க. அந்த வரையில சந்தோஷம்தான்.

பி.டி. விஷயத்துல கூட நீங்க சொல்லியிருக்கறத கேக்கறதுக்கே புல்லரிக்குதுங்க. ''புதிய தொழில் நுட்பங்கள்... சிறுவிவசாயிகளுக்கு கூட ஏற்றதாவும், சுதேசித் தன்மை கொண்டதாவும் இருக்கணும். நாக்பூர்ல இருக்கற 'மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம்', உள்நாட்டிலேயே மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) பருத்தியைக் கண்டுபிடிச்சிருக்கு. இந்த நல்ல முயற்சியை ஊக்குவிக்காம, அனுமதிக்காம பன்னாட்டு வியாபாரக் கம்பெனிகளோட விதைகளை மட்டும் அனுமதிச்சது விவாதத்துக்குரியது'னு சுட்டிக்காட்டி யிருக்கீங்க.

அப்பவும் கூட, சும்மா நடுமண்டையில 'நச்'சுனு அடிச்ச மாதிரி, 'பரதேசி'ங்களோட பணத்துக்கு ஆசைப்பட்டு, 'சுதேசி' விதைச் சுதந்திரத்தை வித்துப் போட்டாங்கனு நேரடியாகவே சொல்லமாட்டேங் கறீங்க... இதுதான் உங்கமேல வருத்தமா இருக்கு!

கடைசியா, ''வறுமையுற்ற விவசாயிங்களோட பிரச்னைகளை கிராமசபைங்கள்ல விவாதிக்கணும். அவங்களோட கஷ்டநஷ்டங்களை தெரிஞ்சிக்கிட்டு, கைகொடுக்கணும்''னெல்லாம் வேற சொல்லியிருக் கீங்களாமே...

ஐயா, நாட்டையே ஆட்டிப்படைக்கற ராஜ்யசபாவுல உட்கார்ந்திருக்கிற நீங்க... சும்மா காலணா டீ வாங்கக்கூட அதிகாரமில்லாத கிராமசபாவுல போய் இதையெல்லாம் விவாதிக்கணும்னு சொல்றீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா. 'நான் சொல்றத அரசியல்வாதிங்க யாரும் கேக்கற தில்ல... செயல்படுத்தறதில்ல'னு பலவருஷமாகவே நீங்க ஆதங்கப்படுறதை நான் கேட்டிருக்கேன். அதனாலதான் ராஜ்யசபாவுல இருந்துகிட்டே நீங்க கிராமசபா பக்கம் கையைக் காட்ட ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கு. ஆக, நம்ம நாட்டோட நிலைமை இதுதான்னு உங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சி போச்சி. அதுக்குப்பிறகும் அவங்களோட சேர்ந்து ராஜ்யசபாவுல உக்காந்துகிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க. அவங்க யாரும் விவசாயிகளுக்குத் துணையா வரப்போறதில்ல.

உண்மையிலயே விவசாயிகளுக்கு ஏதாவது செய்யணும்னு உங்களுக்கு ஆர்வமிருந்தா... சட்டுனு வீதிக்கு வாங்க. நீங்க சொல்றத கேக்கறதுக்கு ஒரு கூட்டமிருக்கு. உங்க பேச்சைக் கேக்கக்கூடாதுனு சொல்ற கூட்டமும் இருக்கு. ஆனா, வீதியில இறங்கி நீங்க விவசாயிகளுக்காக போராட ஆரம்பிச்சா, எதிர்க்கற கூட்டம் கூட, 'ஏற்கெனவே விடாப்பிடியா இருந்த சில கொள்கைகளுக்கு இப்ப பிராயச்சித்தமா... வீதியில இறங்கிவிட்டார் எம்.எஸ்.சுவாமிநாதன்'னு மனசுமாறி உங்க கூட வந்து நிக்கும்.

பேசுறவங்க எதையாவது பேசிட்டு நிக்கட்டும்... அதைப்பத்தி நமக்கெதுக்கு கவலை? நமக்கு வேண்டிய தெல்லாம் விவசாயிகளுக்கு நல்லது நடக்கணும்... என்ன ஐயா சொல்றீங்க?!

இப்படிக்கு