பிரச்னை

கரு.முத்து

‘‘நடந்தா வருகிறாய்,காவேரி..?‘‘

கடைமடைகளின் கண்ணீர் கேள்வி!

'டம... டம... டம....'

''எல்லாரும் கேட்டுக்கங்க... காவிரி ஆத்துல தண்ணி வரத்து குறைஞ்சிப் போனதால... டெல்டா பிரதேசமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட பாசனத்துக்கு இனிமே முறை வைச்சித்தான் தண்ணி திறக்கப்படும்...''

'டம... டம... டம...'

-தமிழகப் பொதுப்பணித் துறையின் இந்த அறிவிப்பு, டெல்டா விவசாயிகள் மத்தியில் கிலி கிளப்பியிருக்கிறது.

வழக்கமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் சம்பா நடவுப் பணிகள் முடிந்துவிடும். ஆனால், இந்த வருடம் அக்டோபர் 25-ம் தேதியைத் தாண்டியும்... 70% இடங்களில்தான் நடவுப் பணிகள் முடிந்திருக்கின்றன. மீதமுள்ள 30% இடங்கள் கடைமடைப் பகுதிகள். காவிரி நீர் இதுவரை சரிவர இந்தப் பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை என்பதுதான் காரணம். இந்த நிலையில், 'முறை நீர்ப்பாசன' அறிவிப்பை வெளியிட்டு, ஆரம்ப மடைகளில் இருக்கும் விவசாயி களின் வயிற்றெரிச்சலையும் சேர்த்து வாரிக் கட்டிகொண்டிருக்கிறது பொதுப்பணித்துறை.

கடந்த சில மாதங்களில் தன்னுடைய முழுக்கொள்ளளவான 120 அடியை ஐந்து முறை தொட்டுவிட்டது மேட்டூர். இப்போது கூட 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. அப்படி இருந்தும், இன்று வரை கடைமடைக்கு சரியாக தண்ணீர் கிடைக்கவில்லை. தெற்கே அறந்தாங்கியில் ஆரம்பித்து, வடக்கே கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குராஜன் வாய்க்கால் வரை உள்ள பகுதியை டெல்டா மாவட்டங்களின் கடைமடை என்று சொல்லலாம். இந்தப் பகுதிகளில் இன்றளவும் தண்ணீர் பற்றாக்குறைதான். உதாரணமாக, வீராணம் ஏரிப்பாசன பகுதியில் பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் நாற்று பறிப்பது தடைபட்டுக் கிடக்கிறது. அதேபோல், சீர்காழி பகுதியில் புதுமண்ணியாற்றுப் பாசனத்தில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்களில் தண்ணீர் குறைவாகவே செல்கிறது. அதனால் அங்கும் விவசாய வேலைகளில் ஆமை வேகம்தான். பூம்புகாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய வேலைகளை இப்போதுதான் துவக்குகிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகள்தான் மிகவும் பாவம் செய்தவை. ‘மேட்டூரில் திறந்துவிடப் பட்ட தண்ணீர் இன்னும் இங்கு வந்து சேரவே யில்லை. நடந்தாய் வாழி காவேரினு பாடுனதால... காவிரி ஆமைவேகத்துல நடந்தா வருது..?’ என்று குமுறுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

ஒட்டுமொத்த டெல்டாவின் கடைமடைப் பகுதிகள் சோகத்தில் ஆழ்ந்திருப்பது குறித்து, வீராணம் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் பேசும்போது, ‘‘ஆறுகள், கால்வாய்கள் முறையாக தூர் வாரப்படாததுதான் கடைமடைக்கு தண்ணீர் வராததற்குக் காரணம். ஆறுகளில் தேவை யான அளவு தண்ணீர் போனாலும், பாசன வாய்க்காலில் ஏறிப்பாய முடியாத நிலைதான் உள்ளது. ஆறுகள் பள்ளமாகவும், வாய்க்கால்கள் மேடாகவும் இருக்கின்றன. அவசர அவசரமாக ஆறுகளை தூர்வாரினார்களே தவிர, அதிலிருந்து பிரியும் 'ஏ' பிரிவு வாய்க்கால்களை கண்டுகொள்ளவே இல்லை. இப்போது அதைப்பற்றி சிந்தித்துப் பலனில்லை என்றாலும், வேறு வகையில் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேட்டூரில் தேவையான நீர் இருப்பு இருப்பதால் கூடுதலாக நீரைத் திறந்துவிட்டு, அதனை கடைமடைக்கு கொண்டுசெல்லலாம்.

அப்படி செய்யாமல் தண்ணீர் திறப்பதைக் குறைத்து, முறை நீர்ப்பாசனத்தை ஆரம்பித்து விட்டனர். எப்படி இருந்தாலும் சீக்கிரமே பருவ மழை ஆரம்பித்துவிடும். அப்போது மேட்டூர் திரும்பவும் நிரம்பிவிடும். கடந்த முறை செய்ததுபோல, உபரித் தண்ணீரை அப்படியே கடலுக்கு தான் திருப்பி விடுவார்கள். அதற்கு பதிலாக இப்போது திறந்து விட்டால், பற்றாக்குறையைப் போக்க முடியும். மழைநீரையும் சேமிக்க முடியும்'’ என்று சொன்னார்.

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், ‘‘சம்பந்தப்பட்ட விவசாயிகளை கேட்டு முடிவெடுத்தால்... அது உண்மையான தீர்வாக இருக்கும். ஆனால், அதிகாரிகளாகவே நடவடிக்கை எடுத்துக்கொள்ளும் கொடுமைதான் நடக்கிறது. நீர் மேலாண்மை என்பது கொஞ்சம்கூட சரியில்லை. பருவமழை காலத்து உபரிநீரை புதுக்கோட்டைக்குத் திருப்பி விடலாம் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், அங்குள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இன்னும் தூர்வாரப்படாமல் வறண்டு கிடக்கின்றன. இதற்கெல்லாம் ஒரே தீர்வு... முடிவு எடுக்கும் இடத்தில் விவசாயிகள் இருக்க வேண்டும்’’ என்று கொதிப்போடு பேசினார்.

பொதுப்பணித்துறையின் தஞ்சை கோட்ட மேற்பார்வை பொறியாளர் கணேசனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் பருவமழை காலதாமதம் ஆனதுதான். வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் மழை ஆரம்பித்துவிடும். விவசாயமும் தங்கு தடையில்லாமல் நடக்கும். இந்த வருடம் மழை இல்லாததாலும், மேற்கே ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் நடவு ஆரம்பித்துவிட்டார்கள். பற்றாக்குறைக்கு அதுவும் ஒரு காரணம்.

அதற்காகத்தான் முறைவைத்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி தண்ணீர்விடப்படும். இதன் மூலம் முழு அளவில் ஒரே பகுதிக்கு தண்ணீர் போவதால் அனைவருக்குமே பற்றாக்குறை நீங்கும்’’ என்று சொன்னவரிடம்,

''மேட்டூரில் இருந்து கூடுதலாக தண்ணீரை கேட்டுப் பெறலாம் என்கிறார்களே விவசாயிகள்?'' என்று கேட்டோம்.

அதற்கு, ‘‘இதுவரை இல்லாத வரலாறாக நடப்பு மாதத்தில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பத்தாயிரம், பன்னிரண்டாயிரம் கன அடிதான் திறக்கப்பட்டது. இப்போதுள்ள பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது’’ என்று அழுத்தமாகச்... சொன்னார் கணேசன்.