பிரீமியம் ஸ்டோரி

இலவசப் பயிற்சிகள்

கறியாடு வளர்ப்பு!

##~##

திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 20-ம் தேதி, கறவைமாடு வளர்ப்பில் தீவன மேலாண்மை 21-ம் தேதி கறியாடு வளர்ப்பில் நவீன யுத்திகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

வண்ண மீன்கள்!

சென்னை, மாதவரம் பால்பண்ணையில் உள்ள மீன் வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நவம்பர் 27, 28, 29-ம் தேதிகளில் 'வண்ண மீன் மற்றும் உயிர் உணவுகள் உற்பத்தியில் நவீனத் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-25556750

தண்டோரா

மரம் ஏறும் பயிற்சி!

தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில், தென்னை சாகுபடி மற்றும் மரம் ஏறும் பயிற்சி, 12-ம் தேதி வாழையில் நூற்புழு மேலாண்மை, 19-ம் தேதி கால்நடைகளில் மழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கூட்டு மீன் வளர்ப்பு, 21-ம் தேதி அலங்கார மீன் வளர்ப்பு, பால் பண்ணை அமைத்தல் மற்றும் பராமரித்தல், நெல்லியில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 99429-78526

தீவன மேலாண்மை!

தேனி மாவட்டம், அல்லிநகரம் உழவர் பயிற்சி நிலையத்தில் நவம்பர் 19, 20-ம் தேதிகளில் கறவை மாடு வளர்ப்பின் மூலம் சுயவேலை வாய்ப்பு, 26, 27-ம் தேதிகளில் கால்நடைத் தீவன மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04546-260047

தேனீ வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் நவம்பர் 19-ம் தேதி தேனீ வளர்ப்பு 20-ம் தேதி சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல், 28-ம் தேதி கறவைமாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

நெல் சாகுபடி!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் கிராமத்தில், கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நவம்பர் 16, 17-ம் தேதிகளில் பருவநிலை மாற்றத்துக்கேற்ப பாரம்பரிய நெல் சாகுபடி, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94433-20954, 98426-07609

தண்டோரா

நடைபயணம்!

பாலாறு பாதுகாப்பு விழிப்பு உணர்வு இயக்கத்தின் சார்பில், நவம்பர் 24-ம் தேதி, பாலாற்றைப் பாதுகாக்கும் விழிப்பு உணர்வு நடைபயணம் நடைபெறுகிறது. 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் நடைபயணத்தைத் தொடங்கிவைத்து, சிறப்புரை ஆற்றுகிறார்.

தொடர்புக்கு, செல்போன்: 94432-29414, 94436-25808

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு