Published:Updated:

கோயம்புத்தூரில்... விவசாயக் கண்காட்சி...!

கோயம்புத்தூரில்... விவசாயக் கண்காட்சி...!

##~##

கோயம்புத்தூரில் சர்வதேச விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கண்காட்சி டிசம்பர் 5, 6, 7, மற்றும் 8 ஆகிய 4 நாட்கள், சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள விஜயா கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுபற்றி பேசும் கண்காட்சி ஏற்பாட்டாளர் பாலசுந்தரம், ''தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விவசாய இடுபொருள் சங்கம் ஆகிய அமைப்புகள் ஆதரவு அளித்திருப்பதுடன், இதில் பங்கேற்கவும் உள்ளனர்.

கண்காட்சியில், விவசாயத்துக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள், மத்திய, மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் என 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. டிசம்பர்-6 அன்று வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கருத்தரங்கு, 7-ம் தேதி தேசிய அளவிலான டீலர்கள் சந்திப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கோயம்புத்தூரில்... விவசாயக் கண்காட்சி...!

அதிகமகசூல், புதிய கண்டுபிடிப்பு, வியக்கத் தக்க வளர்ச்சி அடைந்த காய், கனிகள் மற்றும் எடை அதிகமான ஆட்டுக்கிடா, கம்பீரமான காளை, அதிக பால் கொடுக்கும் பசு... போன்ற வற்றை கண்காட்சிக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும். கோயம்புத்தூர் நகரின் முக்கிய இடங்களிலிருந்து கண்காட்சி வளாகத்துக்கு வந்து செல்வதற்கு, இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது'' என்று சொன்னார்.

- தி. ஜெயபிரகாஷ்
தொடர்புக்கு,
தொலைபேசி: 0422 2525197,
செல்போன்: 81223-23555