Published:Updated:

25 ஆயிரம் ரூபாய் ஈமு... பத்தே ரூபாய்!

ஜி. பழனிச்சாமி படம்: தி. விஜய்

பிரச்னை

##~##

ஈமு கோழியை வைத்து மோசடித் தொழில் செய்து, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த 23 நிறுவன அதிபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட... அவர்களின் பண்ணைகளில் இருந்த ஆயிரக்கணக்கான ஈமு கோழிகள் தீனியின்றி வாடின. கொத்துக்கொத்தாக இறக்கவும் செய்தன. இதைக் கண்ட அரசு, கோழிகளுக்கு தீனி கொடுத்து பராமரித்து வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், கோழிகளை ஏலம்விட்டு வரும் பணத்தை, ஏமாந்த முதலீட்டாளர்களுக்குப் பிரித்து கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிடவே, ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 17-ம் தேதி ஏலம் நடைபெற்றது. இதில், 'ஒரு ஈமு 10 ரூபாய்' என்கிற விலையில் வியாபாரிகள் கேட்க... அதிர்ந்து போனது, மாவட்ட நிர்வாகம். பின்னே... ஒரு ஈமு 25 ஆயிரம் ரூபாய் என்கிற விலையில், விவசாயிகள் தலையில் கட்டப்பட்டது முன்பு. இப்போது வெறும் பத்தே ரூபாய்க்குப் போனால், அதிராமல் என்ன செய்ய?

25 ஆயிரம் ரூபாய் ஈமு... பத்தே ரூபாய்!

இதைப்பற்றி மாவட்ட வருவாய் அலுவலர், எஸ். கணேஷிடம் பேசியபோது, ''முதல் கட்டமாக பெருந்துறை சுசி ஈமு பண்ணையில் இருந்த 7 ஆயிரத்து 372 ஈமு கோழிகளை ஏலம்விட முடிவெடுத்தோம். ஆனால், ஒரு கோழி 10 ரூபாய் என கட்டுப் படியாகாத விலை கேட்டதால், ஏலத்தை

25 ஆயிரம் ரூபாய் ஈமு... பத்தே ரூபாய்!

ஒத்தி வைத்தோம். மீண்டும் மாலையில் நடத்தியபோது, ஒரு கோழி 50 ரூபாய் விலையில், 4 ஆயிரத்து 600 ஈமு கோழிகள் ஏலம் போயின. மீதமுள்ள கோழிகள் படிப்படியாக ஏலம் விடப்படும்'' என்றார்.

'நம்ம பணம் திரும்ப கிடைச்சுடும்’ என்கிற நம்பிக்கையில், ஏல மையத்தில் குழுமியிருந்த முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே!

அவர்களில் ஒருவரான பல்லடம், சுப்பிரமணியம், ''ஈமு கோழிகளை மட்டும் ஏலம் விட்டா போதுமா? அந்த மோசடிக் காரங்க, எங்கள ஏமாத்தி சேர்த்து வெச்சுருக்கற பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக் களையும் ஏலம் விட்டாத்தான், பாதிப்பணமாவது திரும்பக் கிடைக்கும்'' என்று குமுறினார்.