Published:Updated:

மண்புழு மன்னாரு!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'உலக நீதி’ங்கிற புத்தகத்துல, 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’னு சொல்லியிருப்பாங்க. இதை, ஆன்மிக ரீதியா மட்டும் சொல்லல. அறிவியல் ரீதியாவும் சொல்லியிருக்காங்க. அந்த காலத்துல எவ்வளவு பணக்காரங்களா இருந்தாலும், ஊர்ல இருக்குற கோவில் கோபுரத்தைவிட உயரமா வீடு கட்ட மாட்டாங்க. அப்படி கட்டினா... 'வீட்டோட சேர்ந்து குடும்பமும் அழிஞ்சுடும்’னு நம்பிக்கை இருந்துச்சு. இது பொய்யில்லீங்க... உண்மைதான். மூடநம்பிக்கையை வளர்க்கற விதமா பேசுறதா நினைச்சுடாதீங்க. 'இப்படி கட்டின வீடு, இடி தாக்கி மொத்தமா அழிஞ்சுபோச்சு தெரியும்ல'னு சொல்லக் கேள்விப்பட்டிருப்பீங்க. இதுலதான் விஷயமே இருக்கு.

கோவில் கோபுரம், விமானங்கள்ல தாமிரத்தாலான கலசங்கள் இருக்கும். அந்த கலசங்களுக்குள்ள வரகு தானியத்தை கொட்டி வெப்பாங்க. அந்த கலசத்தை செம்மரக் கட்டையில பொருத்தி, கோபுரம், விமானம்னு மேல நிக்க வைப்பாங்க. இந்த உலோகங்களுக்கும், வரகுக்கும் மின்காந்த அலைகளை ஈர்க்கற சக்தி இருக்குது. குறிப்பா, செம்மரக் கட்டைகளுக்கு அணுக்கதிர் வீச்சு மாதிரியான அபாயகரமான கதிர் வீச்சுக்களைத் தடுக்கிற சக்தி உண்டுனு இப்ப இருக்கிற விஞ்ஞானிங்க சொல்றாங்க. ஆனா, அதை பல ஆண்டுகளுக்கு முன்னாடியே, நம்ம பெரியவங்க கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க. இதை நினைக்கறப்ப, ஆச்சர்யமா இருக்குல்ல.

இடி இடிக்கிறப்போ கோபுரத்தோட உச்சியில இருக்குற இந்த உலோகங்களும், வரகு, செம்மரக் கட்டை இதெல்லாம், அந்த மின்சாரத்தை ஈர்த்துடும். அதனால, சுற்றுவட்டாரத்துல வேற எங்கயும் இடிவிழுந்து பாதிப்பு ஏற்படாது. அதனாலதான், வீடுகளை கோபுர உயரத்துக்கு மேல கட்டக்கூடாதுனு சொல்லுவாங்க.

மண்புழு மன்னாரு!

கோபுர கலசங்கள்ல மின்னல் தாக்கறதால, கலசத்துல இருக்கற தாமிர உலோகம் வேதிமாற்றமடைஞ்சு, அதுல இரிடியம்கிற உலோகம் உருவாகும். இதுக்கு தங்கத்தைவிட, கூடுதல் விலை கிடைக்கும். அதனாலதான், ஊருக்குள்ள களவாணிப் பயப்புள்ளைக.. கோவில் கலசங்களைத் திருடிக்கிட்டு திரியுதுங்க.

கோபுர கலசங்கள்ல தானியங்களை போட்டு வெச்சதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஏதாவது, பஞ்சம், வெள்ளம் வந்து ஊருல இருக்குற அத்தனையையும் அடிச்சுட்டுப் போயிட்டாகூட... கலசத்துல சேமிச்சு வெச்சுருக்குற தானியங்கள எடுத்து விதைச்சு பெருக்கிடலாங்கிற புத்திசாலித்தனத்தோடவும்தான் அதைச் செய்துருக்காங்க. பொதுவா, கலசத்துக்குள்ள வரகைத்தான் அதிகமா கொட்டுவாங்க. இப்போ, விஞ்ஞானிங்ககூட, 'வரகுக்கு இடியைத் தாங்குற சக்தி உண்டு’னு, கண்டுபுடிச்சுருக்காங்க. கலசத்துக்குள்ள கொட்டுற வரகுக்கு 12 வருஷம் வரைக்கும்தான் வீரியம் இருக்குமாம். அதனாலதான், வரகை மாத்துறதுக்காகத்தான் 12 வருஷத்துக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தணும்கிறத ஒரு விதியாவே ஏற்படுத்தி கடைபிடிச்சுட்டு வந்தாங்க அந்த காலத்துல. இப்ப இதெல்லாம் காலாவதியாகிப் போயிடுச்சு.

மண்புழு மன்னாரு!

'நீங்க இளமையா இருக்கணுமா... ஒல்லியா, ஒய்யார இடுப்போட இருக்கணுமா... ஓட்ஸ் கஞ்சி குடிங்க’னு விளம்பரம் பண்றாங்க. ஆனா, அமெரிக்காவுல இருக்குற ஏஞ்சலீனா ஜோலிங்கிற ஹாலிவுட் நடிகை '40 வயசுலயும் நான் இளமையா இருக்க காரணம், இந்தியாவுல இருந்து இறக்குமதி செஞ்சு சாப்பிடற வரகு, தினை... மாதிரியான சிறுதானியங்கள்தான்’னு சொல்லிட்டிருக்காங்க. வரகுல, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம்னு ஏராளமான சத்துங்க கொட்டிக் கிடக்குது. வரகுல, முறுக்கு, அதிரசம்னு நிறைய சுவையான பலகாரங்களும் செய்யலாம்.

வரகுல, சாதாரண வரகு, பனிவரகுனு ரெண்டு வகை இருக்கு. சாதாரண வரகு 120 நாள்ல அறுவடைக்கு வரும். பனிவரகு 75 நாள்லயே அறுவடைக்கு வந்துடும். பனிவரகை புரட்டாசி-ஐப்பசி மாசத்துல விதைச்சா, கிடைக்கிற மழை, பனியை வெச்சே, விளைஞ்சுடும். ரெண்டு ரகத்தையுமே மானாவாரியாவும் விதைக்கலாம். பாசன வசதி இருந்தா, மகசூல் அதிகமா கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு