பிரீமியம் ஸ்டோரி

பசுமைக் குழு

பட்டு வளர்ப்பு!

##~##

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் நிலையத்தில், டிசம்பர் 18-ம் தேதி பட்டு வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பங்கள், 20-ம் தேதி மதிப்புக்கூட்டிய காளான் உணவுப் பண்டங்கள் தயாரித்தல், 27-ம் தேதி வான்கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

முயல் வளர்ப்பு!

மதுரை, திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 17-ம் தேதி கறவை மாடு வளர்ப்பு, 18-ம் தேதி லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு, 19-ம் தேதி முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

மூலிகை மருத்துவம்!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 12-ம் தேதி கறவை மாடுகளில் மூலிகை மருத்துவம், 17-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மை, 19-ம் தேதி மண், நீர்ப் பரிசோதனையின் முக்கியத்துவமும், ஆய்வு செய்யும் முறைகளும் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

தண்டோரா

ஆடு வளர்ப்பு!

தேனி மாவட்டம், அல்லிநகரம், உழவர் பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆடு வளர்ப்பின் மூலம் சுயவேலைவாய்ப்பு, 26 மற்றும் 27-ம் தேதிகளில் கோழி வளர்ப்பு (நாட்டுக் கோழி, வான்கோழி, காடை, கறிக்கோழி) ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04546-260047

வெள்ளாடு!

சேலம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 19-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பும், நோய் கட்டுப்பாட்டு மேலாண்மையும் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

மஞ்சள் சாகுபடி!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 17-ம் தேதி உயிர் உரம் தயாரித்தல், 19-ம் தேதி மஞ்சள் சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி தொழில்நுட்பம், 20-ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல், 27-ம் தேதி வாழையில் மதிப்புக் கூட்டும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, 30-ம் தேதி பாரம்பரிய பயிர் ரகங்களைக் காத்தல் மற்றும் உழவர்களின் உரிமை பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626  

இயற்கைக் கருத்தரங்கு!

பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் சார்பில், டிசம்பர் 29-ம் தேதி, இயற்கை விவசாய முறையில் கீரை, காய்கறிகள் சாகுபடி பற்றிய கருத்தரங்கம், பாரம்பரிய காய்கறி விதைகள் மற்றும் பசுமை விகடன் இதழ்களின் கண்காட்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

இடம்: கே.எஸ்.ஆர். சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபம், பண்ருட்டி.

தொடர்புக்கு, செல்போன்: 94437-26533, 97903-27890

(குறிப்பு: கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகளுக்கு மட்டும்)

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு