Published:Updated:

''பயறு சாகுபடி செய்யலாம் வாங்க..!''

''பயறு சாகுபடி செய்யலாம் வாங்க..!''

பிரீமியம் ஸ்டோரி
''பயறு சாகுபடி செய்யலாம் வாங்க..!''
##~##

யறு மற்றும் தானியங்கள் பற்றிய உலகளாவிய கருத்தரங்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கோவாவில் நடைபெற இருக்கிறது. இதைப் பற்றி, சென்னையில், டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பகிர்ந்து கொண்ட இந்திய பயறு மற்றும் தானியச் சங்கத் தலைவர், பிரவீண் டோங்க்ரே, ''உலக அளவில், பயறு வகை தானியங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாதான் முன்னிலை வகித்து வருகிறது. நம்முடைய அன்றாட உணவில் பயறுகள் முக்கிய இடம்பெற்றுள்ளன. பயறு வகை உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் புரதச் சத்துக்களைக் கொடுக்கக் கூடியவை. ஆனால், நமக்குத் தேவையான அளவுக்கு இங்கே உற்பத்தி இல்லை என்பதால், இறக்குமதி செய்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

நம் நாட்டில் வளமான நிலம் உள்ளது. அதில் அதிக பரப்பளவில் பயறு வகை சாகுபடியை செய்தால், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், மக்களுக்கும் சத்தான உணவு கிடைக்கும். இதற்காகத்தான், கோவா மாநிலத்திலிருக்கும் கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி - 19 முதல் 21 வரை 'பயறு கருத்தரங்கு - 2014’ (The pulses conclave 2014) எனும் சர்வதேச நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் உலகின் பல நாடுகளில் இருந்து விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,

இணையதளம்:

- க. பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு