Published:Updated:

தேவை ஆராய்ச்சி அல்ல, மனசாட்சி !

தேவை ஆராய்ச்சி அல்ல, மனசாட்சி !

தேவை ஆராய்ச்சி அல்ல, மனசாட்சி !

தேவை ஆராய்ச்சி அல்ல, மனசாட்சி !

Published:Updated:
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், மரபணு மாற்றுப் பயிர்கள் மூலமாகவே உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-இப்படி 'இலவச' ஆலோசனையை அள்ளி வழங்கியிருக்கிறார், நோபல் பரிசு பெற்ற, வெளிநாட்டு வாழ் இந்தியரான 'விஞ்ஞானி' வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

மரபணு மாற்றுப்பயிர் தொழில்நுட்பத்தை உலகம் முழுக்க பரப்பிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆனால், அந்த நாட்டிலேயே எதிர்ப்பு உள்ளது. ஐரோப்பிய நாடுகள், 'மரபணு மாற்றுப் பயிர்' என்றாலே... கதவை அடைத்து விடுகின்றன. அதனால்தான், இந்தியா, ஆப்பிரிக்கா என்று வளரும் மற்றும் ஏழை நாடுகளைக் குறி வைத்து, மரபணு மாற்றுப் பயிர் சோதனைகளைப் பிரசாரம் செய்கின்றன, அமெரிக்க நிறுவனங்கள். இதற்கு நடுவேதான், இப்படிப்பட்ட 'இலவச ஆலோசனை'கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன!

''மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மூலமாக அக்கம் பக்க வயல்களிலும் மரபணு மாற்றுப் பயிர்கள் பரவி, மலட்டு விதைகளை உற்பத்தி செய்துவிடும். இயற்கையாக வளர்ந்து கிடக்கும் புல், பூண்டுகள்கூட மலட்டுத் தன்மை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு, காலம் முழுக்க கம்பெனிகள் விதை கொடுத்தால் மட்டுமேதான் பயிர் செய்யும் நிலை உருவாகும்.

மரபணு மாற்றுப்பயிர்களால் உண்டாகும் நன்மை, தீமை பற்றிய முழுமையான ஆய்வுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. ஆய்வு செய்வதற்குரிய ஆய்வக வசதிகளும் இந்தியாவில் இல்லை. இப்படிப்பட்டச் சூழலில், மரபணு மாற்றுப்பயிர்களை இங்கே அனுமதிக்கக் கூடாது' என்று இயற்கை ஆர்வலர்களும், இயற்கை விஞ்ஞானிகளும் எழுப்பி வரும் சந்தேகங்கள்... ஒதுக்கித் தள்ளப்படக் கூடியவை அல்ல!

இருக்கின்ற விதைகளை வைத்துக் கொண்டே... இன்னும் மூன்று உலகத்துக்கு இங்கே சோறு போடமுடியும். இதற்கு தேவை ஆராய்ச்சி அல்ல... மனசாட்சி! ஆம், இப்படி ஆலோசனை சொல்லும் விஞ்ஞானிகளும்... அரசியல்வாதிகளும் தங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்வார்களா.... இங்கே காரணமே இல்லாமல் வீணடிக்கப்படும் உணவு தானியங்களின் அளவு எவ்வளவு என்று?!

-ஆசிரியர்