Published:Updated:

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

Published:Updated:
##~##

சந்தைத் தகவல்களை விவசாயிகளுக்கு அளிப்பதற்காக, தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், உருளைக்கிழங்கு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''செப்டம்பர் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரை நடவு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அறுவடை செய்யப்படும்.

தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 'குப்ரி ஜோதி’ மற்றும் 'குப்ரி கிரிராஜ்’ ஆகிய ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. எங்கள் மையத்தின் மூலமாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய உருளைக்கிழங்கு விலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, கடைசிபோக உருளைக்கிழங்குக்கு, ஜனவரி மாதம் வரை கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விலை கிடைக்கும் எனத் தெரிய வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்தால் மட்டுமே, விலை அதிகரிக்கும். அதனால், உருளைக்கிழங்கை இருப்பு வைக்காமல், உடனே விற்பனை செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், 0422-2431405 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.

 ''மாவட்டம்தோறும்... விவசாயக் கண்காட்சி வேண்டும்!''

இன்றைய விவசாய கண்காட்சிச் சூழலில் விவசாயத்தில் முன்னேறுவதற்கு, தொழில்நுட்பங்கள் அவசியம். இதை விவசாயகளிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில், சர்வதேச வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக் கண்காட்சி, டிசம்பர்

5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நான்கு நாட்களுக்கு கோவை, சிங்காநல்லூர், விஜயா கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. நூற்றியிரு பதுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப் பட்டிருந்தன. சோலார் விசைத்தெளிப்பான், சொட்டு நீர் கருவிகள், வங்கிக்கடன் ஆலோசனை கள் தரும் அரங்குகள் என்று பலவற்றையும் தேடிப்போய் விசாரித்தனர் விவசாயிகள்.

உருளைக்கிழங்கு, இருப்பு வேண்டாம்!

''ஆள்பற்றாக்குறை, வறட்சியால் கிடைக்கும் குறைவான பாசன நீர் இப்படிப்பட்ட சூழலில், ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரியான விஷயங்களை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொண்டு செயல்படுத்துவது முக்கியம். அதற்கு, இதுபோன்ற கண்காட்சிகள் அவசியம்'' என்று சொன்ன பொன்னேகவுண்டன்புதூர் விவசாயி சுந்தரமூர்த்தி,

''எல்லா ஸ்டால்களும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. ஆனால், பட்டுப்பூச்சி மற்றும் கால்நடை வளர்ப்புக்கான அரங்குகள் குறைவாகவே இருந்தன. வேளாண் பல்கலைக்கழக ஸ்டால்களில் காற்றாலை, சோலார், பயோடீசல் என்று மாற்று எரிசக்திக்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் ஸ்டால்கள் இல்லை. நீர்மேலாண்மை குறித்த அரங்குகளும் குறைவுதான். எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் அரசாங்கமே தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் கண்காட்சிகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்'' என்று சொன்னார்.

ஞா.சுதாகர்
படங்கள்: தி.விஜய்