Published:Updated:

மண்புழு மன்னாரு!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு!

மாத்தி யோசி ஓவியம்: ஹரன்

Published:Updated:

மார்கழியிலயே மழையைக் கண்டுபிடிக்கலாம்!

##~##

மார்கழி மாசம் பொறந்தாச்சு. காலையிலயே எழுந்திருச்சு கோலம் போடறது... கோயில்ல போய் நின்னு சுடச்சுட பொங்கல் வாங்கிச் சாப்பிடறதுனு பலருக்கும் குஷியா இருக்கும். இந்த மாசத்துக்கு மட்டும் எதுக்காக இந்தக் கொண்டாட்ட மெல்லாம். நம்ம முன்னோருங்க எதையுமே சும்மா சொல்லி வைக்கலீங்க. அதுலயும் இந்த மார்கழி இருக்கே... மார்கழி. இது ரொம்ப ரொம்ப சிறப்பான மாசம். இந்த மாசத்துலதான், ஒசோன் படலம் பூமியை நெருங்கி இருக்கும். இதனால, சுத்தமான காத்து கிடைக்கும். இதை சுவாசிச்சா... உடம்பு உற்சாகமா இருக்கும். அதனாலதான், விடியறதுக்கு முன்னயே வாசல்ல கோலம் போடணும்... கோயில், பஜனை மடங் கள்ல... பொங்கல் கொடுக்கணும்கிற மாதிரியான பழக்கங்களை ஏற்படுத்தி வெச்சுருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செஞ்சு செயற்கைக்கோள் விட்டு, 'மழை வருமா, வராதா?’னு கம்யூட் டரைப் பாத்து கணிச்சு சொல்றாங்க. ஆனா, 'அடுத்த வருஷம் மழை பெய்யுமா, வறட்சியா இருக்குமா?’னு... இந்த வருஷத்து மார்கழி மாசத்து வானத்தைப் பார்த்தே கண்டுபிடிச்சு சொல்றத நம்ம முன்னோருங்க வழக்கத்துல வெச்சுருந்தாங்க. மார்கழி மாசத்துக்கு 'சூழ் மாதம்’னு ஒரு பேரு இருக்கு. அடுத்த வருஷத்துல பெய்யப் போற மழை, மார்கழி மாசமே சூழ்கொண்டுடுமாம். அந்த விவரத்தைப் பாட்டாவே பாடி வெச்சுருக்காங்க.

'தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்
தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக
காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே'

சூரியனின் போக்கு, ராசி, நட்சத்திரத்தோட பயணம் இதையெல்லாம் சொல்ற இந்த பாட்டுல நாம தெரிஞ்சுக்க வேண்டியது... உத்தேசமா டிசம்பர் மாசம் 28-ம் தேதியில இருந்து ஜனவரி மாசம் 11-ம் தேதி வரைக்கும் வானம், மப்பும், மந்தாரமுமா, மேகமூட்டமா இருந்தா, சந்தோஷப்படுங்க! அடுத்த வருஷம் கட்டாயம் நல்ல மழை கிடைக்கும். ஆனா, சுள்ளுனு வெயில் கொளுத்துச்சுனா... அடுத்த வருஷம் மழை, மாரி சொல்லிக்கற மாதிரி இருக்காது.

மண்புழு மன்னாரு!

இந்த அறிகுறிகள வெச்சே... அடுத்த வருஷத்துக்கு என்ன பயிர் செய்யலாம்னு திட்டம் போடுங்க. இன்னும்கூட கிராமப் பகுதியில இப்படியெல்லாம் கணிச்சு, பயிர் பண்றது நடந்துக்கிட்டுத் தான் இருக்கு. இப்படி கணிக்கறத... 'கர்ப்போட்டம்', 'கருவோட்டம்'னு ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு பேர்ல சொல்றாங்க.

மார்கழி மாசம் பனி பெஞ்சி, ஊரெல்லாம் குளிரா இருக்கும். அதனால முள்ளங்கி, சௌசௌ, சுரைக்கா... மாதிரியான குளுமையான காய்கறிகளை மக்கள் வாங்க மாட்டாங்க. இந்த காய்கறிகளுக்கு நல்ல விலையும் கிடைக்காது. அதனால, இந்தக் காய்களை வெள்ளாமை பண்றப்பவே, அறுவடை எந்த மாசத்துல வரும்கிறத கணிச்சு, தகுந்த மாதிரி விதைச்சா... நஷ்டப்படாம தப்பிக்கலாம்.

கத்திரி, வெண்டைனு காய்கறிகள சாகுபடி செய்யறவங்க... வரப்பைச் சுத்தி கம்புப் பயிரை விதைச்சு விட்டா... கம்மங்கதிரைத் திங்க வர்ற குருவிங்க, காய்கறிச் செடிகள்ல இருக்கிற பூச்சி, புழுக்களையும் 'ஸ்வாகா’ பண்ணிட்டுப் போகும். பூச்சிக்கொல்லி தெளிக்கிற செலவும், வேலையும் மிச்சமாகும்.