Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:

பசுமைக் குழு

இலவசப் பயிற்சிகள்

கொடிவகைக் காய்கறிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜனவரி 7-ம் தேதி மண்புழு உரம் மற்றும் வெர்மி வாஷ் (மண்புழு குளியல் நீர்) தயாரிப்பு முறைகள், 9-ம் தேதி கொடி வகைகள்- பாகல், புடலை, தர்பூசணி, வெள்ளரி, பரங்கி, சுரைக்காய் சாகுபடித் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி கலப்பின செம்மறியாடு வளர்ப்பு, 23-ம் தேதி உயர் ரக காடை வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04286-266345

வான்கோழி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 27-ம் தேதி வான்கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

தண்டோரா

கோழி வளர்ப்பு!

தேனி மாவட்டம், அல்லிநகரம் உழவர் பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் கோழி வளர்ப்பு (நாட்டுக் கோழி, வான்கோழி, காடை, கறிக்கோழி) பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04546-260047

வாழையில் மதிப்புக் கூட்டுதல்!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 27-ம் தேதி வாழையில் மதிப்புக் கூட்டும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, 30-ம் தேதி பாரம்பரியப் பயிர் ரகங்களைக் காத்தல் மற்றும் உழவர்களின் உரிமை பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626  

கட்டணப் பயிற்சி  

கால்நடை மூலிகை வைத்தியம்!

மதுரை சேவா நிறுவனம்-பிச்சாண்டிக்குளம் மூலிகைப் பண்ணை சார்பில் டிசம்பர் 28-29 தேதிகளில் கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம், மனிதர்களுக்கான மூலிகை மருந்துப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 300 ரூபாய். இடம்: ஆரோவில் மூலிகைப் பண்ணை, நடுக்குப்பம், மரக்காணம் தாலூகா, விழுப்புரம் மாவட்டம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2380082, செல்போன்: 84894-50825