Published:Updated:

அமோக மகசூல்!

அமோக மகசூல்!

அமோக மகசூல்!

அமோக மகசூல்!

Published:Updated:
##~##

னைவருக்கும் பசுமை வணக்கம்!

தை மாதம்... விவசாயிகளுக்கும் மகசூல் மாதம். பசுமை விகடனுக்கும், அதுவே! ஆம், ஒவ்வொரு ஆண்டின் சிறப்பிதழிலும், பலன்பெற்ற விவசாயிகளில் சிலர்... 'படிச்சோம், விதைச்சோம்’ என்ற தலைப்பில் பக்கம் பக்கமாக பேசுவதுதான் பசுமை விகடனின் மகசூல். வழக்கம் போலவே, இந்த எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்கும் நல்ல அறுவடைதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமோக மகசூல்!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன், விவசாயத்தையும் தீவிரமாக மேற்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நம்பிக்கை ஊற்றெடுக்கிறது!

ஆடு, மாடு, கோழி போல... பன்றி வளர்ப்பும், இன்று பெருமைக்குரியதாக மாறியிருப்பதுதான் ஆச்சர்யம்! பன்றி வளர்ப்பில் சாதித்துக் கொண்டிருக்கும் கோட்டைமுத்து... அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஜொலிக்கிறார்!

இன்னும்...

''எங்க தோட்டத்துல இருக்கற அத்தனையுமே, 'பசுமை விகடன்’ எங்களுக்குக் கொடுத்த பரிசுதான். எங்க தோட்டத்துக்கு வாங்க'' என்று அன்போடு அழைப்பு விடுக்கும் நாகப்பட்டினம் நண்பர்கள் சிவக்குமார், அமீது!

''பலவித இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, பாரம்பரிய ரகங்கள்ல அருமையான மகசூல் அள்ளுறேன்'' என்று சிலாகித்துச் சொல்லும் திருக்கோவிலூர் அருள்மொழி!

''நான்கே மாதம்... நாலு லட்சம்... வெற்றிகரமான லாபம் தரும் வெள்ளரி'' என்று உற்சாகமாகச் சொல்லும் திருப்பூர் சாமிநாதன்-பழனிச்சாமி சகோதரர்கள்!

''பசுமை விகடனைப் படிச்சேன்... பாறையிலயும் பயிர் வளர்த்தேன்'' என்று சொல்லும் புதுக்கோட்டை கணபதி...

''மதிப்புக்கூட்டும் மந்திரம் தொடர், இன்னிக்கு என் வாழ்க்கையில ஒளி ஏத்தி வெச்சுருக்கு'' என்றபடி, நெல்லிக்காயை மதிப்புக் கூட்டி லாபம் பார்க்கும் திண்டுக்கல் ஜெயக்குமார்!

என்று ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒவ்வொருவரும் பேசியிருப்பதைக் கேட்கக் கேட்க... பெற்ற மனதுக்கு இணையான பூரிப்பு பொங்குகிறது! அதேசமயம், 'உங்களின் பொறுப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது' என்கிற அன்பான எச்சரிக்கையும் மனதுக்குள் பிறக்கிறது.

இணைவோம் ஓர் இயக்கமாக!

 ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism