Published:Updated:

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

Published:Updated:
##~##

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையோடு கலந்துவிட்ட செய்தி... வேளாண் சமூகத்தையும், அவர்பால் ஈடுபாடு கொண்ட இளைஞர் சமூகத்தையும் இன்னும் அதிர்ச்சியிலேயே வைத்திருக்கிறது. கடந்த இதழில், வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு... தொலைபேசி, செல்போன், கடிதம், இ-மெயில் என்று பசுமை விகடனுக்குத் தொடர்ந்து தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்தபடியே இருக்கின்றனர். அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு...

இயற்கை எய்திய இயற்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொலைந்துபோன பாரம்பரிய விவசாய முறைகளை, நாம் மீட்ªடுக்கப் போராடிய 'பசுமைப் போராளி’ நம்மாழ்வார். அவரை, பெருவாரியான மக்களிடம் கொண்டுசேர்த்த பெருமை பசுமை விகடனையே சாரும்! கடந்த இதழின் அட்டைப் படத்தில் வெளியான அவருடைய ஓவியத்தைப் பார்த்தபோது, 2008-ம் ஆண்டு செப்டம்பர் 10 தேதியிட்ட இதழில் 'இயற்கை எய்திய இயற்கை’ என்ற தலைப்பில் 'மசானோபு ஃபுகோகா’ மறைந்த செய்தி பற்றி நம்மாழ்வார் எழுதியிருந்ததுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

'இயற்கையாகவே வாழ்ந்த இயற்கை’யான நம்மாழ்வார் எழுதி வந்த 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். 38 அத்தியாயங்கள் வந்துவிட்டன. '39-ம் அத்தியாயத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டார்’ என்ற செய்தியைப் படித்தேன். அதற்குள் காலம் அவசரப்பட்டு, அவருடைய இறுதி அத்தியாயத்தை எழுதிவிட்டது. ஆனாலும், ஐயாவைப் பற்றிய மற்ற பல செய்திகளையும், புகைப்படங்களையும், ஹரன் அவர்களின் ஓவியங்களுடன் வெளியிட்டு, தொடரை முழுமையாக்கித் தருமாறு வாசகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

- எம்.கே. அருண்பாபு, கடலூர்.

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

உள்ளத்தில் ஏற்றி வைப்போம்...

ஆண்டுக்கு ஒரு முறை இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் பற்றி சிறப்பிதழ் வெளியிட ஏற்பாடு செய்து, அதற்கு 'நம்மாழ்வார் சிறப்பிதழ்’ என்று பெயர் வைத்தால்... காலமெல்லாம் நம்மாழ்வார் ஏற்படுத்தி வந்த இயற்கை விழிப்பு உணர்வைத் தொடர்ந்து மக்களிடம் ஊட்டுவதற்கு நிகரானதாக இருக்கும்!

நம்மாழ்வாரின் பூத உடல்தான் மறைந்துள்ளது. ஆனால், ஆசிரியர் கூறுவதுபோல இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஒவ்வொருவரிடமும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது உண்மையே! அந்த இயற்கை விவசாய ஜோதியை, இயற்கை ஆர்வலர்கள் ஒவ்வொருவரது இல்லத்திலும், உள்ளத்திலும் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

-வி. கார்மேகம், தேவகோட்டை.

நாட்டை மாற்ற வேண்டும்!

நம்மாழ்வாரின் உடல்தான் மறைந்து விட்டதேயன்றி, அவரது வழிகாட்டுரைகள் நம் காதுகளில் கேட்காத நிலை ஏற்பட்டு விடவில்லை. அவர் எழுதியவை நம் கண்களில் தோன்றாமல், கருத்தினை அடையாமல் போய்விடும் நிலை தோன்றிவிடவில்லை. எனவே, ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் முற்றாகத் தவிர்த்து, இயற்கை வேளாண்மையைக் கைக்கொள்ளுதலே மண், நீர், காற்று, மனிதர், கால்நடை என அனைவருக்கும் நலம் தரும். இதை அடித்தளமாகக் கொண்டு, தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட இளைஞர்கள் முன்வரவேண்டும்!

-கி. இளங்கோ, அஸ்தம்பட்டி.

பசுமைத் தாத்தா சொல்லைத் தட்டாதே!

'இயற்கைதான் தேவை' என்று முழங்கியவரை, இயற்கை, தன் தேவைக்கு எடுத்துக் கொண்டது.’ நெகிழ்ச்சி அளிக்கும் கட்டுரை. இளைய சமுதாயமே, 'பசுமைத் தாத்தா' சொல்லைத் தட்டாதே..!

-சரவணன்

பென்னிகுக் பொங்கல்!

''ஒரு நாட்டுல பஞ்சம், பசியைப் போக்கி, வறட்சியை விரட்டுறதுதான் சாமீனா... எங்க குலசாமி 'பென்னிக்குக்’தான். நூறு, நூத்தம்பது வருஷத்துக்கு முன்ன பொழப்பு தலப்புக்கு வழியில்லாம, பொண்டு... பொடுசுங்க எல்லாம் கொத்துக்கொத்தா செத்த சமயத்துல... எங்கயோ, பொறந்து, எங்கயோ வளர்ந்த அந்த மவராசன் மட்டும் முல்லை-பெரியாறு அணையைக் கட்டலைனா, இந்த ஊரு இருந்த இடத்துல புல் பூண்டு கூட மிஞ்சிருக்காது'' என உணர்ச்சிகரமாகப் பேசுகிறார் தேனி மாவட்டம் பாலர்பட்டியிலிருக்கும் 'பென்னிகுக் எழுச்சி பேரவை'யின் தலைவர், ஓ. ஆண்டி.

உள்ளத்தில் ஏற்றி வைத்து, அணையாமல் காப்போம்!

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் முல்லை- பெரியாறு அணை கட்டிய கர்னல். பென்னிகுக் நினைவாக, அவருடைய பிறந்த தினமான ஜனவரி 15 அன்று பொங்கல் வைப்பது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது... இக்கிராமத்தில் ஆண்டாண்டு காலமாகத் தொடர்கிறது. இந்த ஆண்டும் உற்சாகம் குறையாமல் அதைக் கொண்டாடினார்கள்!

பின் குறிப்பு: லோயர்கேம்ப் பகுதியில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் பென்னிகுக் மணி மண்டபத்தில் பொங்கல் வைக்கவோ, விளக்குகள் போடவோ அனுமதி மறுத்துவிட்டது, தமிழக அரசு.

ஆர். குமரேசன்
படங்கள்: வீ. சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism