Published:Updated:

புதுசு...இது,புதுசு !

ஜி.பழனிச்சாமி படங்கள்: ர.சதானந்த்

புதுசு...இது,புதுசு !

ஜி.பழனிச்சாமி படங்கள்: ர.சதானந்த்

Published:Updated:
புதுசு...இது,புதுசு !
புதுசு...இது,புதுசு !

விழா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒவ்வொரு ஆண்டும் உழவர் தினவிழாவையட்டி புதிய பயிர் ரகங்கள், பண்ணைக் கருவிகள், வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 11\ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான உழவர் தின விழாவில்... வெளியிடப்பட்ட புதிய ரகங்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் இங்கே விளக்கமாக இடம்பிடிக்கின்றன...

 நம்மாழ்வாருக்கு அஞ்சலி!

தமிழ்நாடு வேளாண்மைத்துறை ஆணையர் மு. ராஜேந்திரன் பேசும்போது, ''நம்முடைய வேளாண்மைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஐயா நம்மாழ்வார், இயற்கை வேளாண்மையை மக்களிடம் கொண்டுச் செல்ல அரும்பாடுபட்டார். அப்படிப்பட்ட சிறந்த மனிதருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்'' என்று சொல்லி அஞ்சலி செலுத்தியவர், அதன் பிறகு பேச்சைத் தொடர்ந்தார். அப்போது, ''தமிழ்நாட்டில் மொத்தம் 70 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேமிக்க இவை பயன்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கிறது. இதனால் எல்லா போகத்திலும் விவசாயத்தை மேற்கொள்ள முடியும். இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை முறையாக செய்தால் வெற்றி பெறலாம்'' என்று சொன்னார்.

புதுசு...இது,புதுசு !

 காலியாகிப் போன கரிம சத்து!

உழவர் தின விழாவில், தமிழ்நாடு வேளாண்மைத்துறை ஆணையர்

மு. ராஜேந்திரன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். கு. ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துக்கருப்பண்ணசாமி, சேலஞ்சர். துரை உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள், மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய துணைவேந்தர் ராமசாமி, ''இயற்கையான சத்துக்கள்தான், மண் வளத்தை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்குவதற்கான முக்கிய காரணிகள். தீவிர பயிர் சாகுபடியின் காரணமாக மண்ணில் உள்ள கரிம சத்துக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டில் 1.20 சதவிகிதமாக இருந்த கரிம சத்துக்களின் அளவு, 2008-ம் ஆண்டில் 0.68 சதவிகிதமாகக் குறைந்துள்ளது'' என்கிற பகீர் உண்மையை உரக்கச் சொன்னார்.

புதுசு...இது,புதுசு !

தொடர்ந்து பேசிய துணைவேந்தர், ''வேளாண் வளர்ச்சியானது, பயிர் மாற்று முறை, நிலங்களைப் பசுமையாக்குதல், துல்லியப் பண்ணையம், புதியத் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வசதியை ஏற்படுத்துதல்... போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றை செயல்படுத்துவதன் மூலம் 4 சதவிகித வளர்ச்சி  விகிதத்தை எளிதாக அடைய முடியும். திருந்திய நெல் சாகுபடி, திருந்திய கரும்பு சாகுபடி, துல்லியப் பண்ணைத்திட்டம், நீர்வள, நிலவளத்திட்டம், ஒருங்கிணைந்தப் பண்ணையம் போன்ற தொழில்நுட்பங்கள் இந்த வளர்ச்சிக்கு உதவுகின்றன'' என்றும் சொன்னார்.

புதுசு...இது,புதுசு !
புதுசு...இது,புதுசு !

 பேட்டரி வாகனங்கள்!

பல்கலைக்கழக வளாகம் மிகவும் பெரியது. இங்குள்ள துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருக்கின்றன. பல்வேறு வேலைகளுக்கு இங்கே வரும் விவசாயிகள், ஒவ்வொரு துறைக்கும் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து செல்லும் சிரமத்தைக் குறைப்பதற்காக பேட்டரியால் இயங்கும் கார், ஸ்கூட்டர் மற்றும் மிதி வண்டிகள் தற்போது வாங்கப்பட்டுள்ளன. இவற்றை இலவசமாகவே விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதுசு...இது,புதுசு !

தானியங்கி விதை வழங்கும் கருவி!

ஏ.டி.எம். வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் பல்கலைக்கழத்தின் தாவரவியல் பூங்கா வாயில் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதில், காய்கறிகள், கீரை மற்றும் மலர் சாகுபடிக்கான சிறிய அளவிலான விதை பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 10 ரூபாய் நோட்டு ஒன்றை இதில் செருகி, நமக்கு தேவையான விதையின் பெயரைத் தட்டினால், விதை பாக்கெட் வெளியே வந்து விழும்.

புதுசு...இது,புதுசு !

வேளாண் செம்மல் விருது பெற்ற விவசாயிகள்!

விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதுடன், பெண்களுக்கு மதிப்புக்கூட்டல் பயிற்சியும், விழிப்பு உணர்வும் கொடுத்து வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி; திருந்திய நெல் மற்றும் திருந்திய கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்ததுடன், 150 விவசாயிகளைக் கொண்ட நிறுவனத்தைத் தொடங்கி விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகளை நியாயமான விலையில், விற்பனை செய்து வரும் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த கரிகாலன்; கடந்த 20 வருடங்களாக தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி; வாழை சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்ததுடன், மற்ற விவசாயிகளுக்கும் அதைக் கற்றுக்கொடுத்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா; திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்ததுடன், மற்ற விவசாயிகளுக்கும் அதற்கான வயல்வெளிப் பயிற்சியை அளித்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய ஐவருக்கு 'வேளாண் செம்மல் விருது’ வழங்கப்பட்டது.

புதுசு...இது,புதுசு !

 'பசுமை நண்பர்கள்..!’

தேசியப் பல்லுயிர் பரவல் ஆணையத்தின் 10-ம் ஆண்டு விழா, ஜனவரி 20-ம் தேதி சென்னை, தரமணியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய ஆணையத்தின் தலைவர் பாலகிருஷ்ண பசுபதி, ''பசுமைப் பொருளாதாரம், பசுமை வீடுகள், பசுமை மின்சாரம் என, எந்தப் பக்கம் திரும்பினாலும், பசுமைதான் பேச்சாக இருக்கிறது. பசுமை பற்றிய விழிப்பு உணர்வு, உலகம் முழுக்கவே வேகமாகப் பரவி வருகிறது.

புதுசு...இது,புதுசு !

பல்லுயிர் நிறைந்து வாழும் பகுதிகளில் இந்தியாவும் ஒன்று. இங்குள்ள அரிய வகைப் பயிர்களையும், உயிரினங்களையும் காப்பதுதான் இந்த ஆணையத்தின் கடமை. வருங்காலத் தலைமுறைக்கு பசுமை நிறைந்த பல்லுயிர் உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும். அதற்காக மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மண்புழுவின் மகிமையை உணர்த்தும் விதத்தில் அனிமேஷன் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளோம். மண்புழு, தேனீ போன்ற 'பசுமை நண்பர்கள்’ பற்றி படத்தில் நிறைய செய்திகள் இடம் பெற்றுள்ளன'' என்றார்.

புதுசு...இது,புதுசு !
புதுசு...இது,புதுசு !

- ஹெச். ராசிக் ராஜா,
படங்கள் : தி. குமரகுருபரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism