Published:Updated:

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

இது பசுமை விகடன் தந்த பரிசு7 ஏக்கரில் அசத்தும் நண்பர்கள்! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர.அருண்பாண்டியன்

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

இது பசுமை விகடன் தந்த பரிசு7 ஏக்கரில் அசத்தும் நண்பர்கள்! கு. ராமகிருஷ்ணன் படங்கள்: ர.அருண்பாண்டியன்

Published:Updated:

பசுமைப் பண்ணை

##~##

''எங்க தோட்டத்துல இருக்கற அத்தனையுமே, 'பசுமை விகடன்’ எங்களுக்குக் கொடுத்த பரிசுதான். பசுமை விகடனைப் படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் இந்தத் தோட்டத்தை அமைச்சோம். ஒரு முறை எங்க தோட்டத்துக்கு வந்துட்டுப் போங்களேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-இப்படி அன்போடு நமக்கு அழைப்பு விடுத்தவர், நாகப்பட்டினம் மாவட்டம், நச்சினார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.

பண்ணை அமைக்கத் தூண்டிய பசுமை விகடன்!

இதையேற்று எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக, சிவக்குமாரின் தோட்டம் தேடிச் சென்றோம். பரவசத்துடன் வரவேற்றவர், ''இதே மாவட்டத்தைச் சேர்ந்த இலையமுதுகூடம்கிற கிராமம்தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பந்தான். ஆனாலும் படிச்சு முடிச்சதும் வேலைக்காக துபாய் போயிட்டேன். அதனால, விவசாயத் தொடர்பே இல்லாம போயிடுச்சு. அங்க என்கூட வேலை பார்த்த அமீது, பசுமை விகடனைப் பத்தி பேசிக்கிட்டே இருப்பார். அதைக் கேட்டு எனக்கும் ஆர்வம் வந்துடுச்சு. துபாய்ல பசுமை விகடன் புத்தகம் கிடைக்கும். ஆன்-லைன்லயும் படிப் போம். ஒரு கட்டத்துல இயற்கை விவசாயத் தாக்கம் அதிகமாகி, நாங்க ரெண்டு பேருமே ஊருக்கு வந்துட்டோம். நாலு வருஷத்துக்கு முன்ன இந்த நிலத்தை வாங்கி, இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். அமீதுதான் பண்ணையை முழுமையா கவனிச்சுக்கறார்'' என்று சிவக்குமார் முன்னுரை கொடுக்க... அவரைத் தொடர்ந்தார், அமீது.

நெகிழ வைக்கும் விவசாயிகள்!

''பசுமை விகடன்ல வர்ற விவசாயிகளைப் பத்தி படிச்சதும், அவங்க தோட்டத்துக்கே போயிடுவோம். அவங்க சொல்லக்கூடிய ஆலோசனைகள்தான் எங்களை முழுமையா வழி நடத்திட்டிருக்கு. எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காம, அவங்க வேலைகளுக்கு இடையிலயும் நேரத்தை ஒதுக்கி, தொழில்நுட்பங்களைத் தெளிவுப்படுத்துறாங்க. அதைப் பாத்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கேன்.

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

இந்தப் பண்ணையோட மொத்தப் பரப்பு ஏழு ஏக்கர். ஆறரை ஏக்கர்ல பயிர்கள் இருக்கு. மீதி இடத்துல ஆடு, மாடுகளுக்கான கொட்டகை, உரக்குழி, போர் ஷெட்னு இருக்கு. நாலு மாடு, முப்பது ஆடுகள் இருக்கு. இந்த நிலம் பல வருஷமா, விவசாயமே செய்யாம, காடா புதர் மண்டி கிடந்ததால... மண் ஓரளவுக்கு வளமாவே இருந்துச்சு. ஏக்கருக்கு 3 டன்னுங்கிற கணக்குல தொழுவுரம், ஆட்டு எரு ரெண்டையும் கலந்து, அடியுரமா போட்டு சாகுபடியை ஆரம்பிச்சோம்.

ஒரு ஏக்கர் வாழையில் ரூ.40 ஆயிரம்!

ஒன்றரை ஏக்கர்ல 200 மாமரங்கள் இருக்கு. இந்த மரங்களுக்கு நாலு வயசு ஆகுது. இப்பவே 50% மரங்கள் காய்ப்புக்கு வந்துடுச்சு. போன வருஷம் 300 கிலோ காய் கிடைச்சுது. மா மரங்களுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா கொடுக்கிறோம். மாசம் ஒரு தடவை பாசன தண்ணியோட அமுதக்கரைசல் கொடுக்கிறோம்.

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

ஒரு ஏக்கர்ல ஆயிரம் வாழை இருக்கு. குழிக்கு அஞ்சு கிலோ மாட்டுத் தொழுவுரம் போட்டு வாழைக்கன்னு நட்டோம். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இலை நனையுற அளவுக்கு பஞ்சகவ்யா தெளிப்போம். மாசம் ஒரு தடவை பாசன தண்ணியோட அமுதக்கரைசல் கொடுக்கிறோம். நல்ல தரமான தார்கள் கிடைக்குது. சராசரியா

700 தார் கிடைக்குது. ஒரு தார் 90 ரூபாய் கணக்குல மொத்தம் 63 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. செலவு போக,

40 ஆயிரம் ரூபாய் லாபம். இதுவரை இப்படி வாழையில மூணு தடவை லாபம் பார்த்துட்டோம்.

ஒன்றரை ஏக்கரில் 36 மூட்டை நெல்!

போன வருஷம் ஒன்றரை ஏக்கர்ல சீரகச் சம்பா நடவு செஞ்சோம். இருபது நாளைக்கு ஒரு தடவைனு மூணு தடவை பஞ்சகவ்யாவைத் தெளிச்சோம். பதினைஞ்சு நாளைக்கு ஒரு தடவைனு பாசன தண்ணியோட அமுதக்கரைசல் கொடுத்தோம். அதை வெச்சே பயிர் நல்லா வேர் பிடிச்சு வளந்துச்சு. ஒன்றரை ஏக்கர்ல 36 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் கிடைச்சது. அதைப் பார்த்து சுத்துப்பட்டு விவசாயிகள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க.

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

பட்டீஸ்வரம் கத்திரி!

நெல் அறுவடை பண்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னயே உளுந்தைத் தெளிச்சு விட்டோம். இதுக்கும் பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் மட்டும்தான் கொடுத்தோம். ஒன்றரை ஏக்கர்ல 500 கிலோ உளுந்து கிடைச்சுது. ஒன்றரை ஏக்கர்ல மல்பெரி போட்டிருக்கோம். இதுக்கும் அமுதக்கரைசல், பஞ்சகவ்யா மட்டும்தான் கொடுக்குறோம். மல்பெரி நட்டு ரெண்டு மாசமாகுது. பட்டுப்புழு வளர்க்கலாம்னு

வெளிநாட்டு வேலைக்கு பூட்டு... இயற்கை விவசாயத்துடன் கூட்டு...

இருக்கோம். ஆடு, மாடுகளுக்கும் இது தீவனமா பயன்படும்.

காய்கறிக்காக ஒரு ஏக்கரை ஒதுக்கி அதுல, பட்டீஸ்வரம் நாட்டுக்கத்திரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், கொத்தவரை, முள்ளங்கி எல்லாம் போட்டிருக்கோம். வெண்டை, கொத்தவரை, தக்காளி மூணும் காய்ப்புக்கு வந்துடுச்சு. காய்கறித் தோட்டத்தை சுத்தி, தனியா 150 வாழை இருக்கு'' என்று மொத்த சாகுபடி பற்றியும் மகிழ்ச்சி பொங்க பகிர்ந்தார் அமீது.

நிறைவாகப் பேசிய சிவக்குமார், ''அரை ஏக்கர்ல குளம் வெட்டி மீனும், குளத்து மேல பரண் அமைச்சு நாட்டுக் கோழியும் வளர்க்கற ஐடியா இருக்கு. இதை ஒரு இயற்கை விவசாயச் சுற்றுலாதலமாக மாத்துறதுதான் எங்க இலக்கு'' என்றார்.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism