Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா

பசுமைக் குழு

காய்கறி சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 20-ம் தேதி கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி வணிக ரீதியிலான காய்கறி சாகுபடி முறைகள், 22-ம் தேதி இறவை மற்றும் மானாவாரியில் ஒருங்கிணைந்தப் பண்ணையம் அமைத்தல், 25-ம் தேதி சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், 28-ம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

செல்போன்: 99429-78526

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 18-ம் தேதி தேனி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி காளான் வளர்ப்பு, 26-ம் தேதி ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொலைபேசி: 04285-241626

தண்டோரா

முயல்!

மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிப்ரவரி 25-ம் தேதி ஆடு வளர்ப்பு, 26-ம் தேதி கோழி மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்பு, 27-ம் தேதி முயல் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொலைபேசி: 0452-2483903

ஜப்பானிய காடை!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பிப்ரவரி 18-ம் தேதி ஜப் பானிய காடை வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொலைபேசி: 0427-2410408

கருத்தரங்கு!

சேலம், சந்தியூர், வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 12-ம் தேதி 'பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமை’ பற்றிய ஒருநாள் கருத்தரங்கு நடை பெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொலைபேசி: 0427-2422550

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism