Published:Updated:

இனி...வீடுதோறும் விவசாயிகள்..!

ஜி. பழனிச்சாமி படங்கள்: வி. ராஜேஷ்

இனி...வீடுதோறும் விவசாயிகள்..!

ஜி. பழனிச்சாமி படங்கள்: வி. ராஜேஷ்

Published:Updated:

கருத்தரங்கம்

##~##

'பச்சைக் காய்கறிகள் உடலுக்கு நல்லது' என்றே சித்தமருத்துவர்களும், ஆங்கில மருத்துவர்களும் மாறி மாறி சொல்கிறார்கள். அதை மனதில் கொண்டு, சந்தைக்கு வரும் காய்கறிகளை வாங்கிச் சாப்பிட்டால்... அவை புதுவித ஆபத்தை உண்டுபண்ணுவதுதான் கொடுமை. ஆம், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டி கொட்டி விளையவைக்கும் காய்கறிகளை உண்பதால், ஏற்படும் பக்கவிளைவுகள் சொல்லி மாளாது. இனம்புரியாத நோய்களின் காரணிகளே... இந்த ரசாயனங்கள்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இதிலிருந்தெல்லாம் தப்பிக்க வழியே இல்லையா...?' என்பவர்களுக்கான வழிகாட்டல்தான்... இயற்கை வேளாண்மை. இதன் அடுத்தக்கட்டம்தான், அந்தக் காலம்போல... வீட்டுக்குவீடு விவசாயம் செய்வது. இதை இன்றைய தலைமுறை மறந்திருக்கும் நிலையில்... மொட்டை மாடி, புறக்கடை, சுற்றுச்சுவர் என வீட்டிலுள்ள காலி இடங்களில் எல்லாம் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நுட்பங்களை, தமிழகம் முழுக்கவே பயிற்சிக் கருத்தரங்கு வாயிலாக கற்றுக்கொடுத்து வருகின்றன... அவள் விகடன் மற்றும் பசுமை விகடன்!

இந்தமுறை கருத்தரங்கு நடைபெற்றது... கோயம்புத்தூர், ராமநாதபுரம் எஸ்.என். திருமண மண்டபத்தில். பிப்ரவரி 2-ம் தேதி நடந்த கருத்தரங்கில் கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்கம், கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் சக்தி இயற்கை உரம், பாரத ஸ்டேட் வங்கி, பிர்லா லைஃப் இன்ஷூரன்ஸ், ஹுயூமிக்காஸ் ஆகிய நிறுவனங்களும் கைகோத்தன. தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்தும் சுமார் அறுநூறு பேர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கு, மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாருக்கு அஞ்சலியுடன் துவங்கியது.

இனி...வீடுதோறும் விவசாயிகள்..!

கருத்தரங்கை ரோட்டரி சங்க நிர்வாகிகள் சி. திருமூர்த்தி மற்றும் மு. திருமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். 'மான்செஸ்டர் ரோட்டரி தலைவர் சி. திருமூர்த்தி பேசும்போது, ''பாமர மக்கள் தொடங்கி பங்களாவாசிகள் வரை இன்று அச்சப்படும் ஒரே விஷயம்... காய்கறி விலை உயர்வுதான். அப்படியே அதிக விலை கொடுத்து வாங்கினாலும், ரசாயனப் பயன்பாட்டில் விளைந்த காய்கறிகளாகவே கிடைக்கின்றன. இதற்குத் தீர்வாக, வீட்டிலேயே விவசாயம் செய்து காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ளும் இந்தப் பயிற்சி... நகரவாசிகளுக்கு வரப்பிரசாதம்'' என்றார்.

வீடுகளில் விவசாயம் செய்யும் முறைகளை படம் போட்டு விளக்கிப் பேசினார், முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயி வின்சென்ட்.

இனி...வீடுதோறும் விவசாயிகள்..!

''வீட்டுத்தோட்ட விவசாய முறை உலக அளவில் இன்று பிரபலமாகி வருகிறது. கிச்சன் கார்டன், ஹோம் கார்டன் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இது புதிய முறை கிடையாது. வீட்டின் கழிவுநீரைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் செய்து வந்த புறக்கடைத் தோட்டத்தின் மறுவடிவம்தான் இது. மண்தொட்டி, கெட்டியான பிளாஸ்டிக் ஷீட்டால் தைக்கப்பட்ட பைகள், பக்கெட்டுகள் என்று நமக்குத் தோதானவைகளில்... மண், மட்கியக் கழிவுகள், சாம்பல், தேங்காய் மஞ்சு போன்றவற்றைப் பயன்படுத்தி விதைகளைத் தூவி பூத்தெளிப்பான் மூலமாக தண்ணீர் கொடுத்து காய்கறிகள், கீரைகளை வளர்க்கலாம். குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் வளரும் கீரை, வெங்காயம், மல்லி போன்ற பயிர்களுக்கு மிதமான வெப்பநிலை தேவைப்படும். அதற்கு நிழல் வலை, அல்லது நிழல் குடில்களை அமைத்துக் கொள்ளலாம். நிழல் வலைக் கம்பிகளில் பாகல், பீர்க்கன், புடல் போன்ற பந்தல் காய்கறிகளையும் படர விடலாம்'' என்ற வின் சென்ட், மூலிகை வளர்ப்பு மற்றும் இடு பொருட்கள் தயாரிப்பு பற்றியும் விளக்கினார்.

முன்னோடி விவசாயி மது. ராமகிருஷ்ணன், இல்லத்தில் இயற்கை விவசாயம், வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் வேறு வீடுகளுக்குச் செல்லும் போது சேதாரம் இல்லாமல் வீட்டுத்தோட்டப் பயிர்களைக் கொண்டு செல்லும் முறை, கைக்கு எட்டும் தூரத்தில் காய்கறிகள் என்ற வகையில் சமையலறைக்குள்ளும் காய்கறிகளை வளர்க்கும் முறைகளை விளக்கினார்.

தொடர்ந்து, வீடுகளில் காளான் வளர்ப்பு குறித்து 'திண்டுக்கல்’, கவிதா மோகன்தாஸும், தேனீ வளர்ப்பு பற்றி 'சிவகிரி’, தண்டாயுதபாணியும் செய்முறையுடன் விளக்கினர்.