Published:Updated:

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

Published:Updated:
##~##

தென்னிந்திய கரும்பு விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில், ராஜ்யசபா உறுப்பினரும், தி.மு.க. விவசாய அணி மாநில அமைப்பாளருமான கே.பி. ராமலிங்கம் தலைமையில்... சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜனவரி 27-ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் கே.பி.ராமலிங்கம் பேசும்போது, 'தமிழக விவசாயி களுக்கு 1 டன் கரும்புக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குமாறு தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கரும்புக்கு 2 ஆயிரத்து 550 ரூபாய் வழங்க வேண்டுமென கூறி, அறிவிப்பு வெளியிட்டுவிட்டு மௌனம் சாதித்து வருகிறது.கரும்பு விலை உயர்த்தப்படும் போது முத்தரப்புக் கூட்டம் கூட்டப்படாமல், தன்னிச்சையாக விலை அறிவிக்கும் போக்கும் இருந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்குள் விலை உயர்வை அறிவிக்காவிட்டால், கரும்பு ஆலைகளின் முன் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்'' என்று சொன்னார்.

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டமைப்பின் செயல் தலைவர் கே.வி. ராஜ்குமார், ''1 ஏக்கரில் கரும்பு உற்பத்தி செய்ய

1 லட்சத்து 40 ஆயிரத்து 50 ரூபாயும், ஒரு ஏக்கரில் நெல் உற்பத்தி செய்ய, 37 ஆயிரத்து 525 ரூபாயும் செலவாகிறது. இந்நிலையில், அரசு அறிவித்திருக்கும் தொகை செலவுக்கே கட்டுபடியாவதில்லை. அரசு கொடுக்கும் மானியக் கடன்கள், வட்டியில்லா கடன்கள் அனைத்தும் கரும்பு ஆலைகளுக்குத்தான் கிடைக்கின்றன. ஆலைகள் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதேயில்லை. வேறு எந்த நாட்டிலும் இந்த நிலை இல்லை'' என்றார்.

தமிழக விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து, தமிழக வாழை விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் அஜீதன், முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

- த. ஜெயகுமார்,
படம்: ஜெ. வேங்கடராஜ்

குறைந்த டீசல்... அதிக வேலை...!

நாட்டு நடப்பு : ஒரு மாதம் கெடு!

மகேந்திரா நிறுவனத்தின் புதிய இலை வடிவ டீசல் ஜெனரேட்டர் அறிமுக விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய, மகேந்திரா நிறுவனத்தின் தலைமைத் துணைத் தலைவர் பழனியப்பன், '' விவசாயிகள் மத்தியில் மகேந்திரா டிரக்டருக்கு தனி மரியாதை உண்டு. காரணம், மற்ற டிராக்டரை விட, இது குறைந்த டீசலில் அதிக நேரம் இயங்கும் தன்மை கொண்டது. இந்திய அளவில் சிறந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறோம். சுற்றுச்சூழல் சிறப்பாக இருந்தால்தான், உலகத்தில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க முடியும். அதை கருத்தில் கொண்டுதான், இலை வடிவில் டீசல் ஜெனரேட்டரை வடிவமைத்துள்ளோம். வழக்கமாக ஜெனரேட்டர் என்றால், அதிக சத்தம் வரும், புகை அடிக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், மகேந்திராவின் இந்த புதிய ஜெனரேட்டரில் அதிக சத்தம் வராது. புகையும் படியாது. பார்வைக்கும் அழகுடன் இருக்கும். குறைந்த எரிபொருளில், அதிக திறனைக் கொடுக்கக் கூடியது. பல்வேறு அளவுகளில் உள்ள இந்த ஜெனரேட்டரை காய்கறி, பழங்களைப் பாதுகாக்கும் குளிர்பதனக் கூடங்கள், இறைச்சிக் கூடங்கள்... போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்' என்றார்.

- பசுமைக் குழு