Published:Updated:

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

மண்புழு மன்னாரு !

Published:Updated:

 மாத்தி யோசி :

வெறும் வயிற்றில் வேண்டாமே இளநீர்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழை மரத்தை 'கற்பக விருட்சம்’னு சொல்வாங்க. இலை, தண்டு, பூ, காய், பழம்னு எல்லாமே நமக்கு பயன்படுறதாலதான் இப்படியொரு பேர். ஆனா, பெரும்பாலும் தார், இலையைத்தான் அறுவடை செய்றோம். சில பேருதான், தண்டு, வாழை நார் இதையெல்லாம்கூட வருமானமா மாத்தறாங்க. நிறைய பேர் தாரை அறுத்ததுமே ஒண்ணுக்கும் உதவாதப் பொருள்னு நினைச்சு மரத்தை அப்படியே வெட்டிப் போட்டுடுடறாங்க. ஆனா, இந்தோனேஷியா நாட்டுல, வெட்டிப்போட்ட வாழை மரத்துலயே செடிகளையெல்லாம் வளர்க்கறாங்க! ஆச்சர்யமா இருக்கா... தார் அறுத்த பின்ன, வெட்டி கீழ போடற மரத்துல சின்னச்சின்ன துளைகளைப் போட்டு... மண், இயற்கை உரம் எல்லாத்தையும் கலந்து நிரப்பி, காய்கறி, கீரை விதைகளைப் போட்டு வளர்க்கறாங்க. வாழை மரத்துல இருக்குற ஈரப்பதத்தையும், சத்துக்களையும் வெச்சே, இந்தச் செடிங்க ஜோரா வளர்ந்துடுது.

ஆக... இயற்கை ஏராளமா நமக்கு கொடுத்திருக்கு. அதைப் பயன்படுத்துற உத்தி தெரிஞ்சுக்கிட்டா... எப்பவும் வெற்றிதான்.          

தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு, சொட்டுநீர்ப் பாசனம் இல்லாம விவசாயம் செய்ய முடியாதுங்கற நிலைமைக்கு நாம தள்ளப்பட்டிருக்கோம். அதுக்காக 'சொட்டுநீர்ப் பாசனம் போட்டாச்சு'னு கையைக் கட்டிக்கிட்டு நின்னுடக் கூடாது. சொட்டுநீர்க் குழாயில அடிக்கடி மண்ணு, பாசி இதெல்லாம் அடைச்சுக்கும். அதனால, மூணு மாசத்துக்கு ஒரு தரம் குழாய்களைச் சுத்தம் பண்ணணும். குறிப்பா, செடிகளுக்குப் பக்கத்துல சொட்டிக்கிட்டிருக்கற குழாய்களைச் சுத்தம் பண்ணணும்.

மண்புழு மன்னாரு !

விளாம்பழம் அற்புதமான பழம். அஜீரண கோளாறைக் குணப்படுத்தும். உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமா இருக்கு. அதனால, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுக்கும். இது, இளநரையைப் போக்கும், உடலுக்கு வலிமை தரும்... இப்படி இதோட பலன்களை பட்டியல் போடலாம். ஆனா, இதையெல்லாம் நாம முழுமையா பயன்படுத்திக்கறதில்லை. விளா மரத்துல முள் இருக்கறதால அதை அருமையான உயிர்வேலியாவும் பயன்படுத்தலாம். தோட்டத்தை சுத்தி நட்டு வெச்சா, கோட்டைத்தூண் மாதிரி பாதுகாப்பா இருக்கும். குஜராத் மாநில விவசாயிங்க... விளா மரத்தை உயிர் வேலியா பயன்படுத்தறாங்க. அந்த மாநிலத்துல நிறைய கடைகள்ல விளாம்பழத்துல வெல்லம் போட்டு, ஐஸ்கிரீம் மாதிரி விக்கிறாங்க. இதை, உயிர்வேலியா பயன்படுத்துறப்போ வருமானமும் கிடைக்கும்.

கிணத்துல நீர் மட்டம் உயரணும், மழை நீர் அறுவடை செய்யணும்னு நினைச்சா... கட்டாயம் பனை மரத்தை வளருங்க. பனை மரத்து வேருங்க, செங்குத்தா நிலத்துல இறங்கும். மரம் எத்தனை அடி உயரம் இருக்கோ, வேரும் அதே அளவுக்கு பூமிக்குள்ள இறங்கி இருக்கும். ஆக, பனைக்குப் பக்கத்துல விழுற, ஒரு சொட்டு மழைத் தண்ணியைக் கூட, வீணாக்காம, சேமிச்சி வெச்சுடும். குறிப்பா, கிணறு பக்கத்துல பனை மரங்க, இருந்தா அந்தக்கிணத்துல தண்ணி, வத்தாம, சுரந்துக்கிட்டே இருக்கும்.

மண்புழு மன்னாரு !

'இளநீர் உடம்புக்கு நல்லது... தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம்’ங்கிற நல்ல செய்தி நம்ம காதுக்கு வந்து சேந்துகிட்டு இருக்கு. இதைக்கேட்ட, பட்டணத்து பயபுள்ளைங்க ஆர்வமாகி, வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கறாங்க. அப்புறமா 'வயித்துல என்னமோ, பண்ணுதே... தெரியாத் தனமா குடிச்சிட்டேன்’னு, புலம்புறாங்க. வெறும் வயித்துல குடிச்சா... இளநீர்ல இருக்கிற அமிலம் வயித்துல புண்ணை உருவாக்கிடும். அதனால, ஆகாரம் சாப்பிட்ட பிறகுதான், இளநீர் குடிக் கணும்னு சித்தமருத்துவத்துல தெளிவா சொல்லி வெச்சுருக்காங்க.