Published:Updated:

பால் போராட்டம் வாபஸ்...

ஆளுங்கட்சியின் மிரட்டலால் நடுநடுங்கும் விவசாயிகள்! ஜி.பழனிச்சாமி படங்கள் : க.தனசேகரன்

பால் போராட்டம் வாபஸ்...

ஆளுங்கட்சியின் மிரட்டலால் நடுநடுங்கும் விவசாயிகள்! ஜி.பழனிச்சாமி படங்கள் : க.தனசேகரன்

Published:Updated:
##~##

''வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கணும்'' என்பது விவசாயிகளைப் பொறுத்தவரை, சத்தியமான வார்த்தைகள். 'இன்றைய ஸ்பெஷல்' என உணவு விடுதிகளில் எழுதிப்போடுவது போல, 'இன்றையப் போராட்டம்' எனச்சொல்லும் அளவுக்கு தினம் தினம் போராட்டக்களத்தில்தான் விடிகிறது, உழவனின் பொழுது.

அந்த வகையில், தற்போது போராடுவது, பால் உற்பத்தி விவசாயிகள். பாலுக்குக் கட்டுப்படியான விலை கேட்டு... பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கிய பால் உற்பத்தியாளர்களின் போராட்டம், பிப்ரவரி 6-ம் தேதி 'திடீர்’ என கைவிடப்பட்டது. போராட்டம் உக்கிரமாக நடந்து வந்த நிலையில், 'போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், அதிகாரிகள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மூலமாக மிரட்டி, போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்துள்ளார்கள்’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல், ''தவிடு, பிண்ணாக்கு, பருத்தி விதை, மக்காச்சோள மாவு போன்ற அடர்தீவனங் களின் விலை கடந்த ஆண்டைவிட

55 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தொடர் வறட்சியின் காரணமாக பசுந்தீவன உற்பத்தியும் போதிய அளவு இல்லை. வைக்கோல், சோளத்தட்டை போன்ற உலர்தீவனப் பயிர்களை அதிக விலை கொடுத்து வாங்கி வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பால் உற்பத்திச்செலவு அதிகரித்துள்ளது.

பால் போராட்டம் வாபஸ்...

இத்தகையச் சூழலில் அரசு நிறுவனமான ஆவின் கொடுக்கும் பால் விலை, கட்டுபடியானதாக இல்லை. இதனால் பல விவசாயிகள் கறவை மாடுகளை விற்றுவிடும் மன நிலையில் இருக்கிறார்கள். இன்னும் பலர், தனியார் நிறுவனங்களுக்கு பால் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலை நீடித்தால்... ஆவின் நிறுவனமே இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்படும். அதனால், ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். அல்லது பசும்பாலுக்கு லிட்டர் 20 ரூபாய் எனவும், எருமைப்பாலுக்கு லிட்டர் 40 ரூபாய் என்றும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை.

சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்தது. கறந்த பாலை சாலையில் கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர், பால் உற்பத்தியாளர்கள். ஆனால், திடீர் என்று 5-ம் தேதி போராட்டத்தில் ஆர்வம் குறைந்து, மறுபடியும் கூட்டுறவு கொள்முதல் மையங்களுக்கு பால் ஊற்ற ஆரம்பித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், கிராமங்களுக்குச் சென்று விசாரித்தபோது... பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளை சிலர் மிரட்டியுள்ளனர்.

பால் போராட்டம் வாபஸ்...

அதற்குப் பயந்தே அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

காவல்துறை, வருவாய்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, ஊராட்சிப் பிரதிநிதிகள் இவர்களுடன் சில ஆளுங்கட்சிப் பிரமுகர்களும் இணைந்து, பால் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்குச் சென்று, 'போராட்டத்தைக் கைவிட்டு கொள்முதல் மையங்களில் பாலை ஊற்றுங்கள். அப்படி செய்யவில்லை என்றால், உங்கள் குடும்பத் துக்குக் கிடைக்க வேண்டிய விலையில்லா ஆடு, இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், வேட்டி, சேலை, பொங்கல் பரிசு, குழந்தை களுக்கான கல்வித்தொகை, முதியோர் உதவித்தொகை என அரசு நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்காது’ என்று மிரட்டி இருக்கிறார்கள். மேலும், 'போராட்டத்தில் கலந்துகொண்டால் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப் போம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

பாவம்... கிராமத்துக் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள். இந்த மிரட்டலுக்குப் பயந்து வழக்கம்போல் கொள்முதல் மையங்களுக்கு பால் ஊற்றத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, போராட்டம் தீவிரமாக நடைபெற்ற சேலம், ஓமலூர், மேட்டூர், புதுச்சத்திரம் ஒன்றியங் களில்தான் விவசாயிகள் மிரட்டப் பட்டுள்ளனர். போதிய ஆதரவு இல்லாமல் போனதால்... தற்காலிகமாக போராட்டத்தை நாங்கள் கைவிட்டுள்ளோம். சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி, அடுத்தக் கட்டம் பற்றி முடிவெடுப்போம்'' என்றார்.

பால் போராட்டம் வாபஸ்...

கோரிக்கைகள் என்றால், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுதான் அரசாங்கம் வழக்கமாக செய்வது. ஆனால், 'நான் விவசாயிகளின் தோழி' என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்... அதிகாரிகளும் கட்சிக்காரர் களும்... ரவுடிகளாக களத்தில் இறங்கி மிரட்டத் தொடங்கியிருப்பது, என்ன காலத்துக்கோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism