'பருவ மழை பெய்யாததால் கருகிப்போன மானாவாரிப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தலைமையில்... மானாவாரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அதில் பேசிய நல்லகண்ணு, ''தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு பெய்த பருவமழையின் அளவு மிகக்குறைவு. கோவில்பட்டி, எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய தாலூகாக்களுக்குட்பட்ட கிராமங்களில்... மானா வாரியாக புரட்டாசிப் பட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விதைக்கப்பட்ட உளுந்து, கம்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு, தீவனச்சோளம், மக்காச்சோளம் ஆகியவை தண்ணீரின்றி கருகியுள்ளன.

இதனால், விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டை விட, இந்தாண்டு 33% மழை குறைந்து விட்டதாக முதல்வரே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதனால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

- இ. கார்த்திகேயன்