Published:Updated:

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

Published:Updated:

மாத்தி யோசி

##~##

'கரும்பு சாகுபடி பண்றதுக்கு அதிகமான தண்ணீர் தேவை'னுதான் பெரும்பாலானவங்க நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அந்தக் காலத்துல மானாவாரியாவே கரும்பு சாகுபடி பண்ணியிருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்னது மானாவாரியில கரும்பு சாகுபடியா'னு அதிராதீங்க... இது நிஜம்தாங்க! 'ஆபீஸ் கரும்பு'னு சொல்லப்படுற க.கோ-100, கி.கு-2010 மாதிரியான கரும்புகள் இங்க அறிமுகமாகறதுக்கு முன்ன... மானாவாரி கரும்பு ரகம் இருந்திருக்கு. நெல் வகையில எப்படி விதவிதமான ரகம் இருக்கோ, அதேபோல கரும்புலயும் பாரம்பரிய ரகம் பலது இருந்திருக்கு. இந்த விஞ்ஞானிங்க கொண்டு வந்த நம்பர் கரும்பைக் கையில எடுத்துக்கிட்டு, சர்க்கரை ஆலைகளும் வேளாண்துறையும் சேர்ந்துக்கிட்டு, பாரம்பரிய கரும்பு ரகங்களுக்கு வேட்டு வெச்சுட்டாங்க. இதுல இந்த மானாவாரி ரக கரும்புகள் எங்க

மண்புழு மன்னாரு

போச்சுதுனே தெரியல. பொங்கல் கரும்பு மட்டும்தான் இதுல தப்பிச்சுக்கிச்சு. இதில்லாம கசப்புச்சுவை இருக்குற 'பேய்கரும்பு’னு ஒரு ரகம் இருக்கு. இதை, சித்த மருத்துவத்துல பயன்படுத்துறாங்க. பட்டினத்தார் கையில வெச்சுருந்தது, இந்தப் பேய்கரும்பைத்தான்.

வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கறதுக்கு மானாவாரி நிலத்துல விளைஞ்ச கரும்பைத்தான் பயன்படுத்தியிருக்காங்க. 'மெட்ராஸ் மாகாணத்துல விளையுற கரும்புதான் உலகத்திலேயே, அதிக இனிப்புச் சுவை கொண்டது'னு அந்தக் காலத்துல நம்மை ஆண்ட ஆங்கிலேயே அதிகாரி ஒருத்தர் பாராட்டுப் பத்திரம்கூட எழுதி வெச்சுருக் காரு.

இந்தப் பாராட்டுக்குப் பின்னால, நம்ம ஆட்களோட தொழில்நுட்ப அறிவு மண்டி

கிடக்குதுங்கறதத்தான் நாம முதல்ல புரிஞ்சுக் கணும். எந்த இனிப்புப் பயிரா இருந்தாலும், அதுக்கு தண்ணி குறைவா கொடுக்கணும். அப்போதான், சூரிய ஒளியில இருந்து, நிறைய இனிப்புச் சத்தை அறுவடை செய்யும். இன்னிக்கும், 'சேலத்து மாம்பழம்'னு சொல்லப்படுற தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதி மாம்பழங்களுக்கு தனி மரியாதை உண்டு. காரணம், வறட்சியான அந்தப் பகுதி நிலங்கள்ல விளையற மாம்பழம்... இனிப்புச் சுவையில சக்கைப் போடு, போடுது. வடமாநிலத்தில தண்ணி வசதி அதிகம். அதனால, கரும்பு விளைச்சலும் அதிகம். ஆனா, அந்தக் கரும்புல இனிப்புச் சுவை குறைவாத்தான் இருக்குது. தமிழ்நாடு உட்பட தென் மாநிலத்துல விளையுற கரும்புக்குத்தான் இனிப்புச் சுவை தூக்கலா இருக்கு. இதுதாங்க இயற்கையோட வித்தை. எங்க என்ன தேவையோ... அதை அள்ளிக் கொடுக்குது.

'குரு இல்லா வித்தை
கரு இல்லா முட்டை
எரு இல்லா பயிர்
பரு இல்லா கரணை பாழ்...'னு

மண்புழு மன்னாரு

சொல்லி வெச்சிருக்காங்க. கரும்பை விதைக் கிறதுக்காக வெட்டும்போது, கவனமா இருக்கணும். விதைக்கரணை கிடைச்சா போதும்னு வயசான கரும்புக் கரணையை நட்டா... விளைச்சல் இருக்காது. வளமான கரும்பு வயல்ல இருந்து ஆறு மாச வயசு கரும்புலதான் விதைக்கரணையை வெட்டணும். பரு இல்லாத கரும்பு முளைக்காது. அதனால, வெட்டும்போது பரு பகுதி பாதிச்சுடக் கூடாது. ஒருபருக் கரணையா, இருபருக் கரணையாங்கிறது அந்தந்தச் சூழலுக்கு ஏத்த மாதிரி முடிவு பண்ணிக்கணும்.

மண்ணுக்கு ஏத்த பயிர் சாகுபடிங்கிறது நம்ம முன்னோர்களோட முக்கிய மந்திரம். கறுப்பு நிறத்தில இருக்கிற கரிசல் மண்ணுல பருத்தி, கம்பு, சோளம், கேழ்வரகுனு மானாவாரியா சாகுபடி செய்வாங்க. அந்தப் பகுதியில தண்ணி வசதி அதிகம் இருந்தாலும், மானாவாரி முறையிலதான் சாகுபடி செஞ்சாங்க. கரிசல் மண்ணுக்கு அடியில சுண்ணாம்புப் பாறை இருக்கும். தண்ணி அதிகம் தேவைப்படற நெல், கரும்பு, வாழை... பயிரை சாகுபடி செய்யும்போது, தண்ணி பூமிக்குள்ள இறங்கும். அதனால, சுண்ணாம்பு மேல் பகுதிக்கு வந்து நிலத்தைக் கெடுத்துடும்கிறதுதான் காரணம்.