Published:Updated:

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

பசுமைக் குழு

Published:Updated:
##~##

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடித் தோட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 6-ம் தேதி மாடித் தோட்டம் அமைத்தல்,

7-ம் தேதி அழகுத் தாவரச் செடிகள் பராமரிப்பு, 12 மற்றும் 13-ம் தேதிகளில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, 14-ம் தேதி மசாலா பொடி வகைகள் மற்றும் உடனடிக் கலவைகள் தயாரிப்பு, 18-ம் தேதி தோட்டப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, 19-ம் தேதி புறக்கடைக் கோழி வளர்ப்பு, 20-ம் தேதி சிறுதானியங்களில் உற்பத்தித் தொழில்நுட்பங்கள், 25-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு, 26-ம் தேதி நிலம் மற்றும் மண் இல்லாமல், தண்ணீர் மூலம் பசுந்தீவன உற்பத்தி(ஹைட்ரோபோனிக் முறை) ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371

வெண்பன்றி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் 6-ம் தேதி வெண்பன்றி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பிரட்ஸ் ரோடு, சேலம்-636001.
தொலைபேசி: 0427-2410408

முயல்!

நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 11-ம் தேதி சொட்டுநீர், தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் முறைகள், 13-ம் தேதி வீட்டு காய்கறித் தோட்டம் அமைத்தல், 18-ம் தேதி முயல் வளர்ப்பு, 20-ம் தேதி கலப்பின வெண்பன்றி வளர்ப்பு, 25-ம் தேதி காளானிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்
வேளாண் அறிவியல் நிலையம்
நாமக்கல்-637002
தொலைபேசி: 04286-266345

மூலிகைக் கண்காட்சி!

புதுச்சேரி, மற்றும் கரங்கள் சேவை அறக் கட்டளை சார்பில், மார்ச் 8 மற்றும் 9-ம் தேதிகளில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கான மூலிகைகள் கண்காட்சி நடைபெற உள்ளது. இடம்: வேல். சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி.

தொடர்புக்கு, செல்போன்: 99940-83642

பாரம்பரிய நெல்!

திருவாரூர் மாவட்டம், ஆதிரெங்கம்,  கிரியேட் இயற்கை வேளாண்மைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 2-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பாரம்பரிய நெல் விதைத் தேர்வு, விதைநேர்த்தி மற்றும் விதைப் பாதுகாப்பு குறித்து கருத்தரங் கமும், விதைப் பாதுகாப்பு-கோட்டை கட்டுதல் செய் முறைப் பயிற்சியும் நடைபெற உள்ளது.  முன்னோடி இயற்கை விவசாயிகள் கோ. சித்தர், 'கிரியேட்’ ஜெயராமன்... போன்றவர்கள் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். 150 பேர் மட்டுமே அனுமதி. முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: கிரியேட் மற்றும் ஜி.டி பவுண்டேஷன்

தொடர்புக்கு,

தொலைபேசி: 04369-220954,
செல்போன்:  98426-07609