Published:Updated:

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

Published:Updated:

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் நினைவு இயற்கை வேளாண்மைக் களப்பயிற்சி, திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் பிப்ரவரி 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பசுமை விகடன், தங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் விவசாய சேவா சங்கம் இணைந்து நடத்திய இப்பயிற்சியில் தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், திருச்சி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர் என தமிழகம் முழுவதும் இருந்து பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

முன்னோடி இயற்கை விவசாயிகள் 'புளியங்குடி’ கோமதிநாயகம், 'புளியங்குடி' அந்தோணிசாமி, 'சத்தியமங்கலம்’ சுந்தரராமன், பாமயன், 'திருநெல்வேலி’ கணேஷ்ராஜா போன்றவர்கள் களப்பயிற்சி அளித்தனர். பண்ணைப் பார்வையிடல் நிகழ்ச்சிக்காக சுமார் 200 ஏக்கர் பரப்பில், அமைந்திருக்கும் அந்தோணிசாமியின் பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது பேசிய அந்தோணிசாமி, ''பாறை அதிகமா இருக்கிற சரளை மண் நிலம் இது. ஆனாலும், இதுல மலைவேம்பு, செஞ்சந்தனம், செந்தூரம், சந்தனம், வேங்கை, குமிழ், மஞ்சள் கடம்பு, தேக்குனு இருபது வகையான மரங்களை வளர்த்திருக்கேன். தண்ணி பற்றாக்குறை இருக்கு. அதுக்காக விவசாயம் செய்யாம விட்டுட முடியுமா? 54 அடி ஆழத்துல, 6 கிணறுகளை வெட்டியிருக்கேன். நிலத்துல விழற ஒரு சொட்டு தண்ணிகூட வெளியில போகாது. முன்ன, காய்கறி, நெல்... பயிரிட்டேன். யானைகள் நடமாட்டத்தால அதை தொடர முடியல. அதனால, மரப்பயிருக்கு மாறிட்டேன்'' என்று அனுபவ பாடம் சொன்னார்.

விவசாயிகளுக்கு இரண்டு நாட்களும் சுவையான சிறுதானிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

-இ. கார்த்திகேயன், படம்: எல். ராஜேந்திரன்

நம்மாழ்வார் நினைவு களப்பயிற்சி!

நம்பர் நெல் வேண்டாம்!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலூகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள, கண்ணன் ராஜகோபாலன் பண்ணையில்... ஜனவரி 29-ம் தேதி, நம்மாழ்வார் நினைவுக் கூட்டமும் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கும் நடைபெற்றது. சுற்றுப்புற கிராம விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட, கரிம விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர் அரியனூர் ஜெயச்சந்திரன், ''இந்தியாவுல 40 ஆயிரம் நெல் ரகங்கள் இருக்கு. ஆனா, நம்பர்  போட்ட நெல்லைத்தான் (ஆராய்ச்சி நிலையங்களில் உருவாக்கப்பட்ட ரகங்கள்) பெரும்பாலும் பயிர் செய்றோம். இந்த நம்பர் போட்ட நெல்லுங்க, உரம், யூரியா போட்டாதான் நல்லா விளையும். அதனால எல்லோருக்குமான உணவுத் தேவை பூர்த்தியாகுதானு கேட்டா, இல்லைனுதான் சொல்லணும். இயற்கை விவசாயத்தாலதான் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்'' என்று அழுத்தமாகச் சொன்னார்.

''இயற்கை முறையில விளையறதை முதல்ல நீங்க சாப்பிடுங்க. அடுத்து உங்கள சுத்தி இருக்கறவங்களுக்குக் கொடுங்க. நஞ்சில்லாத உணவோட அவசியத்தை எடுத்துச் சொல்லுங்க. அப்படியே உங்கள சுத்தி ஒரு சந்தையை உருவாக்கினா, சந்தையைத் தேடி எங்கயும் அலையத் தேவையில்லை'' என்றார், பாதுகாப்பான உணவுக்கான ஒருங்கிணைப்பாளர் அனந்து.

- த. ஜெயகுமார்

படம்: பா. ஜெயவேல்