Published:Updated:

தண்டோரா

தண்டோரா

பசுமைக் குழு

தண்டோரா

காளான்!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 18-ம் தேதி காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி வாசனைப் பயிர்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

வெள்ளாடு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மார்ச் 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

வெண்பன்றி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 26-ம் தேதி தென்னை சாகுபடிக்கு உகந்த ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகள், 28-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

புறக்கடைக் கோழி!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 14-ம் தேதி மசாலா பொடி வகைகள் மற்றும் உடனடிக் கலவைகள் தயாரிப்பு, 18-ம் தேதி தோட்டப்பயிர்களில் ஒருங்கிணைந்தப் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, 19-ம் தேதி புறக்கடைக் கோழி வளர்ப்பு, 20-ம் தேதி சிறுதானியங்களில் உற்பத்தித் தொழில்நுட்பங்கள், 25-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரிப்பு, 26-ம் தேதி நிலம் மற்றும் மண் இல்லாமல் தண்ணீர் மூலம் பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக் முறை) ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27452371

இயற்கைக் கருத்தரங்கு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், கிருஷ்ணாபுரம் மலர் இயற்கை வேளாண் பண்ணையில்  மார்ச் 16-ம் தேதி 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் நினைவு இயற்கை வேளாண் கருத்தரங்கு நடைபெற உள்ளது.  இயற்கை வேளாண் நுட்பங்கள், பண்ணை பார்வையிடல், அனுபவப் பகிர்வு... போன்றவை நடைபெற உள்ளன. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். ஏற்பாடு: வானகம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட சமூக ஆர்வலர்கள்.    

தொடர்புக்கு, செல்போன்: 90472-73009, 97876-48002.

கட்டணப் பயிற்சி

குறைந்த செலவில் வேளாண் உத்திகள்!

திருவாரூர் மாவட்டம், திருவிழிமழலை கோ ரஷ்ண சமிதியில் மார்ச் 23-ம் தேதி  'குறைந்த செலவில் வேளாண்மை உத்திகள்’ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறிப்பேடு, மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.100 மட்டும். அன்பு.சுந்தரானந்த சுவாமிகள், கிருஷ்ணகுமார், 'தேனாம்படுகை பாஸ்கரன், கோபி... போன்ற முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளனர். முன்பதிவு அவசியம்.

ஏற்பாடு: பாரதிய கிசான் சங்கம், திருவாரூர்.
கோ ரஷ்ண சமிதி, திருவிழிமழலை.
தொடர்புக்கு, செல்போன்: 99766-02006