பிரச்னை

குறுவை, சம்பா சாகுபடி நடைபெறும்போதுதான், காவிரி நீருக்காக, டெல்டா மாவட்டங்களில் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும். மற்ற மாதங்களில் பேரமைதியே நீடிக்கும். ஆனால், இந்த ஆண்டு... இப்போதே மத்திய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கி விட்டது, காவிரி உரிமை மீட்புக்குழு. பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் இயக்கங்கள் ஒருங் கிணைந்து செயல்படக் கூடிய இந்தக் குழு, மார்ச் 1-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி எழுச்சி மாநாடு நடத்தி, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது!

கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்ற மாநாட்டில், குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் எடுத்து வைத்த கருத்துக்கள், பலரையும் அதிர வைத்தன.

''காவிரி ஆறு உருவாகக்கூடிய குடகு மலையில், லட்சக்கணக்கான மரங்களை அழித்து, 740 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்பாதை அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது, மத்திய அரசின் மின்சாரத் தொகுப்புக் கழகம். மழைப் பொழிவுக்கும், ஊற்று பெருகுவதற்கும் காடுகளே ஆதாரம். இத்தகையச் சூழலில், குடகு பகுதியில் அடர்ந்து செழித்து, மழை தரக்கூடிய லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டால், காவிரி ஆற்றின் மிக முக்கியமான கிளை ஆறான லட்சுமணத்தீர்த்தா வறண்டு போகும். இதற்கு மாற்றாக, மிகக்குறைந்த தொலைவு கொண்ட மின்பாதைத் திட்டத்தை குடகு விவசாயிகள் முன் வைக்கிறார்கள். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும்''

என்று சொன்ன மணியரசன்,

''விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் இங்குள்ள விவசாயிகள் பரிதவித்துவரும் நிலையில், 'மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னை குடிநீருக்காக எடுக்கப்படும்’ என தமிழக அரசு அறிவித் துள்ளது. குடிநீர் என்ற போர்வையில், பன்னாட்டு கம்பெனிகளுக்கு காவிரியைத் தாரை வார்க்கப் போகிறது, தமிழக அரசு. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம்'' என்று சாடினார்.

நிறைவாக அவர் சொன்ன பேரதிர்ச்சித் தகவல் -

''பில்லிக்குண்டுலுக்கு மேற்கே தலா 50 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மூன்று புதிய அணைகளைக் கட்டுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது கர்நாடகா. வெள்ளக் காலங்களில் தமிழகத்துக்கு ஓடிவரும் உபரி நீரும் இதனால், கர்நாடகத்திலேயே முடக்கப்பட்டு, தமிழ்நாடு பாலைவனமாக மாறும் ஆபத்து தொடங்கிவிட்டது.''