Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா

காளான் வளர்ப்பு!

 காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் காளான் வளர்ப்பு,  9-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு, 10-ம் தேதி கோடை காலத்தில் தீவன மேலாண்மை முறை, 16-ம் தேதி இயற்கை உரங்கள்- உற்பத்தி முறைகள், 21 முதல் 25-ம் தேதி வரை சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், 22 மற்றும் 23-ம் தேதிகளில் கறவைமாடு வளர்ப்பு, 24-ம் தேதி அங்கக வேளாண்மை முறையில், நெல் விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம்,
(எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம்-603203
தொலைபேசி: 044-27452371

நாட்டுக் கோழி!

சேலம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 11-ம் தேதி, நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம்,

பிரட்ஸ் ரோடு, சேலம்-636001
தொலைபேசி: 0427-2410408

 வெள்ளாடு!

திருப்பூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 17-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0421-2248524

வெண்பன்றி!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 28-ம் தேதி வெண்பன்றி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

தண்ணீர் மாநாடு!

செங்கல்பட்டு பழையப் பேருந்து நிலையம் அருகில், ஏப்ரல் 5-ம் தேதி மாலை 3 மணிக்கு 'விவசாயிகள் சிறப்பு மாநாடு’ நடைபெற உள்ளது.

பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது, காவிரி-பாலாறு/ தென் பெண்ணை-பாலாறு இணைப்பு, ஏரி, குளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வல்லுநர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதிமணி கலந்து கொள்கிறார்.

ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் பொது நல சங்கங்களின் கூட்டமைப்பு

தொடர்புக்கு, செல்போன்: 94440-88594, 94436-38545

இயற்கை தினம்!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பிறந்த நாள், ஏப்ரல் 6. இதை, திருவாரூர் மாவட்டம்  ஆதிரெங்கத்தில் உள்ள கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்கை வேளாண் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அவரது கருத்துக்களைப் பரப்புரை செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெறுகிறது.  

தொடர்புக்கு,
செல்போன் :98426-07609

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்