Published:Updated:

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

தண்டோரா

Published:Updated:
தண்டோரா

பசுமைக் குழு

வான்கோழி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 23-ம் தேதி வான்கோழி வளர்ப்பும், 24-ம் தேதி மானாவாரி மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்தப் பூச்சி நிர்வாகம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288

கறவை மாடு!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஏப்ரல் 29-ம் தேதி கறவை மாடு வளர்ப்பும், நோய் பராமரித்தலும் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

நாட்டுக் கோழி!

திருப்பூர், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 13-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு,14-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0421-2248524

இயற்கைக் கருத்தரங்கு!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த இலையூரில் ஏப்ரல் 27-ம் தேதி 'ரசாயனம் இல்லாமலும் விவசாயம் செய்யலாம்’ என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. கருத்தரங்கில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சிகளை தேனாம்படுகை பாஸ்கர், கோ. ராசேந்திரபாபு, க. கோபி ஆகிய முன்னோடி இயற்கை விவசாயிகள் வழங்க உள்ளார்கள். தேநீர், மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.

குறிப்பு: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மட்டும் பங்கேற்கவும்.

ஏற்பாடு: பாரதிய கிசான் சங்கம், திருவாரூர்.

தொடர்புக்கு, செல்போன்: 99766-02006, 98942-28847.

தண்டோரா

 வெள்ளாடு!

மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 22-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 23-ம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism