Published:Updated:

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

சி. வையாபுரி படங்கள்: சு. குமரேசன்

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

சி. வையாபுரி படங்கள்: சு. குமரேசன்

Published:Updated:

 கோரிக்கை

'விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சியை எனது அரசு ஊக்குவிக்காது' என்று தேர்தல் பிரசார மேடைகளில் தற்போது முழங்கிக் கொண்டிருக்கிறார்... தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

தொலைக்காட்சிகளில அவர் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம்... 'முதல்வர் அவர்களே... பனை விவசாயிகளையும்... பனைத் தொழிலாளர்களையும் நசுக்கிக் கொண்டிருக்கும்... சாராயத் தொழில் முதலாளிகளின் சூழ்ச்சி வலையை அறுத்தெறியத் தயங்குவதேன்?' என்கிற கேள்வி எனக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு காலத்தில், அறுசுவைகளில் ஒன்றான இனிப்புச் சுவையின் தமிழகத் தேவையை... பனைவெல்லம்தான் பூர்த்தி செய்துகொண்டிருந்தது. என்றைக்கு கரும்புவெல்லம் வந்து குதித்ததோ... அன்றைக்கே பனை வெல்லத்துக்கு வேட்டு ஆரம்பமாகிவிட்டது. ஒருபக்கம் கரும்பு ஆலைகள் பெருக... மறுபக்கம் சாராய ஆலைகளும் பெருக... பனைவெல்லம் மற்றும் கள் ஆகியவை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டன.

கரும்பு சாகுபடிக்கு, அதிகம் தண்ணீர்த் தேவை. ஆனால், பனைக்கு அப்படி இல்லை. சொல்லப் போனால்... இதற்கு தனியாக தண்ணீர்ப் பாசனம் செய்வது என்பதே இல்லை. பருவமழையால் ஈரம்பட்ட நிலத்திலிருந்தும் பனி, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உள்வாங்கியும் தானே வளர்ந்துவிடும். 70, 80 ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து பலன் தரக்கூடிய அற்புதமான மர வகைகளில்... குறிப்பிடத்தக்க இடத்திலிருப்பவை, பனை மரங்களே! மேகங்களிலுள்ள நீரை, மழையாக பூமிக்கு ஈர்த்துத் தரும் சிறப்பு அம்சம் பெற்ற மரங்களின் பட்டியலில்... பனைக்கும் ஓரிடமுண்டு.

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

தமிழகத்தின் பல பாகங்களிலும் செழித்து வளர்ந்திருந்த பனை மரங்கள் காரணமாக... பருவம்தோறும் பனைவெல்லம் காய்ச்சும் மரபு, இங்கே தொன்றுதொட்டு இருந்து வந்தது. கள் இறக்குவதற்கு வரிக்கு மேல் வரியாக போடப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட... பனையிலிருந்து கள் இறக்கும் தொழிலுக்கோ... அதன் மூலமாக பனை வெல்லம் தயாரிப்பதற்கோ... பெரிதாகப் பிரச்னை ஏதும் வரவில்லை.

ஆனால், 'மக்களாட்சி' என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய முடிசூடா மன்னர்களின் ஆட்சிகளில்தான்... பனைத் தொழிலுக்கு பாதகம் வந்து சேர்ந்தது. 1987-ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 'கள்ளுக்குத் தடை' எனும் கொடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்ட நாள் முதல்... அந்தத் தொழில் சின்னாபின்னமாகி விட்டது. பனைத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டு விட்டது!

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

பெரும்பாலும் நிலத்தடி நீரை சுரண்டிச் சுரண்டியேதான் கரும்பு சாகுபடி நடக்கிறது. ஆனால், கடும்வறட்சியிலும்கூட, நம்மிடம் இருந்து துளி தண்ணீரையும் எதிர்பார்க்காமல், தானே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, மனிதர்களுக்கும் இன்னபிற ஜீவன்களுக்கும்... அளவில்லாதப் பலன்களை வழங்கும் வள்ளல்களாக நிற்கின்றன பனைகள். பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் இனிப்புத் தேவையை நிறைவு செய்து வந்ததே... இந்தப் பனைகள்தான் என்பதை, கடந்த 20, 25 ஆண்டு கால ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

இன்றைக்கு எகிறிக்கிடக்கும் விலைவாசியிலும்... 35 ரூபாய், 45 ரூபாய் விலையிலேயே மக்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பனைவெல்லம்... கிலோ

100 ரூபாய், 150 ரூபாய் என்றெல்லாம் விற்கப்படுகிறது. மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் இந்த இனிப்புத் தயாரிக்கும் தொழில், 'கள்ளுக்குத் தடை' என்கிற அரசின் கண்மூடித்தனமான சட்டத்தால்... பரிதாப நிலைக்குப் போய்விட்டது.

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

சித்த வைத்தியம் போற்றிப் பாராட்டும் பனைவெல்லம், பலவிதமான நோய்களுக்கும் மருந்து. இத்தகையச் சிறப்பு வாய்ந்த, பனைவெல்லம்... சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாக்கனியாகிப் போனதன் பின்னணியில், பெரும் சூழ்ச்சி ஒளிந்திருக்கிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

'ஊக்க பானமான கள், மிகக்குறைந்த விலையிலேயே மக்களுக்குக் கிடைத்துவிட்டால்... சாராய விற்பனை பெருகாது' என்று உணர்ந்த சாராய முதலாளிகள், 1987-ல் உடல்நலம் குன்றியிருந்த

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மூலமாக, அமுதமான கள்ளுக்குத் தடை ஏற்படுத்தினர். இதற்காக அன்று சொல்லப்பட்ட காரணம்... 'ஏழை மக்கள் குடித்துக் குடித்தே சீரழிகிறார்கள்' என்பதுதான். அதேசமயம், வசதி படைத்தவர்களும்... கனவான்களும் மட்டுமே சீமைச் சாராயத்தைக் குடிக்கிறார்கள் என்றபடி, நாடு முழுக்க மதுபானக் கடைகளை திறந்துவிட்டார்கள். அது கடந்த 25 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி பெற்று, கிராமங்களிலும்கூட 'டாஸ்மாக்' கடைகளாக முளைத்துக் கிடக்கின்றன. பள்ளிக்கூட நோட்டு வாங்குவதற்காக அப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் சிறுவர்கள்கூட, அதை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து, 'சரக்கு' வாங்கி குடித்துவிட்டு, கூத்தடிக்கும் நிலை வந்துவிட்டது.

'புளிப்பேறாத கள், இனிப்பானது' என்பது காந்தியின் கூற்று. இதனாலேயே, 'கள் தாய்ப் பாலுக்குச் சமமானது' என்பார்கள். 'வள்ளல் அதியமானும்... தமிழ் மூதாட்டி ஒளவையும் கள் உண்டனர்' எனும் புறநானூற்றுச் செய்தியே, இதற்குச் சான்று.

ஆனால், 87-ம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர் களின் கட்சி கஜானாக்களாகவே... கரும்புக்கு உரிய விலை தராத சர்க்கரை ஆலைகளும்... பதநீரைப் பலிகொண்ட சாராய ஆலைகளும் மின்னி மிளிருவதால், தங்கத் தமிழ்நாட்டில் கள்ளுக்குத் தடை நீடிக்கிறது.

இந்த இம்சையிலிருந்து பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விடுதலை எந்நாளோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism