Published:Updated:

கொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி ?

கால்நடைப் பராமரிப்பு ஆலோசனைகள்.... ஜி. பிரபு

கொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி ?

கால்நடைப் பராமரிப்பு ஆலோசனைகள்.... ஜி. பிரபு

Published:Updated:

 கால்நடை

கோடை காலம் துவங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெயில் துவள வைத்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க... மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி எனத் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், கால்நடைகள்?

நாள் முழுக்க வெட்டவெளியிலேயே நின்று, நமக்கு வருமானத்தை ஈட்டித்தரும் கால்நடைகளை வெயிலின் உக்கிரத்திலிருந்து காப்பாற்ற வேண்டியது, நம் கடமை. அதற்கான சூட்சமங்களை இங்கு சொல்லித் தருகிறார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். பீர் முகம்மது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வாயில்லா ஜீவன்கள், வெயிலோட உக்கிர தாக்குதல்ல இருந்து தப்பிக்கறதுக்கு, நாமதான் வசதி பண்ணிக் கொடுக்கணும். வெயில் காலம் ஆரம்பிக்கிற சமயத்துல கொட்டகைகளுக்குள்ள காற்றாடி வசதி செய்யலாம். கூரை, தென்னங்கீத்துல இருந்தாத்தான் காற்றாடி போடணும். ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையா இருந்தா, வெப்பக் காற்றுதான் வரும். இந்த வகையான கூரையா இருந்தா... அதுக்கு மேல தென்னங்கிடுகு, பனை ஓலைகளைப் பரப்பி வெச்சு, கொட்டகையில காற்றாடி அமைக்கலாம். காற்றாடி அமைக்க வசதி இல்லேனா, கூரை மேல, அடிக்கடி செழிம்பா தண்ணி தெளிச்சு விடலாம். இது வெப்பத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.

கொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி ?

கோடை காலத்துல கால்நடைகளுக்கு பச்சைப் புற்களை நிறைய கொடுக்கணும். அதேமாதிரி, தண்ணியையும் வழக்கத்தைவிட அதிகமா கொடுக்கணும். வழக்கமா ஒரு நாளைக்கு ரெண்டு முறை தண்ணி குடிக்க விடுவோம். கோடையில நாலஞ்சு முறை தண்ணி குடிக்க விடணும். தண்ணி வெச்சுருக்குற தொட்டி. எப்பவுமே நிழலான இடத்துலதான் இருக்கணும். அப்போதான் தண்ணி சூடு ஏறாம இருக்கும். தண்ணியை முன்னாடியே தொட்டியில ஊத்தி வைக்கக் கூடாது. எப்போ மாடுகளைக் குடிக்க விடுறோமோ, அப்போதைக்கு ஊத்துறது நல்லது.  வெயில் நேரங்கள்ல கறவை மாடுகள் மேல அடிக்கடி நல்லா முழு உடம்பும் நனையுற மாதிரி தண்ணி தெளிச்சு விடலாம். கொட்டகைக்குள்ள எப்பவும் இட நெருக்கடி இல்லாமப் பாத்துக்கணும். சுத்தமாவும் வெச்சுக்கணும்.

கால்நடைகள், கோடை கால பகல் நேரங் கள்ல அதிகமா தீவனம் எடுக்காது. காலையில ஏழு மணிக்குள்ளயும், சாயங்காலம் ஆறு மணிக்குப் பிறகும் தீவனம் கொடுக்கலாம். அடர்தீவனங்கள் அல்லது வைக்கோல் மாதிரி காய்ந்த தீவனங்களை ஆடு, மாடு களுக்குக் கொடுக்கறப்போ, போதுமான

கொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி ?

அளவுக்கு குடிதண்ணீரும் இருக்குற மாதிரி பாத்துக்கணும். எந்தக் கால்நடையா இருந்தாலும், வெயில் காலத்துல அதிகமான புரதச்சத்து இருக்கிற பிண்ணாக்கு மாதிரியான தீவனங்களை அதிகமா கொடுக்கக் கூடாது. இதெல்லாம் செரிமானம் ஆகறதுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும்.

வெயில் காலம் ஆரம்பிக்கறதுக்கு முன்னயே அந்தப் பருவத்துக்கான தடுப்பூசியைப் போட்டுடணும். அப்படிப் போட்டுட்டா வெயில் காலங்கள்ல வர்ற வெக்கை மாதிரியான நோய்கள், தொற்று நோய்களைத் தடுத்துடலாம். எல்லா கால்நடை மருத்துவ மனைகள், கிளை மருந்தகங்கள்லயும், ஒவ்வொரு சீசன்லயும் அந்தந்தப் பகுதியில பரவுற நோய்களைப் பத்தின அட்டவணை இருக்கும். அதைத் தெரிஞ்சுக்கிட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கணும்.

வெயில் காலத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய், தோல் சம்பந்தமான நோய்கள், சிறுசிறு கட்டிகள், கொப்புளங்கள் வரும். இதெல்லாம் தென்பட்டா அலட்சியம் காட்டாம, உடனடியா மருத்துவர்கிட்ட காட்டி, சரியான சிகிச்சை கொடுத்துடணும். உச்சி வெயில்ல மேய விடக்கூடாது. அந்த சமயத்துல மர நிழல்ல இளைப்பாற விடணும். வறண்டு போய், அடியில கலங்கலா தண்ணி தேங்கியிருக்கிற குளம், குட்டைகள்ல, ஆடு, மாடுகளை தண்ணீர் குடிக்க விடக்கூடாது. அதனால நிறைய நோய்கள் பரவ வாய்ப் பிருக்கு'' என்ற பீர் முகம்மது, நிறைவாக கோழிகளுக்கான பராமரிப்பு முறைகளையும் சொன்னார்.  

'கோழிப் பண்ணைகள்ல ஒரு கோழிக்கு இரண்டரை சதுர அடி இடம் இருக்கற மாதிரி பாத்துக்கணும். பண்ணையோட சுற்றுச்சுவர் ஒன்றரை அடி உயரத்துக்கு மேல இருக்கக் கூடாது. அப்பதான் நல்ல காத்தோட்டம் இருக்கும். கூடியவரைக்கும் பண்ணையைச் சுத்தி... அகத்தி, சூபாபுல், கிளரிசீடியா, முள்முருங்கை மாதிரியான மரங்களை வளத்தா... நிழல் கிடைக்கிறதோட, பசுந் தீவனமும் கிடைச்சுடும். கொட்டகையோட வெளிப்பக்கத்துல சாக்குகளைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் தண்ணி தெளிச்சு விட்டா, கொட்டகைக்குள்ள வெப்பம் குறையும்.

கொளுத்தும் கோடை குளிர்விப்பது எப்படி ?

கோழிகளுக்கு கோடை காலத்துல வெள்ளைக்கழிசல் நோய் வரும். அதுக்கான தடுப்பூசியை முன்னயே போட்டுடணும். இப்போ, இந்தத் தடுப்பு மருந்து, மாத்திரை வடிவிலேயே கிடைக்குது. கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தோட உழவர் பயிற்சி மையங்கள், ஆராய்ச்சி மையங்கள்ல இலவசமாவே கொடுக்குறோம். திண்டுக்கல் மையத்துலயும் போதுமான அளவுக்கு மாத்திரைகள் இருக்கு. அரசு கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள்ல வாரா வாரம் சனிக்கிழமை கோழிகளுக்கு இலவசமா தடுப்பூசி போடுவாங்க. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கலாம்.

கோடையில வைட்டமின்-சி மாத்திரையை தண்ணியில கலந்து கொடுத்தா... கோழிகளுக்கு அயற்சி வராம தடுக்கலாம். இருபது, இருபத்தஞ்சு கோழிகளுக்கு ஒரு மாத்திரை போதுமானதா இருக்கும். மாத்திரை கிடைக்காதவங்க, 4 லிட்டர் தண்ணியில ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சுவிட்டு கோழி களுக்குக் குடிக்கக் கொடுக்கலாம்'' என்றார், பீர் முகம்மது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism