Published:Updated:

மாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்!

ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன்

மாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்!

ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன்

Published:Updated:

கருத்தரங்கு

'அவள் விகடன்’, 'பசுமை விகடன்’ மற்றும் சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ பயிற்சிக் கருத்தரங்கு... மார்ச் 23 அன்று சேலம், திருவாக்கவுண்டனுரில் நடைபெற்றது!

நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்கத் தலைவர் கண்ணன், ''நமக்குத் தேவையான காய்கறிகள் நமக்குக் கிடைப்பதில்லை. மாறாக மார்க்கெட்டில் எது கிடைக்கிறதோ அதைத் தான் வாங்கி சமைக்க வேண்டியுள்ளது. அதுவும் நாட்டு ரக காய்கறிகள் கிடைப்பது அரிதாகி விட்டது. ஆனால், அதை மாற்றி, நம் குடுமபத் துக்குத் தேவையான காய்கறிகளை கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தே புத்தம் புதிதாய் பறித்துக் கொள்ளலாம் என்கிற தீர்வை இந்தப் பயிற்சி கொடுத்துள்ளது. அதுவும் இயற்கை இடுபொருட்களைக் கொண்டு நமக்குத் தேவை யான காய்கறிகளை மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் எளிய முறையில் வளர்த்துக் கொள்ளலாம் என்கிற தொழில்நுட்பம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்!

இனி, சேலம் மாம்பழ நகரமாக மட்டும் அல்ல. மாடித்தோட்ட நகரமாக மாறும். இதற்கான விதையைப் போட்டிருக்கும் அவள் மற்றும் பசுமை விகடனுக்கு நன்றி'' என்று சொன்னார்.

பயிற்சியாளராக பங்கேற்ற ஈரோடு, மாடித்தோட்ட விவசாயி சிவக்குமார், ''செடிகளை நடவு செய்ய பழைய பிளாஸ்  டிக் பக்கெட், பீப்பாய்கள், கிரீஸ் டப்பாக் கள், வாட்டர் கேன்கள், ஃபேனர்கள், தகரம் என எது கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி அதன் கொள்ளளவு உயரத் துக்கு ஏற்ற செடிகளை வளர்க்க முடியும். மாடித்தோட்டம் அமைத்தால் கட்டடங் கள் சேதம் அடைந்துவிடும் என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது தேவை யற்றது'' என்றெல்லாம் சொன்னவர்... செங்கல், மரச்சட்டங்கள், ரீப்பர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, தான் அமைத்துள்ள மாடித்தோட்டத்தின் படங்களைக் காட்டி, விளக்கங்கள் தந்தார்.

மாம்பழ நகரம்... இனி, மாடித்தோட்ட நகரம்!

மாடித்தோட்ட தொட்டிகளுக்குள் நிரப்ப வேண்டிய மண், உயிர் உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவை பற்றி, வேளாண் அலுவலர் சின்னச்சாமியும், வீட்டுத்தோட்டத்தில் தேனீ வளர்க்கும் தொழில்நுட்பத்தை சிவகிரி தண்டாயுத பாணியும், ஓய்வுநேரங்களில் காளான் வளர்த்து காசு பார்க்கும் தொழில்நுட்பத்தை திண்டுக்கல் கவிதா மோகன்தாஸும் வழங்க...  வாசக, வாசகிகள் இனிதே விடைபெற்றனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism