பாடம்

ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடையாக மலரும் இந்தப் பகுதியில் நெல் நடவு முறைகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், 'வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை’யின் தலைவர் மற்றும் பேராசிரியர் ராமசாமி.

''சம்பா சாகுபடி முடிந்ததும், உடனடியாக தாளடியில் நெல் சாகுபடி செய்யலாமா?''

''கண்டிப்பாக, ஒரு நெல் சாகுபடிக்கும் மற்றொரு நெல் சாகுபடிக்கும் இடைவெளி கொடுக்க வேண்டும். 15 முதல் 21 நாட்கள் நிலத்துக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். தாளடிக்கு... வேம்பு, புங்கன், கிளரிசீடியா, அகத்தி என நிலத்தைச் சுற்றி இருக்கும் மரங்களில் இருந்து, 2 டன் அளவுக்கு இலை-தழைகளை வெட்டி, நிலம் முழுவதும் பரப்பிவிட்டு, தண்ணீர் கட்டி ஒரு வாரம் அழுக விட்டு, மீண்டும் உழவு செய்து நடவு வயலைத் தயார் செய்ய வேண்டும்.''

''நெல் வயலுக்குக் கண்டிப்பாக ரசாயன உரங்களைத்தான் போட வேண்டுமா?''

''கண்டிப்பாக ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும். நெல்லுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தும்போது, அதன் வளர்ச்சி இயல்பான நிலையில் இல்லாமல்... அதீத வளர்ச்சி காண்கிறது. இந்த வளர்ச்சியால் இலைகளின் வண்ணம் லேசாக மாறி பூச்சிகளுக்கு வரவேற்பு கொடுக்கிறது. தவிர, ரசாயனங்களுக்கு அதிக செலவும் செய்ய வேண்டியிருக்கும்.'’

''ரசாயன உரங்களுக்கு மாற்று என்ன?''

''பல நூற்றாண்டு காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இயற்கை உரங்கள்தான்.''

''நெல்லுக்கு என்ன வகையான இயற்கை உரங்களை மேல் உரமாக பயன்படுத்த வேண்டும்?''

''இரண்டு முறை களை எடுத்த பிறகு, மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு, 400 கிலோ முதல் 700 கிலோ தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தோடு, 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, ஒரு கிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து, 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் 'பச்சை வண்ண அட்டை’யைப் (லீஃப் கார்டு) பயன்படுத்தி... இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்குக் குறைவாக இருந்தால், மட்டும் மீண்டும் ஒரு முறை அதே உரக் கலவையைக் கொடுக்க வேண்டும்.''

''பயிரின் வளர்ச்சிக்கு, இயற்கை முறையில் என்ன வகையான கரைசலைப் பயன் படுத்த வேண்டும்?''

''மாதம் ஒரு முறை 25 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீரோடு கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து 25 மற்றும் 50-ம் நாட்களில் மட்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து தெளித்து விடலாம்.''

''கதிர் வரும் பருவத்தில் என்னவிதமான நடைமுறைகளைக் கையாள வேண்டும்?''

''கதிர் வருவது முதல் அறுவடை வரை முறையான பாசனமுறைகளைக் கையாள வேண்டும். குறுகியகால ரகங்களில் 70 முதல் 80 நாட்களிலும்; மத்திய கால ரகங்களில் 90 முதல்

95 நாட்களிலும்; நீண்டகால ரகங்களில் 115 முதல் 120 நாட்களிலும் கதிர் வரத் துவங்கும். கதிர் ஒரே நேரத்தில் வருவதற்கும், தரமாக வருவதற்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி தேமோர் கரைசலைக் கலந்து தெளித்துவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 டேங்குகள் தேவைப்படும். இந்த நேரத்தில் நெல் வயல்களில் சிட்டுக்குருவிகள் இறங் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கலப்பு நெல் ரகங்களின் கதிர்கள் இருந்தால், பிடுங்கி அப்புறப்படுத்தி விட வேண்டும். அப்போதுதான் கலப்பு இல்லாத நெல் விதையை அறுவடை செய்ய முடியும். அதிக மான ஊட்டமும், அதிகமான தண்ணீரும் கொடுக்கும்போது நெல் பயிர் சாய்ந்துவிடும். அதனால், உர மேலாண்மையை சரியாகக் கடைபிடிக்க வேண்டும். கதிர்விடும் பருவத்தில் வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யாவைத் தெளிக்கக்கூடாது.''

- படிப்போம்...

அமுதக்கரைசல்

அமுதக்கரைசல்... இதை 'நிலவள ஊக்கி' என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை...

மாடு ஒரு தடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைக்கவேண்டும். அதன்பிறகு, அமுதக் கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒரு முறை தெளிப்பதற்கான அளவு இது. ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து, இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம். ஒரு பங்கு ஜீவாமிர்த கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் கலந்தும் பயிர்களுக்கு தெளிக்கலாம்.

பஞ்சகவ்யா தயாரிப்பு!

இதற்கு ஒன்பது பொருட்கள் தேவைப்படும், நாட்டு மாடு, கலப்பின மாடு என எதன் பொருட்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

தயாரிப்பு முறை: கடலைப் பிண்ணாக்கை ஒரு மணி நேரத்துக்கு முன்பே நீரில் ஊற வைத்து விடவும். பின்பு எல்லா பொருட்களையும் மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் கலந்து நிழலில் வைக்கவும். தூசு, தும்பு படாமல் இருக்க, மெல்லியத் துணியால் வேடு கட்டி வைக்கலாம். தினமும் இந்தக் கலவையைக் கலக்கி விடவேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளியேறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகும். ஏழு நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும். இதன்மூலம் ஏறத்தாழ 25 முதல் 30 லிட்டர் வரை பஞ்சகவ்யா கிடைக்கும். 10 லிட்டர் நீருக்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம் (கீரைக்கு மட்டும் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்). ஒரு முறை தயாரித்த பஞ்சகவ்யாவை ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இது எல்லா பயிர்களுக்கும் தெளிக்கவல்ல வளர்ச்சி ஊக்கியாகும். விதைநேர்த்தி செய்யவும் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு, 30 லிட்டர் பஞ்சகவ்யாவுடன் 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசனநீருடன் கலந்து விடலாம்.

இதனால் மண்வளம் கூடும், அதிக பூக்கள் பூக்கும், காய்-கனிகள் சுவையாக இருக்கும். பூச்சி நோயும் எளிதில் அண்டாது. விளைச்சலும் கூடுதலாகக் கிடைக்கும். பயிர் சோர்ந்திருக்கும் பொழுதும் தெளிக்கலாம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் பயிர்களுக்குத் தெளித்து வரலாம். நெல் பயிருக்கு மட்டும் கதிர் வந்தவுடன் அடிக்கக்கூடாது. அப்படி செய்தால், நெல்லின் தோல் கடினமாகி, அது மோட்டா ரக நெல்லாகிவிடும்.