தோட்டக்கலை

சென்ற இதழ் தொடர்ச்சி...

விவசாயத்தைப் பொறுத்தவரை அதிக அளவிலான திட்டங்களையும், மானியங்களையும் அள்ளிக் கொடுக்கும் துறை, தோட்டக்கலைத்துறைதான். தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெயபாண்டி கூறிய தகவல்கள் கடந்த இதழில் இடம்பிடித்தன. அதன் தொடர்ச்சி இதோ...

தோட்டக்கலைப் பயிர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்!

''தோட்டக்கலை பயிர்களுக்கு 50% மானியம் என்ற கணக்கில் ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை மானியம் பெறலாம்.

நிழல்வலைக் குடிலுக்கு, 50% மானியம் என்ற கணக்கில் ஒரு சதுர மீட்டருக்கு 300 ரூபாய் என்று அதிகபட்சமாக ஒருவருக்கு 1,000 சதுர மீட்டர் நிலத்துக்கு மானியம் கிடைக்கும்.

தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, மிளகாய், கத்திரிக்காய்... உள்ளிட்ட காய்கறிப் பயிர்களுக்கு நிலப்போர்வை (மல்ச்சிங் ஷீட்) அமைத்து, சாகுபடி செய்தால் தண்ணீரை சேமிப்பதுடன், களைகளையும் கட்டுப்படுத்த முடியும். அதனால் மல்ச்சிங் ஷீட்டை நிலத்தில் பரப்ப 50% மானியம் என்ற கணக்கில், ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக 29 மாவட்டங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அடர் நடவுக்கு மானியம்!

அடர் நடவில் பயிர் செய்யும் மா, கொய்யா, சப்போட்டா... போன்ற பழ வகைகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் ரூபாய் மானியம் உண்டு. இந்தத் தொகை, மூன்றாண்டுகளில் மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். நீண்டகால பழ மரவகைகளை பயிரிடுபவர்களுக்கு 75% மானியம் என்ற கணக்கில், ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 16 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையும் மூன்று ஆண்டுகளில் மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். அதிகபட்சமாக 4 ஹெக்டேர் வரை மானியம் பெறலாம்.

வாழைக்கு

60 ஆயிரம்!

வாழை பயிரிட 50% மானியம் என்ற கணக்கில் ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் 4 ஹெக்டேர் வரை மானியம் பெறலாம். அன்னாசிக்கு 50% மானியம் என்ற கணக்கில் ஒரு ஹெக்டேருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். திசு வாழைக்கு ஒரு ஹெக்டேருக்கு 41 ஆயிரத்து 602 ரூபாய் கிடைக்கும். அதிக பரப்பளவில் வாழை பயிரிடுபவர்களுக்கு 50% மானியம் என்ற கணக்கில், ஒரு ஹெக்டேருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும் (கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்). சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியத்திலும் சொட்டு நீர்க் குழாய்கள் வழங்கப்படும்.

மானியங்கள் பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப மனு, சிட்டா, அடங்கல், வயல் வரைப்படம், மார்பளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்குப்புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

தொடர்புக்கு,
தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை, சென்னை.
தொலைபேசி: 044-28524643