பிரீமியம் ஸ்டோரி

'தண்டோரா' பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.  

- ஆசிரியர்

தண்டோரா

காளான் வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 21-ம் தேதி இயற்கை விவசாயப் பயிற்சி: மே 27-ம் தேதி காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.  

தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626

வான்கோழி!

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மே 15-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பும் பசுந்தீவன உற்பத்தியும்; 27-ம் தேதி வான்கோழி வளர்ப்பும் தீவன மேலாண்மையும் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408

லாபம் தரும் வெள்ளாடு!

சேலம் மாவட்டம், மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையத்தில் மே 14-ம் தேதி லாபம் தரும் வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. தீவன மேலாண்மை, வெள்ளாடுகளை இன விருத்தி செய்யும் நுட்பங்கள் பற்றி வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்கள். மதிய உணவு உண்டு.. முன்பதிவு முக்கியம்..

தண்டோரா

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், பொட்டனேரி-636453 சேலம் மாவட்டம் தொலைபேசி: 04298-262023

தென்னை!

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் மே-13, 14 ஆகிய தேதிகளில் தீவிர முறையில் வெள்ளாடு வளர்ப்பு; 14-ம் தேதி தென்னையில் ஒருங்கிணைந்தப் பாதுகாப்பு முறைகள்; 21-ம் தேதி மதிப்பூட்டப்பட்ட பழப்பொருட்கள் தயாரித்தல்: 29-ம் தேதி பண்ணை வருமானத்தை அதிகரிக்க வேளாண் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் ஆகிய பயிற்சிகள் நடைப்பெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 044-27452371

வாழை!

தஞ்சாவூர், பி.எம்.டி வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 15-ம் தேதி நெல் சாகுபடியில் நேரடி விதைப்பு முறைகள்; 21-ம் தேதி வாழையில் ஒருங்கிணைந்தப் பயிர் மேலாண்மை உத்திகள்; 27-ம் தேதி இயந்திரமயமாக்கப்பட்ட நெல் சாகுபடித் தொழில்நுட்பங்கள்; 29-ம் தேதி கால்நடைகளில் நோய் மேலாண்மை ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04362-293565

பல்நோக்குப் பண்ணையம்!

தண்டோரா

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் மே 24-ம் தேதி 'பல்பயிர்-பல்நோக்குப் பண்ணையம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. மூத்த வேளாண் விஞ்ஞானி அரு. சோலையப்பன், முன்னோடி விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன்... போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஏற்பாடு: கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம், செங்கல்பட்டு.

தொடர்புக்கு
செல்போன்: 94448-94181,
94433-31393

சிறுதானியங்கள்!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மே 13-ம் தேதி உணவுக் காளான் உற்பத்தி; 15-ம் தேதி பலாப்பழத்திலிருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரித்தல்; 20-ம் தேதி சிறுதானியங்கள் சாகுபடி; 22-ம் தேதி நீடித்த நவீன கரும்பு சாகுபடி; 27-ம் தேதி மாடித்தோட்டம்-காய்கறிகள் சாகுபடி; 29-ம் தேதி பருத்தியில் பஞ்சு எடுக்கும் கருவி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 04367-260666

பசுந்தீவனம்!

மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மே 29-ம் தேதி கறவைமாடு வளர்ப்பு; 30-ம் தேதி பசுந்தீவன உற்பத்தி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு,
தொலைபேசி:0452-2483903

தண்டோரா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு