யோசனை

பாகல், புடலை, பீர்க்கன், பூசணி, வெள்ளரி மாதிரியான காய்கறி விதைகளின் முளைப்புத் திறனை அதிகப்படுத்த, கோடை காலத்தில் சாணியில் விராட்டி தட்டி, அதில் விதைகளைப் பதித்து, காய வைக்க வேண்டும். காய்ந்த விராட்டிகளை மண்பானையில் இட்டு சேமித்தால்... பூச்சி பிடிக்காமல் அப்படியே இருக்கும். வசதி இருப்பவர்கள் விறகடுப்புக்குப் பக்கத்துச் சுவரில் விராட்டியைத் தட்டி, அவற்றில் விதையைப் பதித்து, காயவைத்து தேவையானபோது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோடைக் குறிப்புகள் !

குளத்தில் இருக்கும் நோய் தொற்றுக் கிருமிகளைக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற மீன் முட்டைகளை அழிக்கவும், ஏக்கருக்கு 100 கிலோ நீர்த்த சுண்ணாம்புத்தூள் தூவி, அரை அடி ஆழத்துக்கு ஓர் உழவு செய்து, 10 முதல் 15 நாட்களுக்குக் காயப்போடவேண்டும். பிறகு, மீண்டும் 100 கிலோ நீர்த்த சுண்ணாம்புத்தூளைத் தூவ வேண்டும். மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன்பாக, ஓர் அடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிறுத்தி, 400 கிலோ பசுஞ்சாணத்தைக் கரைத்துவிட்டு, 10 நாட்களுக்கு பிறகு 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி, பிறகு மீன் குஞ்சுகளைவிட வேண்டும்.

கோடைக் குறிப்புகள் !

6 முதல் 8 மாதம் குளத்தில் மீன் வளர்ப்பவர்கள், கண்டிப்பாக கோடை காலத்தில் குளத்தைப் பாலம் பாலமாக வெடிக்கும் அளவுக்கு காயபோட வேண்டும். அதற்கு பிறகு, அங்ககச் சத்துக்கள் நிறைந்திருக்கும் களிமண் பகுதியை மட்டும் சுரண்டி எடுத்து, நிலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் குளத்தை நன்றாக உழவு செய்து... நெல், உளுந்து, பச்சைப்பயறு, காய்கறி வகைகளை ஒரு போகம் சாகுபடிச் செய்யலாம்.

கோடை காலத்தில் குளங்களில் தொடர்ச்சியாக மீன்களை வைத்திருக்கும்போது, அங்ககச் சத்துகள் அதிகமாகி, மீன்களுக்கு பிராணவாயு பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காலை நேரத்தில் தண்ணீருக்கு வெளியிலே வந்து, வாயைப் பிளந்து மீன்கள் மூச்சுவிடுவதை வைத்து இதை அறியலாம். குளத்தில் இருக்கும் தண்ணீரில், நான்கில் ஒரு பங்கை வெளியேற்றிவிட்டு, புதுத் தண்ணீரை விட்டால், இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

கோடைக் குறிப்புகள் !

அதிகமான நீர்வேட்கை இருப்பவர்கள், ஒரு கோப்பை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சைப் பழச்சாறையும், நாட்டுச் சர்க்கரையையும் கலந்து அருந்தலாம் அல்லது இளநீர் குடிக்கலாம்.

கோடைக் குறிப்புகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு