பிரீமியம் ஸ்டோரி

நாட்டு நடப்பு

 விழுப்புரம் மாவட்டம், கொடுக்கப்பட்டு கிராமத்தில் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி, ஸ்ரீவெங்கடேஷ்வரா மழலையர் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியில் படிக்கும் 120 மாணவர்களுக்கும் 'பசுமை விகடன்’ இதழ் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய பள்ளியின் தாளாளர் திருவிக்ரமன், ''தாத்தா காலத்தில் நல்ல விளைச்சல் கொடுத்த நிலங்கள் எல்லாம் இன்றைக்கு உரங்கள் கொட்டப்பட்டதால் கெட்டுக் கிடக் கின்றன. மறுபக்கம் ரியல் எஸ்டேட் மூலமாக வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன. இந்த அபாயகரமான நிலையை மாற்றுவதற்கு அவசிய மான இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள், நாம் மறந்துபோன பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் மண்ணுக்கு ஏற்ற புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள் தேவை.

பரிசாக... பசுமை!

இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கும் வேலையை 'பசுமை விகடன்’ இதழ் தொடர்ச்சி யாகச் செய்துவருகிறது. இந்த இதழை, மழலை களான மாணவர்களிடம் பரிசாகக் கொடுக்கும் போது, மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்பு உணர்வு ஏற்படுவதுடன்... பெற்றோருக்கும் இந்தக் கருத்துகள் சென்றடையும்'' என்றார், மகிழ்ச்சியாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு