உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறுதானியங்களின் பட்டியலில் சாமை அரிசிக்கு கண்டிப்பாக இடம் உண்டு. அதனால், சாமைக்கு என்றுமே மதிப்புக் குறைவதில்லை. பச்சை மலை, கொல்லி மலை, தர்மபுரி மாவட்ட மலைகள், ஜவ்வாது மலை... உள்ளிட்ட பல மலைக்கிராமங்களில் இன்றைக்கும் சாமை சாகுபடி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மாநில அரசு, வேளாண்மைத்துறை மூலமாக 'பயிர் விளைச்சல்’ போட்டியை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான (2013-14) பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு, ஒரு ஹெக்டேரில் 'பெருஞ்சாமை’யை சாகுபடி செய்து... முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாயை வென்றிருக்கின்றனர், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபதியம்மாள்-மணி தம்பதி!

குளிர்காற்று வீசிக்கொண்டிருந்த ரம்மியமான பொழுதொன்றில் பூபதியம்மாளைச் சந்தித்தோம். ''காலங்காலமா மலைக் கிராமத்துலதான் இருக்கிறோம். எங்க கிராமத்துல இருக்குற பெரும்பகுதி நிலத்துல, வானத்தையும், வருண பகவானையும் நம்பி... சாமை, பனிவரகு, கேழ்வரகுனு சிறுதானியங்களைப் பயிர் செய்றோம். மத்ததைவிட குறிப்பா சாமைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஏன்னா, நாங்க சாப்பிடுறது அதைத்தான். அதனாலதான், சாமை வெள்ளாமையையும், ஜவ்வாது மலை மக்களையும் பிரிக்க முடியாதுனு சொல்லுவாங்க. சாமையில பல வகை இருக்கு. நாங்க தலைமுறை தலைமுறையா சிட்டஞ்சாமை, பெருஞ்சாமை, சடைசாமைனு சாகுபடி செஞ்சிட்டுருக்கோம். வைகாசி மாசத்துல இருந்து ஆடி மாசம் வரை, எங்க கிராமங்கள்ல கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் சாமைதான் தெரியும்'' என்ற பூபதியம்மாள் தொடர்ந்தார்.

சாமை கொடுத்த வெகுமதி!

''எங்களுக்கு 12 ஏக்கரா நிலமிருக்கு. அதுல நெல், கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சாமைனு சாகுபடி செய்வோம். ஒவ்வொரு வருஷமும் ரெண்டரை ஏக்கராவுல (ஒரு ஹெக்டேர்) சாமை விதைச்சிடுவோம். போன போகத்துல மானாவாரியில விதைச்ச பெருஞ்சாமை, 3,960 கிலோ விளைஞ்சது. அந்த வருஷத்துக்கான சிறுதானியப் பயிர் விளைச்சல் போட்டியில கலந்துக்கிட்டு, சாமையில மாநில அளவுல முதல் பரிசா 50 ஆயிரம் ரூபாய் வாங்கினோம்'' என்று பெருமிதப்பட்டவர், பெருஞ்சாமை சாகுபடி முறையை விளக்க ஆரம்பித்தார். அதை பாடமாக இங்கே தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 10 கிலோ விதை!

'பெருஞ்சாமையின் வயது 6 மாதம். வைகாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை விதைக்கலாம். தண்ணீர் தேங்கி நிற்காத நிலத்தில், டிராக்டர் அல்லது மாடு மூலமாக இரண்டு சால் உழவு செய்து புல், பூண்டுகள் இல்லாமல், மண்ணைப் புட்டு பதத்துக்கு மாற்றி... ஏக்கருக்கு 4 டிப்பர் என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 கிலோ பெருஞ்சாமை விதையையும், ஊடுபயிரான கேழ்வரகு விதையில், 5 கிலோவையும் 3 கிலோ மணலுடன் கலந்து விதைத்து, விதைகளை மண் மூடுமளவுக்கு மாட்டு ஏர் பூட்டி உழவு செய்ய வேண்டும்.

பூச்சி, நோய் தாக்காது!

விதைத்த 4-ம் நாளில் சாமையும், 5-ம் நாளில் கேழ்வரகும் முளைப்பு எடுக்கும். 20-ம் நாளில் தேய்ந்துபோன கொழுக் கலப்பைக் கொண்டு மாட்டு ஏர் மூலம் இடையுழவு செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது பயிர்கள் களைக்கப்பட்டு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மழை பெய்ததும் 35-ம் நாளில் களைக்கொத்து மூலம் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக்கொள்வதால் களைகள் வராது. 40 மற்றும் 70-ம் நாளில் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இடவேண்டும் (இவர் ரசாயன உரத்தைப் பயன்படுத்தியுள்ளார்). சாமையை பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை.

கேழ்வரகு... 75-ம் நாளில் கதிர் வீச ஆரம்பித்து, 90-ம் நாளில் முற்றத்துவங்கி, 120-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கேழ்வரகில் கதிர்பகுதியை மட்டும் அறுவடை செய்யவேண்டும். 135-ம் நாளில் சாமை கதிர்வீச ஆரம்பித்து, 150-ம் நாளில் இருந்து முற்றத்துவங்கி, 180-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சாமை, நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். அதை, தூரில் இருந்து இரண்டு அடி அளவுக்கு விட்டு மேல் பகுதியை அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்த மேல் பகுதியை களத்தில் உலர்த்தி, மாடு அல்லது டிராக்டர் கொண்டு கதிரடித்து, தூற்றி சுத்தப்படுத்தி பத்திரப்படுத்த வேண்டும்.'

சாகுபடிப் பாடம் முடித்த பூபதியம்மாள், ''வழக்கமா ஏக்கருக்கு 800 கிலோவுல இருந்து, 1,000 கிலோ வரை சாமை மகசூல் கிடைக்கும். ஊடுபயிரா போட்ட கேழ்வரகுல ஏக்கருக்கு 500 கிலோ வரைக்கும் கிடைக்கும். ஒரு ஹெக்டேர்ல சாகுபடி செஞ்சதுல... 3,960 கிலோ சாமையும், 650 கிலோ கேழ்வரகும் கிடைச்சது. 400 கிலோ கேழ்வரகை, கிலோ 12 ரூபாய்னு 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செஞ்சிட்டு மீதியை வீட்டுக்கு வெச்சிருக்கேன். சாமையை இன்னும் விற்பனை செய்யல. இன்னிக்கு தேதிக்கு, கிலோ 24 ரூபாய்னு போகுது. இதன் மூலமா 95 ஆயிரத்து 40 ரூபாய் கிடைக்கும். எல்லா செலவும் போக 80 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். சாமையை நாலு வருஷம் வரைக்கும், சேமிச்சி வெக்கலாம். அதனால வெச்சிருந்து, பணத்தேவை இருக்குறப்போ விற்பனை செய்துக்கிறோம்'' என்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார்.

''இயற்கைச் சாமையே இனிக்கும்!''

ஜவ்வாது மலையில் இருக்கும் அரசவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, இயற்கை முறையில் சாமை விளைவித்து வருகிறார். 'சாமையை... ரசாயன முறையில் சாகுபடி செய்வதைவிட இயற்கை முறையில் சாகுபடி செய்வதுதான் சிறந்தது’ என்று சொல்லும் கருணாநிதி, ''ஆறாவது வரைக்கும்தான் படிச்சேன். அதுக்குமேல படிக்குற ஆசை இல்லாததால, விவசாயத்துல இறங்கிட்டேன்.

44 வருஷமா விவசாயம்தான் தொழில். நிலத்துல சாமை விதைக்கும்போதே மொச்சை, துவரை மாதிரியான பயிரையும் விதைச்சுடறதால... வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களுமே கிடைச்சுடும். ஆறு மாசம் விவசாயம் பார்ப்போம். ஆறு மாசம் வீட்டுல சும்மா இருப்போம். ஆனாலும், வாழ்க்கையில சந்தோஷத்துக்குக் குறைச்சல் இருக்காது. ஒவ்வொரு வீட்டுலயும் 10 மாடுகளுக்குக் குறையாம இருக்கும். அதனால, எருவுக்கும் பிரச்னையில்லை. மாடுகளுக்குத் தேவையான தீவனம் காட்டுல கிடைச்சுடும்.

உரங்களே நோய்க்கு காரணம்!

80-ம் வருஷத்துக்கு முன்ன வரைக்கும், மலையில ரசாயனத்தைப் பயன்படுத்தல. அதுக்குப் பிறகுதான், அரசாங்க அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் மலைக்கிராமங்களுக்கு வந்து... ஐ.ஆர்-8, ஐ.ஆர்-50 மாதிரியான நெல் ரகங்களை அறிமுகப்படுத்தினாங்க. அதுவரைக்கும் ரசாயன உர வாசனையே படாத மண்ணுல, ரசாயன உரங்களைப் போட்டப்போ விளைச்சல் அதிகமா கிடைச்சிது. இதையெல்லாம் பார்த்த பிறகு, 'விளைச்சலை அதிகப்படுத்தணும்னா உரம் போட்டாகணும்'கிற எண்ணம் எங்களுக்கு வந்துடுச்சி. அதனாலதான் சாமைக்கும் உரம் போட ஆரம்பிச்சோம். ஆனா, அதோட பின்விளைவுகள் இப்பத்தான் தெரியுது.

சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, காட்டுல கிடைக்கிற கிழங்கு, கீரைகளைப் பிடுங்கிச் சாப்பிட்ட வரைக்கும் நோய்-நொடி இல்லாம ஆரோக்கியமா இருந்தோம். உரம் போட்ட நெல்லு சோறு சாப்பிட ஆரம்பிச்ச பிறகுதான் பிரச்னைகளும், நோய்களும் அதிகமாயிடுச்சி.

உரம் போட்டு வளர்க்கற சாமை, வறட்சி நேரங்கள்ல 15 நாள்லயே சுருண்டு காய்ஞ்சி போயிடுது. ஆனா, இயற்கை முறையில விதைக்கற சாமை ஒரு மாசம் வரைக்கும் மழையில்லாட்டியும் தாக்குப் பிடிக்கும். அதனாலதான் நான் சாமையை மட்டும் இயற்கை முறையில சாகுபடி செய்றேன். புதுசு புதுசா சாமை ரகங்கள் வந்தாலும், மலையில இருக்குற மக்கள் பாரம்பரிய ரகங்களைத்தான் சாகுபடி செய்றோம்'' என்ற கருணாநிதி, சிட்டஞ்சாமை சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார்.

ஏக்கருக்கு 15 கிலோ!

'சிட்டஞ்சாமையின் ஆயுள் காலம் 3 மாதங்கள். ஆனி மாதம் முதல் ஆடி மாதம் வரை சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தை இரண்டு சால் உழவு செய்து, 5 வண்டி எருவைக் கொட்டி களைத்து... ஒரு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 15 கிலோ விதையைப் பரவலாக விதைக்க வேண்டும். ஐந்து நாட்களில் விதை முளைத்து, வெளியில் தெரிய ஆரம்பிக்கும். 25 முதல் 35 நாட்களில் மழை கிடைத்தவுடன், களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து மூடிக்கொள்ளும். பூச்சி, நோய் தாக்குதலே இருக்காது. 65-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 75-ம் நாளில் முற்றத்துவங்கி, 90-ம் நாளில் அறுவடைக்கு வந்துவிடும். அவற்றை தாளோடு அறுவடை செய்து, களத்தில் உலர்த்தி கதிரடித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.’

ஏக்கருக்கு 500 கிலோ!

சாகுபடி முறைகளைச் சொன்ன கருணாநிதி, ''ஒரு ஏக்கர்ல சராசரியா 500 கிலோ சிட்டஞ்சாமை கிடைக்கும். ஒரு கிலோ 24 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல... 12 ஆயிரம் ரூபாய் கிடைச்சிது. உழவு, களை எடுப்பு, அறுவடைனு எல்லா செலவும் போக... 7 ஆயிரம் ரூபாய் லாபமாக நிக்கும். இந்த லாபம் குறைவுதான். ஆனா, இயற்கையான முறையில விளையற தால ஏகப்பட்ட நன்மைகள் கிடைச்சிடும். மூணு மாசத்துல போகம் முடிஞ்சுடறதால அதுக்கடுத்து பேய் எள், கொள்ளு மாதிரியான பயிர்களை சாகுபடி செஞ்சு, இன்னொரு லாபமும் பாத்துடலாம்'' என்றார்.

தொடர்புக்கு, கருணாநிதி,
செல்போன்: 76394-13322
தொடர்புக்கு,
பூபதியம்மாள்,
செல்போன்: 95857-11433