ஆவணம்

விவசாயிகள், சுற்றுச்சூழலியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும்எதிர்ப்பையும் மீறி, காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படவிருக்கிறது, மீத்தேன் திட்டம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்... 'பாலைவனமாகும் காவிரி டெல்டா-மீத்தேன்’ என்ற தலைப்பில், மே 10 அன்று ஒரு ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மே 17 இயக்கம் செய்திருந்தது!

'தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு விளைச்சல் தருபவை டெல்டா பகுதிகள். இந்த நிலத்தில் 6 ஆயிரம் அடி ஆழத்துக்கு, 2 ஆயிரம் குழிகள் தோண்டப்படவுள்ளன. உயிர் ஆதாரமான நிலத்தடி நீரை வெளியேற்றி, ரசாயனக் கலவையை உள்ளே செலுத்தி பாறைகளைப் பிளந்து மீத்தேன் வாயு எடுக்கப்படவிருக்கிறது. ரசாயனக் கழிவுகள் நிலத்தில் கொட்டப்பட இருக்கின்றன. இந்த ரசாயனங்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை. இதை முறையாகப் பாதுகாக்க வழிமுறைகள் உள்ளன. ஆனால், தெருவில் கழிவுநீர்க் குழாய்களையே சரிசெய்ய முடியாத நம்முடைய அரசாங்கம், இதையெல்லாம் செய்யுமா?' என்ற கேள்விகளை எழுப்பும் இந்த ஆவணப்படம்,

'ஒரு குழியிலிருந்து மீத்தேன் எடுக்க, 4 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இதை வைத்து, 40 லட்சம் மக்களுக்கு ஓர் ஆண்டு முழுவதும் தினமும் 5 குடம் தண்ணீர் வழங்கலாம். இந்த அளவு தண்ணீர், காவிரியிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லா நதிகளிலிருந்தும் எடுக்கப்படும். இப்படி 2 ஆயிரம் குழிகளுக்கு 40 வருடங்களில் எவ்வளவு தண்ணீர் தேவை என்று எண்ணிப் பாருங்கள்!' என்று

நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

'இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மண் மலடாகும். நீர் அமிலமாகும். நன்னீரை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில், இது காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், மொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும் திட்டம்' என இந்தக் குறும்படம் சொல்லும் தகவல்கள் ஒவ் வொன்றும் அதிர்ச்சி ரகம்.

ஆவணப்படத்தின் இயக்குனரான மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சரவணன் தங்கப்பா பேசும்போது, ''மீத்தேன் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வீடியோ பதிவு செய்யச் சென்றபோது அதிகாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அதையும் மீறி, 9 மாதங்களாக கடும் பணியாற்றி, இதை வெளியிட்டி ருக்கிறோம்'' என்று சொன் னார்!

ஆட்சியாளர்கள் ஆவன செயவார்களா?!